அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

• காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தான் 22 வார கர்ப்பமாக இருப்பதாக வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார், நடிகை எமி ஜாக்ஸன். இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்துகொண்டிருக்கின்றன.

மிஸ்டர் மியாவ்

• ஜெயம் ரவியின் 25-வது படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் ஒப்பந்தமானார். தற்போது பாலிவுட் நடிகர் ரோனித் ராய் இப்படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். படத்தில் இவர் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

• தொடர்ந்து 100 நாள்கள் உடற்பயிற்சி செய்யும் சவால் ஒன்று இணையத்தில் டிரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்தச் சவாலை நடிகை காஜல் அகர்வால் ஏற்றிருக்கிறார். மேலும், தனக்கு உடற்பயிற்சி அளிக்கும் பயிற்சியாளரைப் புகழ்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றும் தட்டியிருக்கிறார்.

• தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த நடிகை மடோனா செபாஸ்டியன், தற்போது மலையாளத்தில், ப்ரித்வி ராஜ் நடிக்கும் ‘பிரதர்ஸ் டே’ படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கவிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

• பி.வி.நந்தினி ரெட்டி இயக்கியிருக்கும் ‘ஓ பேபி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சமந்தா. சில தினங்களுக்கு முன் வெளியான இந்தப் படத்தின் டீஸரை இதுவரை நான்கு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள்.

• ‘ரெண்டு’ படத்துக்குப் பிறகு மாதவன் - அனுஷ்கா இணையும் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில்  தயாராகவிருக்கிறது. தெலுங்கில் ‘நிசப்தம்’ என்றும் தமிழ், இந்தி மொழிகளில் ‘சைலன்ஸ்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் தொடங்குகிறது.

மிஸ்டர் மியாவ்

• ‘பாகுபலி’, ‘கபாலி’, ‘மெர்சல்’, ‘2.0’ படங்களைத் தொடர்ந்து சூர்யாவின் ‘என்.ஜி.கே’ திரைப்படமும் பாரிஸில் லீ கிராண்ட் ரெக்ஸ் அரங்கில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

• தடம்’ படத்துக்குப் பிறகு ‘அக்னி சிறகுகள்’ படத்தில் நடித்து வருகிறார் அருண்விஜய். இதில் இவருடன் விஜய் ஆண்டனியும் நடிக்கிறார். அடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில், ‘மாஃபியா’ என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் அருண்விஜய். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

ம்யூட்

• ஒரே நடிகருடன் வரிசையாக நான்கு படங்களில் இணைந்த இயக்குநர், அடுத்த படத்தில் உச்ச நட்சத்திரத்துடன் இணைவது என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறாராம். இதனால், நடிகரை சந்தித்துக் கதை சொல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். உச்ச நட்சத்திரத்துக்குப் பிடித்த நடிகரை நான்கு முறை இயக்கியிருப்பதால், தனது கனவு நனவாகும் என்றும் இயக்குநர் நம்புகிறார்.

• பச்சை நிறுவனத்துக்கு ஏற்கெனவே கடன் அதிகம். இருந்தும் ஒவ்வொரு வாரமும் தங்களின் தயாரிப்பில் புது படங்களுக்கான பூஜைகளைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ‘ஏன் இந்த அகலக்கால்...’ என்று தயாரிப்பு நிறுவனத்தின் நலம் விரும்பிகள் சிலர் எச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

• முருகன் பெயர் கொண்ட நடிகரும் நம்பர் நடிகையும் இணைந்து நடித்த இரண்டாவது படமும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதனால், இனி அந்த நடிகையுடன் ஜோடியாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம், முருகன் நடிகர்.