சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஓவியா சொன்ன பொய்...

ஓவியா சொன்ன பொய்...
பிரீமியம் ஸ்டோரி
News
ஓவியா சொன்ன பொய்...

ஓவியா சொன்ன பொய்...

“என் பள்ளி நண்பன் சுகுமாரின் காதலி பெயர்தான், மகேஷ்வரி. அவன் ஒருநாள் ‘LC112’ன்னு எழுதி ‘இது என்னன்னு கண்டுபிடி’ன்னு எல்லோரை யும் கேட்டுட்டிருந்தான். யாருக்கும் தெரியலை. கடைசியா பார்த்தா, அது மகேஷ்னு வந்துச்சு. அதைத்தான் ‘களவாணி’ படத்துல வெச்சேன். ஆனா, அந்த ‘LC112’ இவ்ளோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்னு நினைக்கலை. அதேபோல, எங்க ஊர்ல கபடி பிளேயர் ஒருத்தர் அறிவழகன்னு இருந்தார். அவரை எல்லோரும் செல்லமா ‘அறிக்கி’ன்னுதான் கூப்பிடுவாங்க. விமல் கேரக்டருக்கு இதுதான் இன்ஸ்பிரேஷன்” என ‘களவாணி 2’ பற்றிப் பேசத் தொடங்குகிறார், இயக்குநர் சற்குணம்.

ஓவியா சொன்ன பொய்...

“ ‘களவாணி 2’ எடுக்கணும்னு நான் நினைக் கவே இல்லை. ஆனா சினிமாவுல இருக்கிற நண்பர்கள் ‘களவாணி’யை ரெண்டாவது பாகமா பண்ணுங்கன்னு கேட்க ஆரம்பிச்சுட் டாங்க. ஆனா, அதைத் தொடர்ச்சியா கொண்டுபோறதா, கேரக்டர்களை மட்டும் வெச்சு வேற கதை பண்றதான்னு குழப்பம் இருந்தது. அப்புறம், விமல், சரண்யா மேடம், ஓவியா, கஞ்சா கருப்பு இவங்க கேரக்டரை எல்லாம் அப்படியே வெச்சுட்டு, புதுக் கதைக்களத்தை உருவாக்க முடிவு பண்ணினோம்.”
 
“பல வருடங்கள் கழிச்சு அறிவழகன் - மகேஷ்வரி காம்போ இணைந்தது பற்றி?”

“ ‘களவாணி 2’ படம் பண்ணணும்னு நினைச்சப்போ நாங்க ஓவியாவை யோசிக்கலை. அந்த நேரத்துல ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில கலந்துகிட்டு, டாக் ஆஃப் தி டவுனா இருந்தாங்க. இருந்தும், இத்தனை வருடம் கழிச்சு அதேமாதிரி ஸ்கூல் பொண்ணா நடிக்க வைக்க முடியுமான்னு சந்தேகமும் இருந்தது. அப்புறம் இந்தக் கேரக்டர்ல சின்ன மாறுதல் பண்ணி, நடிச்சா ஓவியாதான்னு முடிவெடுத்தோம். விமலுக்கும் ஃபங்க் முடி, வெள்ளைச் சட்டை - வெள்ளை வேட்டி, யமகா பைக்... எல்லாம் கொடுத்துப் பார்த்தா, பத்து வருடம் குறைஞ்சது மாதிரி ஆகிட்டார். அறிக்கி - மகேஷ் இஸ் பேக்னு ஷூட் ஆரம்பிச்சுட்டோம்.

ஓவியா சொன்ன பொய்...

