Published:Updated:

LKG - சினிமா விமர்சனம்

LKG - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
LKG - சினிமா விமர்சனம்

LKG - சினிமா விமர்சனம்

ன்றைய தேதிக்கு தமிழகத்தின் முதல்வராக, அரசியலில் பி.ஹெச்.டி எல்லாம் தேவையில்லை. ப்ரீ.கே.ஜியே போதும் என்கிறது இந்த எல்.கே.ஜி! 

LKG - சினிமா விமர்சனம்

ஆர்.ஜே.பாலாஜிக்கு நடிக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. வெறுமனே கவுன்டர் காமெடி வசனங்களை அள்ளி வீசினால் போதும். சில இடங்களில் சிக்ஸர்; சில இடங்களில் நமத்துப்போன மிக்ஸர். ஆனாலும் நடப்பு அரசியல் நிகழ்வுகளை நையாண்டி செய்யும் துணிச்சலுக்காக பாலாஜிக்கு வாழ்த்துகள், இயக்குநர் கே.ஆர்.பிரபுவுக்கும்தான். ப்ரியா ஆனந்த், ஸ்டார் ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட்டைப்போல பட்டும் படாமல் சிரிக்கும் ஒருவித முறைப்பான முக பாவனையிலேயே வலம் வருகிறார். நாஞ்சில் சம்பத்தைத் ‘தோற்றுப்போன அரசியல்வாதி’யாகவே நடிக்கவைத்து, அவர் இருந்த கட்சியையே கலாய்த்திருப்பது ரசிக்கவைத்திருக்கிறது. மற்றபடி சம்பத்துக்கு நடிக்க வரட்டும், காத்திருப்போம்! ராம்குமார், ஜே. கே. ரித்தீஷ், மயில்சாமி போன்றவர்கள் ஓரளவுக்கு நடித்திருக்கிறார்கள்.  

LKG - சினிமா விமர்சனம்

லியோன் ஜேம்ஸின் உழைப்பு ‘எத்தனைக் காலம்தான்’ ரீமிக்ஸ் பாடலில் மட்டும்தான் தெரிகிறது.  ‘காமெடிப் படம்தானே’ என்றில்லாமல், சில ஷாட்களில் சிக்ஸர் அடித்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் விது அய்யண்ணா. திரைக்கதையே ஆங்காங்கே  ஜம்ப் ஆவதால், படத்தொகுப்பும் அப்படியே. 

LKG - சினிமா விமர்சனம்

முதல்பாதியில் இருந்த கொஞ்சநஞ்ச லாஜிக்கும் இரண்டாம் பாதியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களைப்போல் தடுமாறி நிற்கிறது. திருக்குறள் பேசுவதைக் கிண்டலடிப்பது, கட்சிப் பத்திரிகையின் பெயரில் ஆபாச வசனம், ஆழமான அரசியல் பார்வை இல்லாத மேலோட்டமான புத்திமதிகள் என ஏகப்பட்ட குறைகள் எல்.கே.ஜி-யில் உண்டு.   

LKG - சினிமா விமர்சனம்

கட்சிகளின் செயற்பாடுகளைத் தீர்மானிப்பவர்களாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மாறியிருப்பதைச் சொன்ன வகையில் நச். ஆனால், படித்தவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்கிறார்களா, சமூகவலை தளங்களைப் பாராட்டுகிறார்களா, கிண்டலடிக்கிறார்களா, ராம்ராஜ் பாண்டியனை ஏன் காமராஜரோடு ஒப்பிடுகிறார்கள் என்று அவர்களும் குழம்பி நம்மையும் குழப்பியிருக்கிறார்கள்.

- விகடன் விமர்சனக் குழு