சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

twitter.com/Annaiinpillai
வெடிகுண்டைவிட மிக வலிமையானது வாக்காளர் அட்டை- பிரதமர் மோடி
#அதைவிட வலிமையானது தெர்மோகோல் - செல்லூரார்!

facebook.com/Subaguna Rajan
‘அட்ரஸ் தா’ என்றான்
‘தாரேன்’ என்றேன்
எந்த அட்ரஸ் என்று
அவனும் சொல்ல வில்லை
நானும் கேட்கவில்லை
#அட்ரஸ் கவிதைகள்

twitter.com/manipmp
மாற்றான் உபயோகிக்கும் பாடி ஸ்பிரேவுக்கு எப்போதும் நல்ல மணமுண்டு!

twitter.com/Annaiinpillai
80ஸ் கிட்ஸ்களின் வாயைக் கட்டிப் போட்டதில் கமர்கட்டுக்குப் பெரும் பங்கு உண்டு!

twitter.com/manipmp 
அளவுக்கு மிஞ்சினால், அதே குழம்புதான் நைட்டுக்கும்!

facebook.com/raja.paramasivam.315
“எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான்” என்பதே, அநியாயத்தை மறைமுகமாக ஆதரிக்கும் முதல் புள்ளி!

வலைபாயுதே

facebook.com/RedManoRed
சைக்கிள் செயினில் ஒரு பின் காண வில்லை. இலக்கியமாகச் சொன்னால் நீண்டு மெலிந்த கரும்பாம்பின் கோரப் பற்களில் ஒன்று கழன்று விட்டது.

twitter.com/s tar_nakshatra
ஆகச்சிறந்த சந்தோஷம் எதுவெனில்.... அநேக நாள்களுக்குப் பிறகும் கல்யாண பிளவுஸ் கரெக்டாக இருப்பதே!

twitter.com/Akku_Twitz
பயபக்தியா கோயிலுக்கு வேகமா பைக்ல போய்ட்டிருக்கும்போது ஒருத்தன் குறுக்குல வந்து “மூதேவி சைடு ஸ்டாண்டு எடுடா’’ன்னு சொல்லும்போது உணர்ந்தேன் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததை! 

twitter.com/kumarfaculty
சிக்ஸையும் ஃபோரையும் கூட்டி உன் காரணப் பெயராக்கிக் கொண்டாய் ‘டெண்’டுல்கர். 

twitter.com/kumarfaculty 
வீட்டு வரி, தண்ணீர் வரி, தொழில் வரி கட்டும் பட்டியலில் எல்லாம் பெயர் விடுபட்டுப்போவதே இல்லை.

வலைபாயுதே

twitter.com/Deva_twits
அவன் ஜெயிச்சு இவன் தோத்தா ப்ளே ஆஃப் போகலாம்னு கத்திகிட்டுக் கிடந்தாங்க... அதுக்கு நீங்க முதல்ல ஜெயிக்கணும்டா! 

twitter.com/ItzmeAashiq
1 மில்லியன் இன்வெஸ்ட் பண்ணிட்டு ஷேர் மார்க்கெட்டைக்கூட இவ்ளோ டீப்பா வாட்ச் பண்ண மாட்டானுக! இவனுக கட்ற 25 ஒவாக்கு இவ்ளோ அலப்பற வேற... #ட்ரீம் லெவன் பரிதாபங்கள்

twitter.com/HAJAMYDEENNKS
ஏசி ஓடும்போது கரன்ட்பில்லை நினைத்து வியர்வை வருபவர்களுக்குப் பெயர்தான் மிடில்க்ளாஸ்! 

twitter.com/manipmp

எதேச்சையாய்க் கேட்கும் பாடலின் முதல்வரியை யோசித்து மீட்டெடுப்பது சுகப்பிரசவம் ஆன தாயின் மனநிலையைத் தருகிறது. 

twitter.com/shivaas_twitz
அடுத்த வீட்டுக் குழந்தை செய்தால் சேட்டை. நம்ம வீட்டுக் குழந்தை செய்தால் குறும்பு..! 

வலைபாயுதே

twitter.com/SolitaryReaper_
ஒரு புள்ளை இருந்தாதான் நீங்க அம்மா. ரெண்டு புள்ளை இருந்துச்சுனா நீங்க ரெஃப்ரி... #பபி 

twitter.com/RJAadhi
இப்டிதான் ஹிட்மேன்னு ஒருத்தன் திரியறான்... அவன் என்ன பந்தையா அடிக்கறான், அதுபாட்டுக்கு நிக்கற ஸ்டம்ப அடிக்கறான்யா..! 

twitter.com/thaufikrahman19
மவனே பச்சக்கிளி, இத்துடன் அம்மா 100 ரூபாய் அனுப்பியுள்ளேன்.  அதில் பத்து லட்ச ரூபாய்க்கு உன் பெயர் போட்ட கோட் எடுத்துக்கொள்ளவும். 15 லட்ச ரூபாயை  மேக் அப் செலவுக்கு வைத்துக்கொள்ளவும். தரமான தாய்லாந்துக் காளானை உணவில் சேர்த்துக்கொள்ளவும். ஒரு லட்ச ரூபாய்க்குப் பேனா வாங்கிக் கொள்ளவும்.