
வலைபாயுதே

facebook.com/கே.என்.சிவராமன்
மாநகரப் பேருந்து அல்லது மின்சார ரயிலில் தான் தினமும் அலுவலகம் செல்வதும் திரும்புவதும்.
ஜெயலலிதா காலத்தில் வாங்கிப் புழக்கத்தில் விடப்பட்ட பேருந்துகள் அனைத்தும் முட்டாள்களால் வடிவமைக்கப்பட்டவை. ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களால் மட்டுமே அமர முடியும். அப்படியும் கால் மூட்டு முந்தைய சீட்டில் இடிக்கும். எனில் நடுத்தர மற்றும் தாட்டியான உடல்வாகு கொண்டவர்கள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. இப்போது எடப்பாடி ஆட்சியில் புதிதாகப் பேருந்துகளை வாங்கி, சிவப்பு வர்ணம் பூசி பல்வேறு தடங்களில் ஓட விட்டிருக்கிறார்கள்.
இன்று மாலைதான் அப்புதிய பேருந்துகளில் ஒன்றில் ஏறும் வாய்ப்பு கிடைத்தது. இருக்கைகள் போதுமான அகலத்துடனும் கால் மூட்டு இடிக்காத விதத்திலும் இருக்கின்றன. தாட்டியான உடல்வாகு கொண்டவர்களும் சிரமமின்றி அமரலாம். வடிவமைத்தவர்கள் மனிதநேயம் மிக்கவர்கள். ஆனால், இந்தப் பேருந்துகளை வாங்கி மக்கள் பயன்பாட்டுக்கு அளித்திருக்கிறதே மாநில அரசு... எடுத்துச் சொல்லி வாங்க வைத்திருக்கிறார்களே போக்குவரத்துத் துறை அதிகாரிகள்... அவர்கள் அனைவரும் சாடிஸ்டுகள்.
வேறெப்படி அழைக்க? குரூர மனம் படைத்தவர்களால் மட்டுமே தொலைதூரப் பயணத்துக்காக வடிவமைக்கப் பட்ட இப்பேருந்துகளை மாநகர வழித்தடங்களில் இயக்க அனுமதி வழங்கியிருக்க முடியும். நடத்துநருக்கு இருக்கையே இல்லை. 8 மணி நேர வேலை. அத்தனை நேரமும் அவர் நிற்கத்தான் வேண்டும்.

பார்த்ததும் பகீரென்று இருந்தது. பெரும்பாலான நடத்துநர்கள் 40 ப்ளஸ்களில் இருப்பவர்கள். பல்வேறு உடல் உபாதைகளுடன் வாழ்வதற்கான சாத்தியம் அதிகம். அதிர்ச்சியுடன் நடத்துநரிடம் கேட்டபோது, ‘முதல் ஆளா நீங்கதான் கேட்கறீங்க...’ என்றவர் ‘யூனியன்கூட கண்டுக்காம மௌனமா இருக்கு...’ என்றார்.
நடைமுறையிலிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறோம்? வெனிசுலா குறித்துப் பக்கம் பக்கமாக முகநூலில் பேசும் கம்யூனிஸ்ட்டுகளும், புரட்சியே எங்கள் நோக்கம் என்று கர்ஜிக்கும் மாலெ அமைப்பினரும் இதுகுறித்து இதுவரை பேசியதாகத் தெரியவில்லை. ஊடகங்களில் விவாதப் பொருளாகவும் இது மாறவில்லை.
கண்களுக்கு முன்பாக நடப்பதைப் பார்க்காமல் ஆராயாமல் பேசாமல் எங்கோ நடப்பதைக் குறித்துப் பக்கம் பக்கமாக விளக்கிக்கொண்டிருக்கிறோம்.
facebook.com/பொம்மையா முருகன்
இரண்டாம் கலைஞரே இப்பவரைக்கும் கோலம் மட்டும்தான் போட்டுட்டு இருக்கிறாரு... ஆனா அதுக்குள்ள நாலாம் கலைஞர உள்ளே கொண்டுவந்துட்டாங்க...

facebook.com/ Bogan Sankar
சுமார் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஒன்று மற்றொன்றாக மாறிவிடுவதால் பல வருடங்களாகவே நான் தேசசேவை, தேசத் துரோகம் இரண்டையுமே செய்வதில்லை.
facebook.com/R Muthu Kumar
2016 முதல் புதிதாக எத்தனை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன, எத்தனை கடைகள் மூடப்பட்டன என்று தமிழக அரசிடம் கேட்கிறது நீதிமன்றம். கவலை வேண்டாம். டாக்டர் ராமதாஸின் அறிக்கையில் தரவுகள் கிடைக்கும்.

facebook.com/Sathii SK
ராணுவ ரகசியம் வேற.... ராணுவத்துக்கே தெரியாத ரகசியம் வேற.... நாம பேசுறது ரெண்டாவது ரகம்....

twitter.com/ MrElani
அபிநந்தன் அருவா மீசைல பழைய விஜயகாந்த் பட டயலாக்கெல்லாம் டிக் டொக்குவானுங்க...அத நினைச்சாதான் கேரா இருக்கு.
twitter.com/ RavikumarMGR
அந்த நகைக்கடை ஓனரை அடுத்த தமிழ்நாட்டு சிஎம்-மா ஆக்கிரலாம். நாம எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்குறோம்னு நல்லா புரிஞ்சுக்கிட்ட ஒரே ஒரு ஜீவன் அவர்தான்...

facebook.com/ Aadhavan Dheetchanya
அண்ணே, மதுரையிலிருந்து சென்னைக்கு ஜேசுதாஸ் ரயில் விட்டிருக்காங்களாமே.
- சைபர் ஸ்பைடர்