இதுல ஓவியா மகளிர் சுய உதவிக் குழுத் தலைவியா வர்றாங்க. முதல் பாகத்தில மேக்கப் போடணும்னு ஆசைப்பட்டுக்கிட்டே இருந்தாங்க. ஆனா, அந்தக் கேரக்டருக்கு மேக்கப் போடாம யதார்த்தமா இருக்கணும். இருந்தாலும், யாருக்கும் தெரியாம லோஷன் போட்டுக்கிட்டு வந்திடுவாங்க. கேமராமேன் ஓம் பிரகாஷ் சார் கரெக்டா கண்டுபிடிச்சுடுவார். ஆனா, ஓவியா கிட்ட இருந்து இல்லையே இல்லைன்னு பதில் வரும். ‘அந்தப் பொண்ணு மேக்கப் போடலைன்னு நிரூபிக்கச் சொல்லுங்க. நான் சினிமாவை விட்டே போயிடுறேன்’னுகூட சொல்லியிருக்கார். ரெண்டுபேருக்கும் வாக்குவாதம் நடக்கும். இந்தப் பாகத்துக்காக ஓவியாவுக்குக் கதை சொல்லும் போதே ‘இந்தக் கதையில நீங்க தாராளமா மேக்கப் போட்டுக்கலாம். யாருக்கும் தெரியாம மறைச்சு மறைச்சு மேக்கப் போடத் தேவையில்லை’ன்னு சொன்னேன். அவங்களுக்கு செம ஹாப்பி.”

“உள்ளாட்சித் தேர்தலை மையப்படுத்திக் கதை வைக்கக் காரணம்?”

“என் நண்பர் தாயன்பன் உள்ளாட்சித் தேர்தலை மையமா வெச்சு ஒரு கதை வெச்சி ருந்தார். எனக்கு இந்தக் களத்துல ‘களவாணி 2’ இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. நான் அவர்கிட்ட ‘இந்தக் களத்தை நான் பயன்படுத்திக்கிறேன். உங்களுக்கும் கிரெடிட் கொடுக்கிறேன். ரெண்டுபேரும் சேர்ந்து வொர்க் பண்ணலாம்’னு சொன்னேன். அவரும் ஓகே சொன்னார். நான் உள்ளாட்சித் தேர்தல்ல சுயேச்சையா நின்னு ஜெயிச்சிருக்கேன். அந்த அனுபவத்தை எல்லாம் சேர்த்து என் ஸ்டைல்ல ஜாலியான ஒரு படமா இது இருக்கும்.”

ஓவியா சொன்ன பொய்...

“உங்க படத்துல நடிச்ச ஆண்டனிக்கு ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. அவர்கிட்ட தொடர்புல இருக்கீங்களா?”

“இந்தப் படத்துல ஒரு சீன்ல நடிச்சிருக்கார். ‘ஒரு சீன்தான் இருக்கு. நம்ம அடுத்த படத்துல நல்ல கேரக்டரே பண்ணலாம்’னு சொன்னேன். ஆனா அவர், ‘இல்லை சார். ‘களவாணி’ படம் எனக்கு முதல்ல அடையாளம் கொடுத்துச்சு. அதனால, ஒரு சீனா இருந்தாலும் பரவாயில்லை, பண்றேன்’னு சொல்லி நடிச்சார். ‘நான் காமெடிக் காகத்தான் வந்தேன். ஆனா, இது ரொம்ப சீரியஸான படம்’னு ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ பண்ணும்போது, கொஞ்சம் குழப்பமாவேதான் இருந்தார். ஆனா, அந்தப் படம் இவருக்குப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்.”

ஓவியா சொன்ன பொய்...

“மாதவன் நடிக்க, நீங்க இயக்குவதாக இருந்த படம் எந்தளவு இருக்கு?”

“இந்தப் படத்துக்கு முன்னாடி, அந்தப் படத்துக்காகத்தான் தாய்லாந்துக்குப் போய் லொக்கேஷன் எல்லாம் பார்த்துட்டு வந்தாச்சு. ஆனா, அந்த நேரத்துல மாதவன் சாருக்கு வேறொரு படத்தின் ஆக்‌ஷன் சீக்வென்ஸ்ல அடிபட்டுடுச்சு. அதனால, இந்தப் படம் ஆரம்பிக்கல. அப்புறம் அவரை அப்ரோச் பண்ணினப்போ, ‘இப்போ ஆக்‌ஷன் வேண்டாம். வேற கதை சொல்லுங்க’ன்னு சொன்னார். அதுக்கான வேலைகள் இப்போ போயிட்டிருக்கு.”

-உ.சுதர்சன் காந்தி