சினிமா
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

 ‘அறம்’ படத்துக்குப் பிறகு கோபி நயினார், ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் வேலைகளை முடிக்கும் முன்னரே, அடுத்த படத்துக்கு ரெடியாகிவிட்டார்... ‘அறம்’ மதிவதனி கதாபாத்திரம்போல் ஒரு வலிமையான பாத்திரத்தில் நடிக்க சமந்தாவை அணுகியுள்ளார். சீக்கிரம் ஆரம்பிங்க!

இன்பாக்ஸ்

• அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் போல், துபாயின் டௌன்டவுன் நகரிலும்  ஒரு வாக் ஆஃப் ஃபேம் நடைவீதி அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த துபாய் ஸ்டார்ஸ் நடை வீதியில் உலகெங்கிலும் உள்ள கலை, விளையாட்டு, அரசியல் தலைவர்களின் பெயர்கள் நடைவீதி முழுதும் பொறிக்கப்படவுள்ளன. இந்த துபாய் ஸ்டார்ஸ்  நடைவீதி அக்டோபர் மாதம் தொடங்கப்படவுள்ளது. 400க்கும் மேற்பட்ட உலக நட்சத்திரங்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவிலிருந்து ஷாருக் கான் கலந்துகொள்ளவுள்ளார். துபாய்சந்து!

• கரீனா கபூர் தனது குழந்தை தைமூர் அலிகானுடன் அதிக நேரம்  செலவழிக்க வேண்டும் என்பதால்.சினிமாவை விட்டு விலகியிருந்தார். தற்போது மகன் வளர்ந்ததையடுத்து, சினிமாப் பக்கம் எட்டிப் பார்த்தவருக்கு வாய்ப்புகள் ஏதும் சரியாக அமையாததால், தொலைக்காட்சிப் பக்கம் திரும்பியிருக்கிறார். தனியார் சேனலில் நடக்கவிருக்கும் நடன ரியாலிட்டி ஷோவில் நடுவராகக் களம் இறங்கவுள்ளார்.  அம்மா ஆகிட்டாலே...

• அமெரிக்காவில் அனுஷ்கா, ‘சைலன்ஸ்’ படத்தின் படப்பிடிப்பில் மாதவனுடன் நடித்துவருகிறார். சிரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் படப்பிடிப்பின்போது அனுஷ்கா சண்டைக்காட்சியில் நடித்ததாகவும் அப்போது அவருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் அனுஷ்காவோ, தான் அமெரிக்காவில் நலமாக, `சைலன்ஸ்’ படத்தின் ஷூட்டிங்கில் இருப்பதாகக் கூறியுள்ளார். அதுக்குள்ள அவசரம்!

•   பாலிவுட்டின் ஆச்சர்ய நடிகர் நவாசுதீன் சித்திக்குடன் ஜோடி சேர்கிறார் தமன்னா.  `போலே சுடியான்’ என்ற இந்திப் படத்தில் நடித்துவரும் நவாசுதீனுக்கு ஜோடியாக முதலில் ஒப்பந்தமானவர் ‘நாகினி’ மௌனி ராய். திடீரென அவர் படத்திலிருந்து விலக, அவருக்குப் பதிலாக யார் நடிக்கப்போகிறார் என எதிர்பார்த்திருந்தது பாலிவுட் வட்டாரம். இப்போது தமன்னாவைக் களமிறக்கி ஆச்சர்யப் படத்தியுள்ளது படக்குழு. கபி குஷி கபி கம்!

• தெலுங்கு சினிமாவின் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமல்ல, சிறிய பட்ஜெட் படங்களும் இந்திய சினிமாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவருகின்றன. சென்ற வாரம் ரிலீசான ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாஸ் ஆத்ரேயா’ என்ற படம் ஏகத்துக்கும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மாற்றம் முன்னேற்றம்!

• நெட்ஃப்ளிக்ஸில் அடியெடுத்து வைத்துள்ள பாலிவுட் நடிகைகள் பட்டியலில் இணைந்துள்ளார் கியாரா அத்வானி. நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும் ‘கில்ட்’ என்னும் படத்தில் முக்கியவேடம் கியாராவுக்கு. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் சொக்கிப்போயிருக்கிறார்கள் கியாரா ஃபேன்ஸ். அம்புட்டு அழகுல்ல!

