சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

மீபத்தில் இந்தியில் வெளியான `கல்லி பாய்’ சூப்பர் ஹிட் அடித்ததில் இயக்குநர் ஜோயா அக்தர் செம மகிழ்ச்சியில் இருக்கிறார். “இது படக்குழுவினரின் கூட்டு உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. அதிலும் ரன்வீரின் உழைப்பால்தான் இது சாத்தியமானது. ரன்வீர் இல்லையென்றால் இந்தப் படத்தையே கைவிட்டிருப்பேன்’’ என ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார். கல்லிபாய் படத்தில் நடித்த ரன்வீர், அலியாபட் இருவரையும் தாண்டி ‘எம்சி ஷேர்’ஆக நடித்த புதுமுகம் சித்தாந்த் சதுர்வேதிக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். நாயகனாக நடிக்கவும் வாய்ப்புகள் குவிகிறதாம். சித்தாந்த் டயம் ஆகயா!

இன்பாக்ஸ்

ஸ்கர் நாயகன் ரமி மலேக் அடுத்த அதிரடிக்கு ரெடி. ‘போஹிமியன் ரேப்ஸோடி’ படத்தில் ப்ரெடி மெர்க்குரியாக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த ஆண்டின் ஆஸ்கர் விருது வென்ற ரமி மலேக், அடுத்து ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வில்லனாகிறார். டேனியல் க்ரெய்க் நடிக்கும் பாண்ட் 25 படத்தில்தான் இந்தத் தரமான சம்பவம் நடக்கவிருக்கிறது! பாண்ட் பாய்ஸ்!

இன்பாக்ஸ்

தெலுங்கில் நாகார்ஜுனா நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியாகி செம ஹிட்டான   ‘மன்மதுடு’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முனைப்பில் இருக்கிறார், நாகார்ஜுனா. இந்தப் படத்தை சின்மயியின் கணவர் ராகுல் இயக்குகிறார். கேமியோ ரோல் ஒன்றில் சமந்தா நடிக்கவுள்ளார். திருமணத்திற்குப் பிறகு தன் மாமனாருடன் சமந்தா நடிக்கும் முதல் படம் இதுவாம். குடும்பப் படம்!

இன்பாக்ஸ்

படம்: அருண் டைட்டன்

லகப் பணக்காரர்கள் பட்டியலை The Hurun Global Rich List 2019 வெளியிட்டுள்ளது.  அமேசானின் ஜெப் பெசாஸ் முதல் இடத்தில் நீடிக்கிறார். இந்தப்பட்டியலில் 4 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளோடு பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறார் இந்தியாவின் முகேஷ் அம்பானி. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, பங்குச்சந்தை சரிவு முதலான காரணங்களால் இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. 2018-ல் 2,694-ஆக இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 2,470-ஆகக் குறைந்துவிட்டதாம். அடுத்து அம்பானிக்குப் பொதுப்பிரிவில் இட ஒதுக்கீடு கொடுப்பாங்களோ?

இன்பாக்ஸ்

மியூஸிக்கல் படமான ‘ஏ ஸ்டார் ஈஸ் பார்ன்’- ல் இணைந்து நடித்த ஜோடி, ப்ராட் கூப்பர் - லேடி காகா. படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆஸ்கர் விழாவில் இருவரும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்த ரீல் ஜோடிக்கு நிஜமாகவே காதல் மலர்ந்துவிட்டது, டேட்டிங் பண்ணுகிறார்கள் என மீடியா அலற... “அதெல்லாம் சும்மா நடிப்பு, படத்தில் எங்களுக்குள் கெமிஸ்ட்ரி நன்றாக வரவேண்டும் என்பதற்காக நாங்கள் உண்மையான காதலர்களைப்போலவே வெளியேயும் நடந்துகொண்டோம்’’ எனச் சொல்லி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் லேடி காகா. அத்தனையும் நடிப்பா காகா!

ழு சீசன்களாகக் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ சீரிஸின் கடைசி சீஸன் ஏப்ரலில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. அதற்கான பீவர் ஏற்கெனவே சோசியல் மீடியாப்பக்கம் தொடங்கிவிட்டது. என்னாகுமோ ஏதாகுமோ என விவாதங்கள் பரபரப்பாக நடக்க, “இந்த முறை ஏகப்பட்ட அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. கடைசி சீஸன் என்பதால் பிரமாண்டத்திற்கும் பஞ்சமிருக்காது’’ என்று சொல்லியிருக்கிறார் டேனரிஸ்... இல்லை இல்லை, எமிலியா கிளார்க். செம கேம் காத்திருக்கு!

