கட்டுரைகள்
Published:Updated:

ஸ்மார்ட் ஒர்க்... சிம்பிள் வெற்றி! - ஜூனியர் சூப்பர்ஸ்டார் அஷ்வந்த்

ஸ்மார்ட் ஒர்க்... சிம்பிள் வெற்றி! - ஜூனியர் சூப்பர்ஸ்டார் அஷ்வந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்மார்ட் ஒர்க்... சிம்பிள் வெற்றி! - ஜூனியர் சூப்பர்ஸ்டார் அஷ்வந்த்

ஸ்மார்ட் ஒர்க்... சிம்பிள் வெற்றி! - ஜூனியர் சூப்பர்ஸ்டார் அஷ்வந்த்

‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக, ஏகப்பட்ட ரசிகர்களின் மனங்களில் அன்பை அள்ளியவர், அஷ்வந்த். கேமரா முன்பு நின்றதும், அழகான எக்ஸ்பிரஷன்களில் வசனங்களை அள்ளித் தெளிக்கிறார். இந்த க்யூட் வாண்டு,  ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திலும் நடித்திருக்கிறார். அவருடன் ஒரு டீலக்ஸ் நிமிடங்கள்...

ஸ்மார்ட் ஒர்க்... சிம்பிள் வெற்றி! - ஜூனியர் சூப்பர்ஸ்டார் அஷ்வந்த்
ஸ்மார்ட் ஒர்க்... சிம்பிள் வெற்றி! - ஜூனியர் சூப்பர்ஸ்டார் அஷ்வந்த்

‘‘அஷ்வந்த் வீட்டில் இருந்தா அவன் சேட்டையைச் சமாளிக்க, போருக்குக் கிளம்பற மாதிரி எந்த நொடியும் தயாரா இருப்பேன்’’ என்று சிரிப்புடன் ஆரம்பிக்கிறார், அஷ்வந்தின் அம்மா அகிலா.

‘‘இரண்டாம் வகுப்பு படிக்கும் அஷ்வந்துக்கு நடிப்புன்னா அவ்வளவு ஆசை. டிவியைப் பார்த்து அதே மாதிரி நடிச்சுக் காட்டுவான். அதைப் பார்த்து, ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சிக்கு கூட்டிட்டுப் போனோம். அங்கே ஆரம்பிச்சதுதான் அஷ்வந்ந்தின் அதகளம்’’ என்கிறார் பெருமையுடன்.

ஸ்மார்ட் ஒர்க்... சிம்பிள் வெற்றி! - ஜூனியர் சூப்பர்ஸ்டார் அஷ்வந்த்
ஸ்மார்ட் ஒர்க்... சிம்பிள் வெற்றி! - ஜூனியர் சூப்பர்ஸ்டார் அஷ்வந்த்

அஷ்வந்தின் அப்பா அசோக்குமார், ‘‘எத்தனை ஷீட்டிங், பிஸி என இருந்தாலும் படிப்பிலும் க்யூட். குறும்புத்தனத்துடன்,  ஹார்ட் ஒர்க் பண்றதிலும் அஷ்வந்தை மிஞ்ச முடியாது’’  என்றார்.

‘‘அப்பா, அதை ஹார்டு ஒர்க்னு சொல்றதைவிட, ஸ்மார்ட் ஒர்க்னு சொல்லலாம். எதையும் புரிஞ்சு ஸ்மார்ட்டா செஞ்சா ஈஸிதான்’’ என்று ஸ்மார்ட்டாகப் பேச ஆரம்பித்தார் அஷ்வந்த்.

ஸ்மார்ட் ஒர்க்... சிம்பிள் வெற்றி! - ஜூனியர் சூப்பர்ஸ்டார் அஷ்வந்த்

‘‘மற்ற நடிகர்கள் மாதிரி நான் நடிக்கிறதைதானே நீங்க டிவியில பார்த்திருப்பீங்க. ஆனா, என் நடிப்பைப் பார்த்துட்டு ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் நான் பேசுற மாதிரி டயலாக் பேசி, என் முன்னாடி நடிச்சுக் காட்டுவாங்க. அவங்க எல்லாம் என் ரசிகர்களாம்’’ என்று அழகாக காலரை தூக்கி விட்டுக்கொள்கிறார் அஷ்வந்த்.

ஸ்மார்ட் ஒர்க்... சிம்பிள் வெற்றி! - ஜூனியர் சூப்பர்ஸ்டார் அஷ்வந்த்
ஸ்மார்ட் ஒர்க்... சிம்பிள் வெற்றி! - ஜூனியர் சூப்பர்ஸ்டார் அஷ்வந்த்

‘‘எனக்கு கார் பொம்மைகள் பிடிக்கும். அதனால, நிறைய பேர் எனக்கு கார் டாய் கிஃப்ட் பண்ணியிருக்காங்க. அவங்க கொடுத்ததுமே, என்னோட ஃபர்ஸ்ட் வேலை என்ன தெரியுமா? உடனடியாக பார்ட் பார்ட்டா கழற்றி, அதை எப்படிப் பண்ணியிருக்காங்கன்னு பார்த்துட்டு மறுபடியும் மாட்டிடுவேன். அதைப் பார்த்துட்டு, ரோபோட்டிக்ஸ் கிளாஸ்ல என்னை சேர்த்து விட்டார் அப்பா.  அங்கே செமையா சொல்லிக் கொடுக்கறாங்க’’ என்றார் துறுதுறுப்புடன்.

‘‘சினிமாவில் நடிக்கிறீங்களாமே...’’ என்று முடிக்கும் முன்பே...

ஸ்மார்ட் ஒர்க்... சிம்பிள் வெற்றி! - ஜூனியர் சூப்பர்ஸ்டார் அஷ்வந்த்
ஸ்மார்ட் ஒர்க்... சிம்பிள் வெற்றி! - ஜூனியர் சூப்பர்ஸ்டார் அஷ்வந்த்

‘‘எஸ்... எஸ்... பல படங்களில் நடிச்சிருக்கேன். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில், விஜய் சேதுபதி அங்கிளோடு சேர்ந்து கலக்கியிருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்ல சேது அங்கிளோடு ஜாலியா விளையாடுவேன். எனக்கு கிஃப்ட் வாங்கிக்கொடுத்திருக்கார். இப்படியே ஜாலியா நடிச்சுட்டே படிக்கணும். கிளாஸ்ல மிஸ் இருக்கும்போது ரொம்ப அமைதியா, நல்ல பையனா இருப்பேன். அவங்க அப்படிப் போனதும் மாஸ் பண்ண ஆரம்பிச்சிருவேன். அதுக்கு நான் மட்டுமே காரணமில்லே. என் ஃப்ரெண்ட்ஸ் என்கிற ரசிகர்கள் கேட்கறதுதான். சில சமயம் டீச்சர்ஸே கேட்பாங்கன்னா பார்த்துக்கங்களேன்’’ என்று சிரிக்கிறார் க்யூட் அஷ்வந்த்.

-வெ. வித்யா காயத்ரி

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்