சினிமா
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• அஜித்குமார் இந்தியில் நடிக்க வேண்டும் எனத் தயாரிப்பாளர் போனி கபூர் கூறியிருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, அஜித் - சிவா காம்பினேஷனில் உருவான ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யவிருக்கின்றனர். ‘வீரம்’ ரீமேக்கில் விக்கி கௌஸல் நடிக்க, ஃபர்ஹாத் சாம்ஜி இயக்குகிறார். ‘வேதாளம்’ ரீமேக்கில் ஜான் ஆபிரஹாம் நடிக்கிறார். தெறிக்கவிடலாம் ஹே!

• ஐஸ்ஏஜ் காலத்து ஓநாயின் தலையை ஜப்பான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் சைபீரியாவில் கண்டுபிடித்துள்ளனர். தங்களுக்குக் கிடைத்த அந்த ஓநாயின் தலையை வைத்து அதன் வயதைக் கணித்துள்ளனர். கூரிய பற்களோடு உள்ள அந்த ஓநாயின் தலை 40,000 வருடத்துக்கு முந்தையதாம். ஹாலிவுட்ல இதைவெச்சு படமெடுத்துடுவாங்களே!

• தர்பார் பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. பாதி ஷூட்டிங் முடிந்துவிட்டது. இந்த நிலையில் ‘ப்ரிடேட்டர்’, ‘கமாண்டோ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் பில் டியூக், முருகதாஸிடம் ட்விட்டரில் ஒரு கோரிக்கை வைத்ததுதான் சென்றவார செம ஹிட். ‘`எனக்குத் தமிழ் தெரியாது... இருந்தாலும் தர்பார் படத்தில் ரஜினியின் அமெரிக்க சொந்தக்காரராகவோ, நயன்தாராவிற்கு அங்கிளாகவோ ஒரு கேரக்டர் இருந்தால் சொல்லுங்க, சிறப்பா பண்ணிடலாம்’’ என்று ட்வீட் தட்ட, அதிர்ச்சியில் ‘`சார் நிஜமாவா...’’ என்று கற்றதுதமிழ் அஞ்சலிபோல ரிப்ளை போட்டிருக்கிறார் முருகதாஸ். தர்பார் ஃபீவர்!

இன்பாக்ஸ்

• ஒருவழியாக இந்த மாத இறுதியில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் `மாநாடு’ படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ளதாம். இந்தப் படத்திற்காக உடம்பைக் குறைத்து கெட்டப் எல்லாம் மாற்றி, பக்கவாகத் தயாராகிவிட்டாராம் சிம்பு. படத்தின் ஹீரோயின், இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணிதான் என்கிறார்கள். ஏற்கெனவே சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் `ஹீரோ’ படத்திலும் இவர்தான் நாயகி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மங்களகரமான பெயர்!

• தேவியின் மகள், சயிஃப் அலிகான் மகளைத் தொடர்ந்து, ஷாருக் கானின் மகள் சுஹானா கானும் நடிகையாக அறிமுகமாகிறார். தன் பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து தயாரிக்கும் குறும்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் சுஹானா. இந்தக் குறும்படத்தின் மேக்கிங் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய எல்லாமே வைரல் அடித்திருக்கின்றன. வைரல் காண்!

 

• சந்திராயன் - 2 விண்கலத்தை ஜூலை மாதம் 15-ம் தேதி விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளது இஸ்ரோ. இம்முறை இந்த முயற்சியை முன்னின்று நடத்தப்போவது இரண்டு பெண்கள். ஒருவர் ரித்து கரிதால். இன்னொருவர் தமிழகத்தைச் சேர்ந்த வனிதா முத்தையா. இஸ்ரோ வரலாற்றில் இரண்டு பெண்கள் பிறகோள் விண்கலங்களைச் செலுத்துவதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுள்ளது இதுவே முதல்முறை. தூள் கிளப்புங்க கேர்ள்ஸ்! 

இன்பாக்ஸ்

• ஹாங்காங்கில் 2014ஆம் ஆண்டு நடந்த  குடைப்போராட்டம் உலக அளவில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த ஒன்று. கடந்த வாரம் அதே போன்ற ஒரு குடைப்போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள் ஹாங்காக் மக்கள். ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை சீனாவிடம் ஒப்படைக்க அனுமதிக்கும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து லட்சக்கணக்கானோர் குடைகளோடு போராட்டத்திற்கு வந்திருந்தனர். காவலர்கள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிக் கூட்டத்தை விரட்ட, தள்ளுமுள்ளு ஏற்பட்டு 60 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். போராடுவோம்!

இன்பாக்ஸ்

மெரிக்க ரியாலிட்டி ஷோவில் வெற்றிபெற்று சர்வதேசப் புகழ்பெற்ற `லிடியன் நாதஸ்வரம்’  இசையமைப்பாளர் ஆகிறார். தமிழில் இல்லை, மலையாள மண்ணில்... மோகன்லால் முதன்முறையாக இயக்குநர் ஆகும் சிறார் திரைப்படமான ‘பரோஸ்’ படத்திற்கு லிடியனை இசையமைக்க வைக்க முயற்சி செய்துவருகிறது படக்குழு. 3டி படமாகப் பன்மொழிகளில் தயாராகும் இந்தப் பெரிய பட்ஜெட் படத்திற்குக் கதை எழுதுபவர், மைடியர் குட்டிசாத்தான் படத்திற்குக் கதை எழுதிய  ஜிஜோ புண்ணூஸ்... வாழ்த்துகள் லிடியன்!