விராட் கோலியின் காதல்களில் ஒன்றான அவரின் ஆடி கார் இப்போது போலீஸ் ஸ்டேஷனில். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடி R8 என்னும் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார் விராட். இந்தக் காரில்தான் விராட் கோலி, ரேஸ் டிராக்கில் ரேஸ் ஓட்டுவதும், நண்பர்களுடன் பார்ட்டிக்குப் போவதுமாக இருந்தார். சுமார் 3 கோடி ரூபாய் விலை கொண்ட இந்தக் காரை 60 லட்சம் ரூபாய்க்கு, கடந்த ஆண்டு நண்பர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார் கோலி. அந்தக் காரை வாங்கிய நண்பர் கால் சென்டர் ஊழல் புகாரில் சிக்க, போலீஸ் காரைத் தூக்கிக்கொண்டுபோய் போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்கிறது. ஸ்போர்ட்ஸ் கார் பரிதாபங்கள்!

‘பத்மாவத்’ படத்துக்குப் பிறகு திருமணத்தில் பிஸியாகிவிட்ட தீபிகா படுகோன் தன் அடுத்த படத்திற்காக சைலன்ட் மோடில் தயாராகிக்கொண்டிருக்கிறார். ஆசிட் அட்டாக்கில் சிக்கி மீண்டுவந்த லட்சுமி அகர்வாலின் பயோபிக்கில் நடிக்கவிருக்கிறார். படத்தில் மூன்று வெவ்வேறு கெட் அப்களில் தோன்ற இருக்கிறார் தீபிகா. அதற்கு முன்பு லட்சுமியோடு சில மாதங்கள் கூடவே இருந்து அவருடைய வாழ்க்கையை உள்வாங்கிக்கொண்டு நடிக்கவிருக்கிறாராம். அநேகமாக மே மாதம் படப்பிடிப்பு தொடங்குமாம். தீபிகான்னா அதிரடி!

பிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி மீண்ட வரலாற்று நிகழ்வைப் படமாகப் பதிவுசெய்ய நினைத்த இந்தித் திரைப்படத்துறையினர் ‘பாலகோட்’, ‘அபிநந்தன்’, ‘சர்ஜிக்கல்ஸ் ஸ்டிரைக் 2.0’, ‘புல்வாமா அட்டாக்ஸ்’, ‘ஏடிஎஸ் - ஒன் மேன் ஷோ’ உள்ளிட்ட தலைப்புகளைப் பதிவு செய்திருக்கின்றனர். எல்லையில் ராணுவவீரர்கள்...

சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவோடு இணைந்து ‘மேஜர்’ என்கிற படத்தைத் தயாரிக்கவிருக்கிறது. இது 26/11 தாக்குதலில் வீரதீரமாகப் போராடி பலபேருடைய உயிர்களைக் காத்த என்எஸ்ஜி கமாண்டோ சந்தீப் உன்னிகிருஷ்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்டு தயாராகவிருக்கிறது. இந்தப்படத்தில் ஹீரோ மகேஷ்பாபு கிடையாது. ஷணம், கூடாச்சாரி என வித்தியாசமான படங்களில் நடித்து கவனம் பெற்ற அதிவி ஷேஸ். தேசபக்தி சீஸன்!

விஜய் சேதுபதி வின்டேஜ் பைக்குகளின் பிரியர். வீட்டில் தனக்குப் பிடித்தமான 1974 மாடல் ஜாவா, யமஹா ஆர்எஸ்10, ட்ரையம்ப் போன்னேவில்லே கிளாஸில் என விதவிதமான பைக்குகள் வைத்திருக்கிறார். அவருடைய கலெக்ஷனில் சமீபத்திய வரவு பிஎம்டபிள்யூ ஜி3 டென்ஜிஎஸ் என்ற நாலுலட்ச ரூபாய் விலையுள்ள பைக். வண்டிக்கு 1979 என்று தன்னுடைய பிறந்த ஆண்டின் எண்ணையே வாங்கியிருக்கிறார். ஹேப்பி அண்ணாச்சி!

இன்பாக்ஸ்

 ‘சாய்ரட்’ இந்தி ரீமேக்கான ‘தடக்’ படத்தை அடுத்து தனது இரண்டாவது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்ரீதேவியின் மூத்த மகள்  ஜான்வி கபூர். இந்தியாவின் முதல் பெண் போர் விமானி குன்ஜன் சக்ஸேனாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் அது. குன்ஜன், இந்திய விமானப் படை சார்பில் 1999 கார்கில் போரில் ஈடுப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழுக்கு வா மயிலுக்குட்டி!