Published:Updated:

`அவெஞ்சர்ஸ்’ முதல் `ஜோம்பிலேண்ட்’ வரை... இந்த வருடம் வெளியாகும் ஹாலிவுட் படங்கள்!' - பார்ட் 1

`அவெஞ்சர்ஸ்’ முதல் `ஜோம்பிலேண்ட்’ வரை... இந்த வருடம் வெளியாகும் ஹாலிவுட் படங்கள்!' - பார்ட் 1

`அவெஞ்சர்ஸ்’ முதல் `ஜோம்பிலேண்ட்’ வரை... இந்த வருடம் வெளியாகும் ஹாலிவுட் படங்கள் பற்றிய தொகுப்பு.

Published:Updated:

`அவெஞ்சர்ஸ்’ முதல் `ஜோம்பிலேண்ட்’ வரை... இந்த வருடம் வெளியாகும் ஹாலிவுட் படங்கள்!' - பார்ட் 1

`அவெஞ்சர்ஸ்’ முதல் `ஜோம்பிலேண்ட்’ வரை... இந்த வருடம் வெளியாகும் ஹாலிவுட் படங்கள் பற்றிய தொகுப்பு.

`அவெஞ்சர்ஸ்’ முதல் `ஜோம்பிலேண்ட்’ வரை... இந்த வருடம் வெளியாகும் ஹாலிவுட் படங்கள்!' - பார்ட் 1

ஹாலிவுட் சினிமா பிரியர்களுக்கு இந்த வருடம் செம வேட்டை காத்திருக்கிறது. கடந்த வருடம் வரை சில படங்கள், சில கேள்விகளை எழுப்பியது. அது அத்தனைக்கும் இந்த வருடம் விடை கிடைத்துவிடும். ஆக்‌ஷன், காமெடி, ஃபேன்டஸி, டிராமா, அனிமேஷன் என ஹாலிவுட்டில் கலந்துகட்டி படங்கள் வெளிவர இருக்கிறது. முக்கியமாக, டி.வி சீரியஸ் வரிசையில் மாபெறும் வரவேற்பைப் பெற்ற 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரியஸும் வெளிவருகிறது. அதேபோல, முக்கியமான சில படங்களும் இந்த வருடம் வரவிருக்கிறது. இதோ, எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஹாலிவுட் படங்கள்.  

Avengers 4 : Endgame :

மார்வெல்லின் ஓர் முக்கியமான படைப்பு, `அவெஞ்சர்ஸ்.’ இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்திருக்கும் நிலையில், இந்த வருடம் ஏப்ரல் மாதம் நான்காம் பகுதி வெளிவர இருக்கிறது. `கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்' என்பதுபோல், கடந்த வருடத்தின் முக்கியக் கேள்வி, `தானோஸ் மற்ற சூப்பர் ஹீரோக்களை என்ன செய்தார்' என்பதுதான். அதற்கான விடையையும் தீர்வையும் சொல்கிறது அவெஞ்சர்ஸின் நான்காம் பாகமான 'எண்ட்கேம்'. 'அயர்ன் மேனி'ல் ஆரம்பித்து, 'கேப்டன் அமெரிக்கா', 'தோர்', 'ஹல்க்', 'ஸ்பைடர்மேன்', 'ப்ளாக் பேந்தர்', 'டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்' என மார்வெல்லின் முக்கிய சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். 'இன்ஃபினிட்டி வார்' பாகத்தை இயக்கிய அந்தோனி ரூஸோ மற்றும் ஜோ ரூஸோ இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்கள். படம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Captain Marvel :

