
பிட்ஸ் பிரேக்

காஞ்சனா - 3 குறித்து வெவ்வேறு விதமான விமர்சனங்கள் வந்தாலும், படம் சம்மர் ஹிட். சூட்டோடு சூடாக அடுத்தும் ஒரு பேய் த்ரில்லர் காமெடி என முடிவெடுத்து வேலைகளில் இறங்கிவிட்டார் ராகவா லாரன்ஸ். ‘காலபைரவா’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தன்னுடைய டார்கெட் ஆடியன்ஸான குழந்தைகளைக் கவரும் வகையில் இந்தப்படத்தை 3டி-யில் எடுக்கவிருக்கிறார் ராகவா!

‘ஆன்லைனும் ஆன்லைன் சார்ந்த இடமும்’ காலம் இது. வெப் சீரிஸ், நெட்ஃப்ளிக்ஸ் எனத் திரைத்துறையினரும் களமாடத் தொடங்கிவிட்டனர். இந்த வரிசையில் நெட்ஃப்ளிக்ஸில் காலடி வைத்திருக்கிறார் ஜாக்குலின் பெர்ணான்டஸ். Mrs.Serialkiller எனப் பெயரிடப் பட்டுள்ள அந்த சீரிஸை பாலிவுட் நடன இயக்குநர் ஃபரா கான் தயாரிக்கிறார். அவரின் கணவரும் பாலிவுட் இயக்குநருமான சிரிஷ் குந்தர் சீரிஸை இயக்குகிறார். படத்தின் கெட்டப்பைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஜாக்குலினுக்கு ஹார்ட்டின்கள் குவிகின்றன!