சமூகம்
Published:Updated:

ஆஹான்

ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஹான்

ஆஹான்

ஆஹான்

R Muthu Kumar

2014-ல் மோடியின் பக்கம் நிற்காத தமிழகம் இந்த முறையும் நிற்காது. ஆனால், கடந்த முறையும் மோடியை ஏற்காத மேற்கு வங்கம் இந்த முறை மோடியை ஏற்கும் என்கிறார்கள். இது எப்படி? மே 23.

ஆஹான்

Muthu Krishnan

2019 நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வரலாறு காணாத பணம் புழங்கியுள்ளது. திரும்பும் பக்கம் எல்லாம் பணம்... வாக்காளர்கள் பிச்சைக்காரர்கள்போல் கையேந்தி நிற்கிறார்கள். இதில் ஏழை எளியவர்கள் என்றில்லை, மத்திய தர வர்க்கமும் எந்தக் கூச்சமும் இல்லாமல் கையேந்தி நிற்கிறது. வாக்குக்குப் பணம் என்பது ஜனநாயகத்துக்கு வந்துள்ள புற்றுநோய்.

எங்கள் வீட்டுக்கு வரும் கட்சிக்காரர்களிடம், “நாங்கள் வாக்குக்குப் பணம் பெறுவதில்லை, எங்கள் ஜனநாயகக் கடமையை நாங்களே மறவாமல் செய்திடு வோம்” என்று ஒவ்வொரு முறை சொல்லும் போதும், ஏதோ கிரிமினல் குற்றவாளிகளைப் போலவே பார்க்கப்பட்டோம். தேர்தல் ஆணை யம் முழுமையாகத் தோல்வி அடைந்துவிட்டது.

Araathu R

ஜெயலலிதா எலக்ட்ரானிக் வோட்டிங் மிஷின் மீது நம்பிக்கை வைக்காமல் குற்றம் சொன் னார். ஜெயித்தார். கம்மென்று இருந்தார். அரசியல்வாதிகள் அவ்வப்போது எலக்ட்ரானிக் வோட்டிங் மிஷின் மீது சந்தேகம் கிளப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனக்கு அதன் மேல் நம்பிக்கை உண்டு. அதை மாற்றி அமைக்கவோ... தகிடுதத்தம் செய்யவோ முடியாது. நம்மிடம் இருந்து பங்களாதேஷ் வாடகைக்கு வாங்கிக்கொண்டுபோய் தேர்தல் நடத்துவதாகச் செய்தி படித்தேன். அதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் இந்திய விஞ்ஞானிகள். அரசியல்வாதிகளைப் பற்றி நன்கு அறிந்த விஞ்ஞானிகள். இதுகூட என் நம்பிக்கைக்குக் காரணம் அல்ல.

இந்தியா ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடு. பல்லாயிரக்கணக்கான மனித சங்கிலியைக்கொண்டு அரதப் பழசான ஒரு மிகப் பெரிய சிஸ்டம் இயங்கிக்கொண்டு இருக்கிறது. சின்னச் சின்ன தவறுகள்தான் செய்ய முடியுமே தவிர, கடவுளே நினைத்தாலும் இந்த சிஸ்டத்தை வைத்துக்கொண்டு மிகப் பெரிய தவற்றைச் செய்ய முடியாது. எப்படி மிகப் பெரிய நல்லதைச் செய்ய முடியாதோ, அதைப் போலவே! ஆனாலும், அரசியல்வாதிகள் இப்படித் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பிக்கொண்டே இருக்க வேண்டும். அதுவும் ஜனநாயக நாட்டின் ஓர் அம்சம்தான்!

Magudeswaran Govindarajan

எங்கள் பகுதியைச் சுற்றிலும் பரப்புரைக்கே ஒருவரும் வரவில்லை. மாநகர்ப் புறங்களைக்கூட வேட்பாளர்களால் அடைய முடியாத நிலையில் இத்தேர்தல் நடந்திருக்கிறது. நிலைமை இவ்வாறிருக்க வாக்குக் கணிப்பில் ஈடுபட்டவர்கள் யாரிடம் கேட்டு முடிவுக்கு வந்திருப்பார்கள் ?

Sundar rajan

காலநிலை அவசரநிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும். இதுவரை இல்லாத அளவுக்கு வளிமண்டலத்தில் கார்பனின் அளவு அதிகரித்துள்ளது. கார்பன் அளவு அதிகரித்ததும் அதற்கு எடுத்துக்கொண்ட காலமும் கீழே உள்ளது. 440 ppm தொட்டுவிட்டால், இந்தப் புவியை மீட்பது கடினம் என்கின்றன ஆய்வுகள்.

270 - 280: ppm: 5000 yrs

280 - 290:     ,,    100  ,,

290 - 300:     ,,     40  ,,

300 - 310:     ,,     30  ,,

310 - 320:    ,,     23  ,,

320 - 330:    ,,     12  ,,

330 - 340:     ,,       8  ,,

340 - 350:     ,,      6  ,,

350 - 360:     ,,      7  ,,

360 - 370:     ,,      6  ,,

370 - 380:     ,,      5  ,,

380 - 390:     ,,      5  ,,

390 - 400:     ,,      5  ,,

400 - 410:     ,,      4  ,,

410 - 415.7:    ,,       2  ,,

shivaas_twitz

சும்மா கலாய்க்காதீங்கப்பா... அவரேதான் தியானம் பண்றார் அமித் ஷாவைக் கூப்பிடலை

Kozhiyaar


யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதைக் கூறுவது குற்றமாக இருக்கும்போது, Exit Polls சட்டத்துக்கு எதிரானதுதானே!?

RahimGazzali

அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி - தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையத்துக்கு நன்றி - பி.ஜே.பி

nelsonvijay08

கடந்த 25 ஆண்டுகால எல்லா ‘எக்ஸிட் போல்’களிலும் பி.ஜே.பி மட்டும்தான்... தனிப்பெரும் கட்சியாக இருந்து வருகிறது என்பது சாதனைக்குரிய விஷயம்.