உலகம் முழுக்கவுள்ள சூப்பர் ஹீரோ பிரியர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படம். ‘கேப்டன் மார்வெல்’ என்ற பெண் சூப்பர் ஹீரோவின் முதல் படம். ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ படத்தில் பாதி உலகம் அழிந்துவிட்டது. இன்ஃபினிட்டி வாரின் இறுதியில் கேப்டன் மார்வெல்லை நிக் ஃப்யூரி உதவிக்கு அழைப்பதுபோல காட்சி அமைந்திருக்கும். உலகை மீட்க வரப்போகும் கேப்டன் மார்வெல்லின் முன்கதை இது. இரண்டு ஏலியன் இனங்கள் பூமியில் சண்டையிடத் தொடங்க, அதன் நடுவே மாட்டிக்கொண்ட கேரோல் டேன்வர்ஸ், தான் யார் என்பதை உணர்கிறாள். காமிக்ஸ் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மார்வெல்லின் பைனரி ஃபார்ம் (Binary Form) டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. அதீத சக்தி படைத்த கேப்டன் மார்வெல் ஃபுல் ஃபார்மில் இருக்கும்போது ஓர் அணு உலைக்குச் சமம் என்பது காமிக்ஸ் ரசிகர்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும். ரூம் படத்துக்காக ஆஸ்கர் விருது வென்ற ப்ரீ லார்சன், கேப்டன் மார்வெல்லாக மிரட்ட இருக்கிறார். 

Once upon a time in Hollywood :

கடந்த 30 ஆண்டுகளில் சினிமாவை நேசிக்கும் அனைவருக்கும் பிரியமான ஒரு பெயர் என்றால், அது அமெரிக்க இயக்குநர் குவென்டின் டொரன்டினாவின் பெயர்தான். ஆனால், 10 படங்களோடு தன் திரையுலக வாழ்வுக்கு குட்பை சொல்வதாக அறிவித்திருக்கிறார் இந்த மனிதர். அதில் இது ஒன்பதாவது படம். ஜாங்கோ அன்செய்ண்டு படத்தின் டிகாப்ரியோ, இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படத்தின் பிராட் பிட் இருவரும்தான் இந்தப் படத்தின் ஹீரோக்கள். 1960-களில் மேன்சன் ஃபேமிலி என்னும் கல்ட் குழு பிரபல இயக்குநர் ரோமன் பொலன்ஸ்கியின்  மனைவி ஷாரோன் டேட் மற்றும் சில பிரபலங்களை கொடூரமாகக் கொல்கின்றனர். படத்தில் டிவி நடிகராக டிகாப்ரியோவும் அவரது ஸ்டன்ட் டூப்பாகப் பிராட் பிட்டும் நடிக்க இருக்கிறார்கள். மறைந்த நடிகை ஷாரோன் டேட்டாக மார்கட் ராபி நடிக்கிறார். படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது.

John Wick : Chapter 3 - Parabellum :

மனதுக்குப் பிடித்த காரையும், தனக்கு நெருக்கமான நாயையும் அழித்ததால் பிறந்தவன்தான் இந்த ஜான் விக். `மேட்ரிக்ஸ்’ படப் புகழான கீனு ரீவ்ஸ்தான் இந்தப் படத்தின் கதாநாயகன். மனைவியை இழந்த பின் வெளியுலகத்தில் தலைகாட்டாமல் வாழ்ந்து வரும் தாதாவை வம்புக்கு இழுக்கிறார் ஒரு பெரிய இடத்து வாரிசு. அவரைப் பழி தீர்த்ததும் இவரைப் பின் தொடர்கிறது பல மாஃபியா கும்பல். எதிர்த்து வரும் அனைவரையும் எதிர்கொள்ளும் ஜான் விக் செல்லும் பாதை, துப்பாக்கியும் ரத்தமுமாகப் படர்ந்திருக்கிறது. படத்தை எங்கு எடுத்துப் பார்த்தாலும் வன்முறை உச்சம் தொட்டிருக்கும். இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த வருடம் மே மாதம் வெளியாக இருக்கிறது. 

Spiderman far from home :

