சினிமா
தொடர்கள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: சுட்டுப் பிடிக்க உத்தரவு

சினிமா விமர்சனம்: சுட்டுப் பிடிக்க உத்தரவு
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா விமர்சனம்: சுட்டுப் பிடிக்க உத்தரவு

சினிமா விமர்சனம்: சுட்டுப் பிடிக்க உத்தரவு

ரு வங்கிக் கொள்ளைச் சம்பவம், தீவிரவாதி களின் சதித் திட்டம் இரண்டையும் ஒரு புள்ளியில் இணைத்தால் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு.’

சினிமா விமர்சனம்: சுட்டுப் பிடிக்க உத்தரவு

மகளின் ஆபரேஷன் செலவிற்காகத் தன் நண்பர்களுடன் வங்கிக்கொள்ளையில் ஈடுபடுகிறார் விக்ராந்த். போலீஸ் துரத்த, கோவையில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் மாட்டிக்கொள்கிறார்கள். அதே ஏரியாவில், வெடிகுண்டுத் தாக்குதலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது, ஒரு தீவிரவாதக் கும்பல். மொத்த ஏரியாவையும் துப்பாக்கி முனையில் வளைக்கிறது காவல் துறை. வங்கிக் கொள்ளையர்கள் நிலை என்ன, தீவிரவாதிகளின் திட்டம் என்ன ஆனது என்பதை விறுவிறுப்புடனும் படபடப்புடனும் சொல்கிறது, படம்.

கொள்ளையர்கள், தீவிரவாதிகள், போலீஸ் துரத்தல், துப்பாக்கிச் சூடு... அத்தனைக்கும் நடுவே அழகான ஒரு எமோஷனை இழையோடவிட்டுக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. காதல், காமெடி, பாடல்கள் என வழக்கமான தமிழ் சினிமாவுக்கான மெனக்கெடல்கள் ஏதுமில்லாத திரைக்கதைக்கு வாழ்த்துகள்.

ஒரு காட்சியிலும் யூனிஃபார்ம் இல்லை. ஆனால் மிஷ்கின் நடிப்பே போலீஸ் யூனிஃபார்ம் ஆகிவிடுகிறது. ஆக்‌ஷன் காட்சிகள், மகளுடன் உரையாடல் எனக் காட்சிக்கேற்ற கச்சிதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் விக்ராந்த். சுசீந்திரனுக்கு நடிகராக முதல் படம். படம் முழுக்க ஓடிக்கொண்டிருப்பதால் நடிப்பதற்கு அவ்வளவாக வேலையில்லை. குடியிருப்புவாசியாக வரும் அதுல்யாவின் அட்ராசிட்டி தேவையற்ற திணிப்பு.

சினிமா விமர்சனம்: சுட்டுப் பிடிக்க உத்தரவு

ஒரு ஏரியாவின் அத்தனை அங்குலத்தையும் அலசியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங். பாடல்கள் இல்லை என்றாலும், பின்னணி இசையால் கவனம் ஈர்க்கிறார் ஜேம்ஸ் பிஜாய். எடிட்டர் ராமராவ் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

 கான்ஸ்டபிள் தொடங்கி, கமாண்டோ வீரர்கள் வரை அத்தனைபேரும் சுட்டுக்கொண்டே இருப்பதும், போலீஸுக்கே டஃப் கொடுக்கும் அதுல்யாவின் அட்ராசிட்டிகளும் பலவீனம். விக்ராந்த் வீடியோ காலில் மகளுடன் பேசும் காட்சி உருக்கம் என்றாலும், மீண்டும் மீண்டும் வருவது சலிப்பு.

‘மக்கள் கூட்டம் மிகுந்த ஷாப்பிங் மால் வங்கியில் கொள்ளையடிக்கும் அளவுக்கு இவர்கள் முட்டாள்களா?’, ‘இத்தனை போலீஸையும் தாண்டி, கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு போய்விடுவார்களா?’ என்றெல்லாம் நமக்குள் எழும் கேள்விகளுக்கு க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ‘அட’ போடவைக்கிறது.

- விகடன் விமர்சனக் குழு