அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

குப்பத்து ராஜா - சினிமா விமர்சனம்

குப்பத்து ராஜா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
குப்பத்து ராஜா - சினிமா விமர்சனம்

குப்பத்து ராஜா - சினிமா விமர்சனம்

னது குப்பத்தில் மர்மமான முறையில் நிகழும் சில மரணங்களின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து தர்ம அடி கொடுக்கிறார் இந்த `குப்பத்து ராஜா.’

குப்பத்து ராஜா - சினிமா விமர்சனம்

“படிப்படியா வர்றது, பதுங்கினு வர்றது, பாய்ஞ்சுனு வர்றது, ஃபாஸ்டா வந்துகினு ஃபாஸ்டா போறது, பன்ச் டயலாக் பேசுறது. இதெல்லாம் மேட்டரே இல்லை” என மூச்சிரைக்கப் பேசிவிட்டு “ஆல் ஏரியா டார்கெட், அண்ணன் பேர் ராக்கெட்” என பன்ச்சோடு முடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். துறுதுறுவெனத் திரியும் ஏரியா பையன் லுக்கில் ஷார்ப்பாக பொருந்திப் போகிறார். ஆனால், அந்த ஷார்ப்பையெல்லாம் மொக்கை பண்ணியிருக்கிறது திரைக்கதை. 

குப்பத்து ராஜா - சினிமா விமர்சனம்

“நான் ஒரு தபாதான் சொல்லுவேன். ஒவ்வொரு தபாவும் சொல்லினு இருக்க மாட்டேன்” எனும் வசனத்தையே ஒவ்வொரு தபாவும் சொல்லிக்கொண்டி ருக்கிறார் பார்த்திபன். எம்.ஜி.ராஜேந்திரன் கதாபாத்திரத்திற்கான நல்ல தேர்வு, நன்றாக நடித்துக்கொடுத்திருக்கிறார்.

ஹீரோயினாக, புதுமுகம் பாலக் லல்வானி. “இன்னாடா இன்னா” என உளவுத்துறை டி.ஐ.ஜியிடம் வடிவேலு பேசும் மாடுலேஷனிலேயே வசனம் பேசிக் கடுப்படிக்கிறார். லிப்- சிங்கே இல்லைங்ணா!

பிஸ்கோத்து ஆன்டியாக பூனம் பாஜ்வா, குழப்பமான பாத்திரத்தில் கவர்ச்சிகரமாக வந்துபோகிறார். எம்.எஸ்.பாஸ்கரும் பாவமான அப்பாவாக சோகம் காட்டுகிறார்.  நம்ம யோகிபாபுவுக்கு என்னதான் ஆச்சு... சிரிப்பே வரலப்பா!

குப்பத்து ராஜா - சினிமா விமர்சனம்தேவையில்லாத வெட்டிக்கதை எல்லாம் பேசிவிட்டு, தூங்கி எழுந்து, படத்தின் மையக்கதைக்குப் பொறுமையாக இன்டர்வெல் முடிந்து அரைமணி நேரம் கழித்து வருகிறார்கள். கதைக்கு அவசியமில்லாத கதாபாத்திரங்களை அள்ளிப்போட்டுக் கொண்டுபோக, ஒரு அரைபாடி லாரி தேவைப்படும். இவை போக நேராக மெயின் ரோடில் செல்லாமல் சந்து, பொந்து, இந்து இடுக்குகளில் எல்லாம் டேரா போடும் திரைக்கதைதான், `குப்பத்து ராஜா’வின் பெரும் பலவீனம்.

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும், கிரணின் கலை இயக்கமும் `குப்பத்து ராஜா’வை டெக்னிக்கலாகக் கொஞ்சம் தேற்றுகின்றன.  ஜி.வி.பிரகாஷின் இசையில், “எங்க வீட்ல” பாடல் மட்டும் பட்டாசு.  நடன அமைப்பாளராக அருமையான அவுட்புட்டைத் தந்திருக்கிறார் இயக்குநர் பாபா பாஸ்கர்.

மாஞ்சாவில் வலுவான திரைக்கதை மிஸ் ஆகிப்போனதால் டீல் ஆகிவிட்டது `குப்பத்து ராஜா’வின் காத்தாடி.

- விகடன் விமர்சனக் குழு