அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வெளிநாட்டு வேள்பாரி!

வெளிநாட்டு வேள்பாரி!
பிரீமியம் ஸ்டோரி
News
வெளிநாட்டு வேள்பாரி!

வெளிநாட்டு வேள்பாரி!

ரு வழியாக `#ForTheThrone’டா! ஆம், கேம் ஆஃப் த்ரோன்ஸ் முடியப்போகிறது பிரியமானவர்களே... `அப்படீனா என்னங்கய்யா...’ என்று கேட்பவரா நீங்கள். எட்டு ஆண்டுகள்... ஒரு தொடர்... ஒரு பேர் என்கிற அவார்டு கேட்டகரி பில்டப்புக்கு ஏற்ற அயல்நாட்டு வேள்பாரி இந்த ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொலைக்காட்சித் தொடர்.

ஐஎம்டிபி  தளத்தில் 14 லட்சம் பேர் கேம் ஆஃப் த்ரோன்ஸைச் சிறந்த தொடராகத் தேர்வு செய்திருக்கிறார்கள். எட்டு ஆண்டுகளாகக் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பித்துப்பிடித்து அலையவைத்த தொடர். ஏழு சீஸன்களுக்குப் பிறகு இந்த ஆண்டோடு முடிவுக்கு வரவிருக்கிறது.  அதுகுறித்த இந்த ‘சின்னத்திரை பாகுபலி’ பற்றிய சுவாரஸ்ய அப்டேட்டுகள் இங்கே. 

வெளிநாட்டு வேள்பாரி!
வெளிநாட்டு வேள்பாரி!

அரியணைகளின் கதை

வெஸ்டிரோஸ், எஸ்ஸோஸ் என்னும் இரு பெரும் ராஜ்ஜியங்கள். வெஸ்டிரோஸில் இருக்கும் சிறு சிறு குழுக்கள்தான் கேம் ஆஃப் த்ரோன்ஸின் அடிப்படை. பகையும் பாசமுமாக நிகழும் இவர்களது வாழ்வியலுக்குள் எழுகின்றன சகோதர யுத்தங்கள். கிங்ஸ் லேண்டிங் என்னும் ராஜ்ஜியத்தில் இருக்கும் அயர்ன் த்ரோன் என்னும் அரியணைக்கான போராக ஆரம்பிக்கும் இந்தக் கதை மெல்ல மெல்ல கொலைகளையும் துரோகங்களையும் குரோதங்களையும்  நம் கண் முன்னர் பட்டியலிட்டு, பிணங்களின் வழியே கதைகளை அடுக்குகிறது. பாரபட்சமின்றி நடக்கும் கொலைகளின் குவியல்கள் ஒரு கட்டத்துக்கு மேல், நம்மையும் அந்தச் சிவப்பு அமிலத்துக்குள் சுவாரஸ்யத்தோடு இழுக்கிறது. எண்ணிலடங்கா கதாபாத்திரங்களும், உறவு முடிச்சுகளும், சுவாரஸ்ய ஒன்லைனர்களும், கேம் ஆஃப்  த்ரோன்ஸை  மக்கள்  கொண்டாடக் காரணம்.

வெளிநாட்டு வேள்பாரி!

புத்தகம் சீரிஸ் ஆனது

‘ஏ சாங் ஆஃப் ஐஸ் அண்டு ஃபயர்’ புத்தகத் தொடரின் முதல் பாகத்தின் பெயர்தான் கேம் ஆஃப் த்ரோன்ஸ். 90-களில் இதை எழுதியவர் ஜார்ஜ்.ஆர்.ஆர்.மார்ட்டின்.

இப்போ பிரபலங்கள்!

முதல் சீஸனில் துக்கடா கதாபாத்திரங்களாக இருந்த சிலர் எல்லாம் இன்று ஹாலிவுட்டில் ஹிட் லிஸ்ட் நடிகர்கள். முதல் சீஸனில் சில எபிசோடுகள் தலைகாட்டிய ஜேஸன் மோமா (கல் த்ரோகா) இப்போது அக்வாமேனாகி உலகெங்கும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.  பீட்டர் டிங்க்ளேஜ் (டிரியன் லேனிஸ்டர்) அடுத்த பத்தாண்டுகளுக்கு கால்ஷீட் இல்லை என்கிற அளவுக்குப் பெரிய ஆள் ஆகிவிட்டார். சிறந்த துணை நடிகருக்கான எம்மி விருதுகளில் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாகப் பரிந்துரை செய்யப்பட்டுவருகிறார் டிங்க்லேஜ். சோஃபி டர்னர் (சான்சா ஸ்டார்க்) தான் இப்போதைய எக்ஸ்-மென் கதைகளின் நாயகி.

வெளிநாட்டு வேள்பாரி!

ஆவேச ரசிகர்கள்!

தொடரின் டைட்டில் கார்டில் தொடங்கி பல இடங்களில் காணப்படும் குறியீடுகளைத் தொகுத்துக் குவித்துவருகிறார்கள் ரசிகர்கள்.  தொலைக்காட்சித் தொடரின் கதை, புத்தகத்தில் இருக்கும் கதையிலிருந்து விலகி, சில ஆண்டுகள் ஆகிவிட்டன.  அங்கே உயிருடன் இருக்கும் சிலர், இங்கு அமரர் களாகிவிட்டார்கள். இன்னொரு பக்கம் மொத்தமாய் வரவேண்டிய ஏழு புத்தகங் களில் மார்ட்டின் இப்போது வரை ஐந்து புத்தகங்களை மட்டுமே கண்ணில் காட்டி யிருக்கிறார். ஏழாவது புத்தகத்தின் கதையை, லாபம் பார்ப்பதற்காக இரண்டு ஆண்டுத் தொடராக இழுத்து 7 புத்தகம் 8 சீஸன் என மாற்றியிருக்கிறார்.

வெளிநாட்டு வேள்பாரி!

ஆர்வக்கோளாறுகள்!

 சிலநேரங்களில் ரசிகர்கள் ஆர்வம் தாங்காமல் காட்சிகளை, ஏன், முழு எபிசோடையும் லீக் செய்யும் வைபவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அமெரிக்காவில் வெளியாகி ஒரு மணி நேரம் கழித்துதான் இந்தியாவில் வெளியாகும்.  கடந்த முறை வெளியான போது, பொறுமை காக்க முடியாமல் திருட்டு டோரன்ட் பக்கம் தாவினர் நெட்டிசன்ஸ். இன்று வரை இல்லீகல் டவுன்லோடுகளில் ஏழு ஆண்டுகளாக கேம் ஆஃப் த்ரோன்ஸ்தான் நம்பர் ஒன். அதனாலேயே இந்த முறை அமெரிக்காவில் வெளியாகும் அதே நேரத்தில் இந்தியாவிலும் வெளியாகும் எனச் சொல்லிவிட்டது HBO. 

வெளிநாட்டு வேள்பாரி!

சீரிஸ்குழுவோ தொடரின் முடிவு லீக் ஆவதைத் தவிர்க்க, பல க்ளைமேக்ஸ் காட்சிகளை எடுத்திருக்கிறார்களாம். இறுதி எது என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக் கிறார்கள். அரியணைகளின் ஆட்டத்தில் அடுத்து உருளப்போகும் அந்தப் பெரிய தலை யாருடையது?

காத்திருப்போம்! 

- கே.ஜி.கார்த்தி