சினிமா
தொடர்கள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

சினிமா விமர்சனம்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா விமர்சனம்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

சினிமா விமர்சனம்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

சினிமா விமர்சனம்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

‘ஒரு தப்பு நடந்தா தட்டிக்கேட்க ஒருத்தன் வரணும். ஆனா அந்த ஒருத்தன் யாரு?’ என்கிற சுவாரஸ்ய ஒன்லைனை யூடியூப் ஸ்டார்களை வைத்துக்கொண்டு ‘நெஞ்ச முண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ எனத் திரைப்படமாக்கியி ருக்கிறார்கள்.

படிப்புக்கான வேலை தேடுவதை விடுத்து, பிடித்த வேலை செய்யும் யூடியூப் ஸ்டார்களாக ரியோவும், விக்னேஷ்காந்தும். ஒரு ப்ராங்க் ஷோவுக்காக ராதாரவியைக் கலாய்க்க இருந்தவர்களை அழைத்து, மூன்று டாஸ்க்குகள் கொடுக்கிறார் ராதாரவி. அவற்றை முடித்தால் கோடிக்கணக்கான பணம் வரும் என்பதால் ஒப்புக் கொள்கி றார்கள். எதற்கு இந்த டாஸ்க் விளை யாட்டெல்லாம் என்பதை, ஆங்காங்கே சிரிக்க வைக்கும் முயற்சிகளும், க்ளைமாக்ஸில் உசுப்பேற்றும் மெசேஜுமாகச் சொல்லி முடித்திருக்கிறார்கள்.

சினிமா விமர்சனம்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

முதல் படம் என்கிற வகையில் ரியோ நடிப்பு ஓ.கே. சென்டிமென்ட் காட்சிகளில் தடுமாறினாலும் காமெடிகளில் தாங்கிப் பிடிக்கிறார் விக்னேஷ்காந்த். விவேக் பிரசன்னா வில்லனாக நன்றாகவே பர்ஃபார்ம் செய்திருக்கிறார். ராதாரவி, நாஞ்சில் சம்பத், ராஜ்மோகன், சுட்டி அரவிந்த், நாயகி ஷிரின் என்று மற்ற எல்லோரும் அவரவர் வேலையை அளவாகச்  செய்திருக்கிறார்கள்.

திரையில் வருபவர்களில் முக்கால்வாசியினர் ஆன்லைன் ஸ்டார்கள் என்பதால் ஆளாளுக்கு என்ட்ரிகளாகப் போட்டுத்தள்ளுகிறார்கள். ஆனால், இணைய உலகில் அவ்வளவு பரிச்சயமில்லாதவர்களுக்கு ‘எதுக்கு எல்லாத்துக்கும் ஸ்லோ மோஷன்?’ என்ற கேள்வி எழும். முதல்பாதி நம்மைத் தாலாட்டித் தூங்கவைக்க, இரண்டாம் பாதி சென்டிமென்ட், ஆக்‌ஷன் என்று வேகமெடுக்கிறது.

கதை ஓ.கே. திரைக்கதையில் ஏகப்பட்ட தொய்வு. இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இன்னும் திரைக்கதையைச் செதுக்கியிருக்கலாம். போதாக்குறைக்கு யூடியூப் காமெடிக் காட்சிகளுக்கு வருவதுபோல பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஷபீர்.  செந்தில் குமார் ஒளிப்பதிவும் சொல்லும்படி இல்லை.

சினிமா விமர்சனம்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

ராதாரவியின் மகன் ஒரு சேனலில் ரிப்போர்ட்டராகச் சேர்ந்து எல்லா சேனலிலும் வருவேன் என்கிறார். என்னதான் பிரேக்கிங் நியூஸ் கொடுத்தாலும் ஒரு சேனல் நிருபரை எல்லா சேனலிலுமா காட்டுவார்கள். வில்லன் ரயில்வே ஸ்டேஷனில் கொலை செய்துவிட்டு ஒரு மணிநேரம் உட்கார்ந்து டயலாக் பேசிவிட்டுப் போவதெல்லாம் காதோரம் பூந்தோட்டம்.

தொய்வான திரைக்கதையையும், அச்சுப்பிச்சு காமெடிகளையும் சரிசெய்திருந்தால், ராஜா இன்னும் ஓடியிருப்பார்.

- விகடன் விமர்சனக் குழு