 

• அமெரிக்க சூப்பர் ஹீரோக்களின் தந்தை எனப் போற்றப்படுபவர் `ஸ்டான் லீ.’ சென்ற ஆண்டு இவரது மறைவு, உலகளாவிய ரசிகர்களைப் பெரும் துக்கத்தில் ஆழ்த்தியது. ஸ்டான் தன்னுடைய மறைவுக்கும் முன்னர் ஒரு சூப்பர் ஹீரோ படைப்பைத் தயார் செய்து வைத்திருந்தார். ‘சூப்பர் ஹீரோ கிண்டர்கார்டன்’ எனும் இந்தக் குழந்தைகளுக்கான கதை, இப்போது அனிமேஷன் தொலைக்காட்சித் தொடராகவுள்ளது. இந்தத் தொடரில் முக்கியவேடத்தில் அர்னால்டு நடிக்கவுள்ளார். அற்புத லீ!

ராணுவ வீரர்கள் பலராலும் ‘சாம் பகதூர்’ (துணிச்சல்காரர்) என்று அழைக்கப்பட்டவர் மறைந்த ‘ஃபீல்டு மார்ஷல்’ சாம் மானெக்‌ஷா. இந்தியாவின் முதல் ஃபீல்டு மார்ஷலான அவரது வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் படமாகிறது. பாலிவுட்டில் தற்போது வெரைட்டியாக நடித்துவரும் இளம் நடிகர் விக்கி கௌசல் `சாம் மானெக்‌ஷா’ அவதாரம் எடுக்கவுள்ளார். சில நாள்களுக்கு முன் வெளியான புகைப்படத்தில் சாம் மானெக்‌ஷாவாகவே மாறியிருந்த விக்கி கௌசலுக்கு பாலிவுட் சீனியர்கள் மத்தியில் ஒரே பாராட்டு மழை. சாம் தி ப்ரேவ்!

இன்பாக்ஸ்

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர்த் தொகுதியின் எம்.பி மஹுவா மொய்த்ராதான் கடந்த வார சென்சேஷன். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா தனது முதல் நாடாளுமன்ற உரையை கடந்த வாரம் நிகழ்த்தினார். அந்த உரையில் , “அமெரிக்காவில் ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகத்தில் பாசிசத்தின் குறியீடுகள் குறித்த போஸ்டர் உள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள ஏழு குறியீடுகளும் இந்தியாவுக்குப் பொருந்திப்போகிறது” என விளாச, பா.ஜ.க எம்.பி-க்கள் கூச்சலிட்டு எதிர்த்தனர். சளைக்காமல் மோடி அரசைக் காரசாரமாக விளாச... இணையத்தில் மையம் கொண்டது  மஹுவா புயல். ஆரம்பமே அமர்க்களம்!

 F1 போட்டியைப் பற்றித் தெரியாதவர்களுக்குக்கூட ரெட்புல் பற்றித் தெரிந்திருக்கும். ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக எதையாவது செய்து கவனம் ஈர்க்கும் இந்த ரெட்புல் அணி இம்முறை வித்தியாசத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டது. F1-ன் அடுத்த போட்டி ஸ்பீல்பெர்க்கில் இருக்கும் ரெட்புல் ரிங் சர்க்யூட்டில் நடைபெறவுள்ளது. ரெட்புல் டிரைவர் பியர் கெய்ஸ்லி இங்கு கார் ஓட்டுவதற்கு முன்பு ரேஸ் சர்க்யூட்டைச் சுற்றி ஸ்டன்ட் ஃபிளைட்டில் ஒரு ரவுண்டு அடித்து லேப் டைமிங்கோடு வந்ததை உச்சி சிலிர்க்கக் கொண்டாடித் தள்ளியிருக்கிறார்கள் F1 ரசிகர்கள்.
கில்லி கெய்ஸ்லி!