மார்வெல்லின் மற்றுமொரு படைப்பு, `ஸ்பைடர்மேன்.’ ஒவ்வொரு சூப்பர் ஹீரோக்களுக்கும் ஒவ்வொரு பின்புலக் கதை இருக்கும். அவர்கள் எல்லாம் சங்கமிக்கும் இடம்தான், `அவெஞ்சர்ஸ்.’ இதுதான் 'மார்வெல்'லின் ஸ்டைல். இந்த வரிசையில், ஸ்பைடர்மேனை அவெஞ்சர்ஸின் கதைக்குள் புகுத்துவதற்காக அந்தக் கதாபாத்திரத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது, மார்வெல். மறைந்த காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் ஸ்டேன்லிக்கு மிகவும் பிடித்த ஸ்பைடர்மேன் ஹீரோ டாம் ஹோலண்டுதான். ஏனெனில், ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங்கில் வரும் டாம் ஹோலாண்டின் வயதுக் கதாபாத்திரத்தைத்தான் (15 வயது) ஸ்டேன் லீ மனதில் வைத்து ஸ்பைடர்மேனை உருவாக்கினார். முதல் பாகமாக ஹோம்கம்மிங் 150 மில்லியன் டாலர் செலவு செய்து 900 மில்லியன் டாலர்கள் ஈட்டி மார்வெல்லுக்கு 2017-ன் ஜாக்பாட்டை அளித்தது. அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வாரில் மாயமான ஸ்பைடர்மேன் இதில் எப்படி நடிப்பார் என யோசிக்கிறீர்களா. அவெஞ்சர்ஸ் : எண்டு கேம் படத்தின் காலகட்டத்துக்குப் பின்னர் தான் ஸ்பைடர்மேன் : ஃபார் ஃப்ரம் ஹோம் படத்தின் காட்சிகளையே எடுத்துவருகிறார்கள். ஜூலை 5-ம் தேதி ஸ்பைடர்மேன் : ஃபார் ஃப்ரம் ஹோம் வெளியாவது ஒருபுறம் என்றால், அப்போ அவெஞ்சர்ஸ் ஸ்பைடர்மேன் மீண்டும் வந்துடுவார்ல என ஊரறிந்த ரகசியத்தை உருவாக்கி வைத்திருக்கிறது மார்வெல்.

Zombieland 2 : 

இந்தப் படத்தின் முதல் பாகம் 2009-ம் ஆண்டு வெளியானது. ஜோம்பிக்களை வைத்து டெரராக மட்டும் எடுக்காமல் கதையையும் திரைக்கதையும் படு காமெடியாக நகர்த்தியிருப்பார் இயக்குநர் ரூபென் ஃப்லெயிச்சர். அதுதான் இந்தப் படத்தின் ஸ்பெஷல். வூடி ஹாரல்சன், ஜெஸ்ஸி ஈசன்பெர்க், எம்மா ஸ்டோன் போன்ற முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருப்பார்கள். அதே இயக்குநர், அதே நடிகர்கள் என இவர்களது கூட்டணி மீண்டும் இந்த வருடம் இணைந்திருக்கிறது. இந்தப் படத்த்துக்கு 'ஜோம்பிலேண்ட் : டபுள் டேப்' என்ற டைட்டில் வைத்துள்ளனர். அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. 

Fast and Furious presents : Hobbs And Shaw : 

ஹாலிவுட்டின் சீக்குவெல் படங்களில் சக்கைபோடுபோட்ட படம், `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்.’ இந்த சீரியஸின் முதல் பாகம் 2001-ல் வெளியானது. பால் வாக்கர், வின் டீசல், ஜோர்டானா ப்ரியூஸ்டர், மிட்ச்சல் ரோட்ரீகஸ் போன்ற நடிகர்கள் மட்டும்தான் அந்தப் படத்தில் நடித்தனர். 38 மில்லயனில் தயாரான இப்படம், 207 மில்லியன் வசூலைக் குவித்தது. இதைத் தொடர்ந்து வெளிவந்த அனைத்து பாகங்களும் செம ஹிட். இந்த வருடம் 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' பேனரில் 'ஹாப்ஸ் அண்ட் ஷா' எனும் பாகம் வெளிவர இருக்கிறது. 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' படத்தில் இடம்பெற்றிருக்கும் டுவெயின் ஜான்ஸன் மற்றும் ஜேசன் ஸ்டாத்தம்... அதாவது லூக் ஹாப்ஸ் மற்றும் ஷா ஆகியோரின் கதாபாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. மல்யுத்த வீரர் ரோமன் ரெயின்ஸ் இந்தப் படத்தில் டுவெயின் ஜான்ஸனின் தம்பியாக நடித்திருக்கிறார். படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.