சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

இறுதி யுத்தம் - அவெஞ்சர்ஸ்

இறுதி யுத்தம் - அவெஞ்சர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இறுதி யுத்தம் - அவெஞ்சர்ஸ்

இறுதி யுத்தம் - அவெஞ்சர்ஸ்

இறுதி யுத்தம் - அவெஞ்சர்ஸ்

ருவழியா தேனோஸுக்கான முடிவு நெருங்கிவிட்டது.

கடந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ படத்தில் தேனோஸின் மாயக்கற்களால் பல சூப்பர் ஹீரோக்கள் மாயமாகிவிட்டார்கள். அதிலும், ஸ்பைடர்மேன் மறையும்போது கண் கலங்காத சுட்டிகளே இல்லை. கிட்டத்தட்ட ‘தி அவெஞ்சர்ஸ்’ (2012) படத்தில் வந்த சூப்பர் ஹீரோக்கள் மட்டுமே தற்போது இருக்கிறார்கள்.  ஓராண்டு காலமாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு 3 மணி நேரத்துக்கு விருந்து படைக்கப்போகிறது எண்டு கேம். படத்தின் இறுதிக்காட்சியை உங்களால் யூகிக்கவே முடியாது. ஆனால், அதை அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள் என ட்விஸ்ட் கொடுக்கிறார் இயக்குநர் ஜோ ருஸ்ஸோ.

இறுதி யுத்தம் - அவெஞ்சர்ஸ்

‘இன்ஃபினிட்டி வார்’ வெளியான சில மாதங்களிலேயே ‘ஆன்ட் மேன்’ இரண்டாம் பாகம் வெளியானது. அதில், ஆன்ட் மேனைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் தேனோஸ் மூலம் மறைந்துவிடுவார்கள். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘கேப்டன் மார்வெல்’ திரைப்படம் மார்ச் மாதம் வெளியானது. படத்தின் இறுதியில் கேப்டன் மார்வெல், அவெஞ்சர்ஸ் அணியைச் சந்திப்பதாகப் படம் முடியும்.

அவெஞ்சர்ஸ் எண்டு கேம்:


படத்தின் கதை, டைம் டிராவலாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. மறைந்த கதாபாத்திரங்கள் எல்லாம் மீண்டும் வரும் என்கிறார்கள். டிரெய்லரில், ‘இன்ஃபினிட்டி வார்’ படத்தில் தோன்றாத ஹாக் ஐ, ஆன்ட் மேன் போன்றவர்களும்  தலைகாட்டுகிறார்கள். தோரும் கேப்டன் மார்வெல்லும் பேசிக்கொள்கிறார்கள். ஆக, இந்த சம்மர் லீவு சுட்டிகளுக்கு செம கொண்டாட்டம் என்பது உறுதி.

ஹாலிவுட் படங்களுக்குத் தமிழ் டப்பிங் ரசிகர்கள் அதிகம். எல்லாவற்றையும்  பெரிதாகச் செய்யும் மார்வெல் நிறுவனம், அயர்ன் மேனுக்காக விஜய் சேதுபதியைத் தமிழில் பேசவைத்திருக்கிறார்கள். படத்தின் ப்ரோமோ பாடலை, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடியிருக்கிறார். படத்தில் வரும் பிளாக் விடோ கதாபாத்திரத்தின் தமிழ் வசனங்களை ஆண்ட்ரியா பேசியிருக்கிறார். தமிழ் வசனங்களை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறார். 

ஆக, தமிழின் மெகா ஸ்டார்களுடன் வரப்போகும் சம்மர் ஸ்பெஷல் ட்ரீட்... எண்டு கேம்.

- கார்த்தி