சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இது அவெஞ்சர்ஸ் ஆட்டம்!

இது அவெஞ்சர்ஸ் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இது அவெஞ்சர்ஸ் ஆட்டம்!

இது அவெஞ்சர்ஸ் ஆட்டம்!

த்தாண்டுகளாக ஒரு படத்தின் இறுதி முடிவுக்காக எதிர்பார்ப்பை எகிறவைத்து, இப்போது வசூலில் கெத்து காட்டியிருக்கிறது மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்.

•  ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ தானோஸுக்கு, இந்த ‘எண்டு கேம்’ அயர்ன் மேனுக்கு’ - இதுதான் இந்த எண்டு கேம் படத்துக்கான ஒன்லைன்.

• ‘இன்ஃபினிட்டி வார்’ திரைப்படத்தின் இறுதியில் தானோஸின் ஒரு சொடுக்கில், பாதி உலகம் மறைந்துபோகிறது. பிளாக் பேந்தர், ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்டிரேஞ்ச், ஸ்கார்லெட் விட்ச் என, பல சூப்பர் ஹீரோக்களும் மறைந்து போகிறார்கள். அவெஞ்சர்ஸ் ’மேனேஜரான’ நிக் ஃப்யூரி அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல், கேப்டன் மார்வெலுக்கு சிக்னல் அனுப்பிவிட்டு மறைந்துபோகிறார். சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த நிலையில் படம் முடிய, “கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன் றார்?” என்னும் கேள்வியைவிட, காணாமற்போன சூப்பர்ஹீரோக்கள் எப்படி மீண்டும் வருவார்கள் என்னும் கேள்விதான் உலகம் முழுவதும் துளைத்தெடுத்தது. இதற்கு நடுவே ப்ரீ லார்சன் நடிப்பில் `கேப்டன் மார்வெல்’ திரைப்படமும் `ஆன்ட் மேன் & தி வாஸ்ப்’ திரைப்படமும்  வெளியாக, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார்கள் மார்வெல் மாணவர்கள். ஒருவழியாக இறுதி பாகத்துக்கான விடையை அவிழ்த்திருக்கிறார்கள் திரைக்கதை ஆசிரியர்கள். 

இது அவெஞ்சர்ஸ் ஆட்டம்!

• படத்தின் இறுதி ஒரு மணி நேர ஆசம் காட்சிகளுக்கான எமோஷன்களை மொத்தமாகத் தனதாக்கிக்கொள்கிறார்கள் படத்தின் இயக்குநர்களான ருஸ்ஸோ சகோதரர்கள்.

• டைம் டிராவல்தான் கதைக்களம் என்பது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது, ஆனால் அதை எப்படி சாத்தியப்படுத்தியிருக்கிறது என்பதில் தனித்து நிற்கிறது எண்டு கேம். பெரும்பாலான டைம் டிராவல் திரைப்படங்கள் ஒரே லாஜிக்தான். கடந்த காலத்தில் நீங்கள் ஒரு நிகழ்வை மாற்றினால், அது நிகழ்காலத்திலும் மாறிவிடும். ‘எண்டு கேம்’ படத்தில் இது அப் படியே உல்டா. ஏற்கெனவே நிகழ்ந்த விஷயங்கள் ஒரு டைம்லைன். தற்போது நாம் சென்று மாற்றும் கடந்தகால விஷயங்கள் வேறொரு டைம்லைன். இப்படி இரண்டு டைம்லைன்கள்.

• இந்த பாகத்தை இன்னும் பிரமாண்டமாக்க தமிழ்ப் பதிப்பில் அயர்ன் மேனுக்கு விஜய் சேதுபதியும், பிளாக் விடோவுக்கு ஆண்ட்ரியாவும் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் வசனங்களை எழுதியிருக்கிறார்.

• வெளியான முதல் வார இறுதியில், அவெஞ்சர்ஸ் எண்டு கேம் தொட்டிருக்கும் பாக்ஸ் ஆபீஸ், தானோஸ் லெவல் பாய்ச்சல். உலக அளவில் 1.2 பில்லியன் டாலரை ஈட்டியிருக்கிறது எண்டு கேம். ஜஸ்ட்  8300 கோடிகள்தான் சகோதரர்களே! 

• கூகுள் இந்தப் படத் திற்கென வித்தியாசமான ஒரு ஏற்பாட்டைச் செய்திருந்தது. Thanos என டைப் செய்து தேடினால், வலது பக்கத்தில் தோன்றும் கான்ட்லெட்டை (தானோஸ் கையில் இருக்கும் தங்க உறை) சொடுக்கினால், அடுத்து நிகழும் அனைத்துமே அற்புதங்கள் (நான் சாட்சி!)

• மார்வெல் சினிமாக்களும், டிசி சினிமாக் களுக்குமான பெரிய வேறுபாடே மார் வெல்லில் இருக்கும் காமெடிக் காட்சிகள்தான். இந்தப் படத்திலும் Quantum physics, The big lebowski, டெர்மினேட்டர், பேக் டூ தி ஃப்யூச்சர் போன்ற பலவற்றை நக்கல் அடித்திருக்கிறார்கள். காமெடி களுக்கு ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் பக்கா! 

இது அவெஞ்சர்ஸ் ஆட்டம்!

• மார்வெல் படம் கதையில்லாமல்கூட இருக்கும், ஆனால் அதன் பிதாமகன் ஸ்டான் லீயின் கேமியோ இல்லாமல் இருக்காது. ஸ்டான் லீ கடந்த ஆண்டு மறைந்துவிட்டார் என்றாலும், அவருக்கான காட்சிகளை முன்னரே எடுத்துவைத்துவிட்டார்கள். படத்தில் வரும் 1970களுக்கான டைம் டிராவல் காட்சிகளில் ஸ்டான் லீ தோன்றுகிறார். டிஜிட்டல் டீ-ஏஜிங் என்னும் தொழில்நுட்பத்தின் மூலம், அவரை அறுபது வயது நபராகக் காட்சிப்படுத்தி யிருக்கிறார்கள். சிறப்பு!

• படத்தின் டபுள்மாஸ் காட்சி... தானோஸ் “I am inevitable” என கர்ஜிக்க, கான்ட்லெட்டை அணியும் டோனி ஸ்டார்க், “I am Iron Man” என விரலைச் சொடுக்கவும், எழும் கைத்தட்டல் அடங்க சில நிமிடங்கள் ஆகின்றன. 

• அவெஞ்சர்ஸ் சீரிஸில் வரும் கதாநாயகர்கள் பெரும்பாலானவர்களுக்கு இதுதான் கடைசிப் படம் என்பதால், நாஸ்டால்ஜியாவாக எண்டு கிரெடிட்ஸில், அவர்களின் பெயர்களுடன் கையெழுத்தும் திரையில் தோன்றியது அழகு!

• தானோஸின் கதாபாத்திரம் முதல் பாகம் அளவுக்கு, இதில் அவ்வளவு சிறப்பாக இல்லை, ஹீரோக்களின் கையே ஓங்கியிருக்கிறது போன்ற நெகட்டிவ் விமர்சனங்கள் எழத்தான் செய்கின்றன. ஆனால், இரண்டு டஜன் ஹீரோக்கள், அவர்களுக்கான நாஸ்டால்ஜியா காட்சிகள், அவர்களுக்கான அதிரடிக் காட்சிகள், எமோஷனல் காட்சிகள் போன்றவற்றால்,  டிஸ்டிங்ஷன் அடிக்கிறது இந்த எண்டு கேம்.

• கடந்த 11 வருடங்களில் 23 சினிமாக்களை இதற்கு ஏற்றவாறு கட்டமைத்தி ருக்கிறது மார்வெல் குழு. 22 தானே என மார்வெல் ரசிகர்கள் கையைச் சொடுக்க வேண்டாம். 23வது படமான ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம், வரும் ஜூலை மாதம் வெளிவரவிருக்கிறது!

-கார்த்தி