மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

சிவாஜி கணேசனின் முத்தங்கள் - இசை 
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்-1.
பக்கங்கள்: 80  விலை:  

விகடன் வரவேற்பறை

70

விகடன் வரவேற்பறை

மிழின் இளம் கவிஞர்களில் ஒருவரான இசை எழுதிய கவிதைகளின் தொகுப்பு. புத்தகத்தின் பின் அட்டையில் குறிப்பிட்டு இருப்பதைப் போல... 'இசை, கவிதையோடு அபாயகரமாக விளையாடுபவர்’ என்பதை நிரூபிக்கின்றன, சிவாஜி கணேசனின் முத்தங்கள். 'தம்பி அந்தக் கல்லை எடு’ கவிதை நகைச்சுவையாகத் தொப்பை மனிதர்களின் பிரச்னைகளைப் பதிவுசெய்கிறது என்றால், 'நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் பயணிக்கும் எறும்பு’ கவிதை நுட்பமான அவதானிப்போடு கூடியது. கிரிக்கெட், ராணுவம், போர், சினிமா என்று சகல விஷயங்களையும் கிண்டலடித்துக் கடப்பதே இந்தக் கவிதைகளின் பலம்!

துக்கம்  
இயக்கம்: அ.ப.சிவா  வெளியீடு: கருநீலம்

விகடன் வரவேற்பறை

'இப்பலாம் யாருங்க சாதி பார்க்குறா? என்று கேட்பவர்களுக்கு...’ என்கிற டைட்டில் கார்டோடு துவங்கும் குறும்படம். வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வருகிறார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். ஆதிக்கச் சாதியின் கட்டுப்பாட்டில் இருந்து தன் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாவை அழைத்துச் சென்று சென்னையில் கௌரவமாக வாழவைக்க வேண்டும் என்று நினைக்கிறார். இந்த நேரத்தில் தாத்தா இறந்துவிட, சுடுகாட்டில் இடம் ஒதுக்குமாறு ஆதிக்கச் சாதித் தலைவரிடம் காலில் விழுந்து மன்றாடுகிறார் பாட்டி. ஆண்டாண்டு காலமாகத் தொடர்கிற அவலம் அந்த இளைஞர் மனதைச் சுட்டு எரிக் கிறது. இப்போது அவர் உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம். அவர் என்ன முடிவு எடுத்தார் என்பது க்ளைமாக்ஸ். சாதிய அவலங்களைக் காட்டி, சுருக் கமாக _ அதேசமயம் முகத் தில் அறைவதுபோல _ சாதிக் கொடுமையைச் சொல்லி இருக்கிறார் இயக்குநர்!

இதம் சுகம்!
http://anarsrilanka.blogspot.com

விகடன் வரவேற்பறை

இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமியத் தமிழ்ப் பெண் கவிஞர் அனாரின் வலைப்பூ. 'ஒரு காட்டாறு/ ஒரு பேரருவி/ ஓர் ஆழக் கடல்/ ஓர் அடைமழை/ நீர் நான்/ கரும்பாறை மலை/ பசும் வயல்வெளி/ ஒரு விதை/ ஒரு காடு/ நிலம் நான்/ உடல் காலம்/ உள்ளம் காற்று/ கண்கள் நெருப்பு/ நானே ஆகாயம்/ நானே அண்டம்/ எனக்கென்ன எல்லைகள்/ நான் இயற்கை/ நான் பெண்’ எனும் கவிதை மூலமே அவருடைய இருத்தல் பிடிபடுகிறது. வாசிக்க இதம் தரும் தளம்!

குறுக்குச் சாவிகள்! www.keyxl.com

விகடன் வரவேற்பறை

ணினிப் பயன்பாட்டை எளிமையாக்க 'ஷார்ட் கட் கீ’ தகவல்கள் சொல்லும் தளம். உதாரணமாக, 'எம்.எஸ்.வேர்டு 2010’-ன் 'விசைப் பலகை சுருக்கு வழிகள்’ என்று கேட்டால், விரல் நுனியில் தகவல் கொட்டுகிறது!

முப்பொழுதும் உன் கற்பனைகள்  இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
வெளியீடு: வேகா மியூஸிக்  விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

காதல் வயப்பட்ட இதயம் என்ன செய்யும்? துள்ளிக் குதிக்கும். அந்தக் காதல் துள்ளல் டியூன் நிரம்பிக்கிடக்கும் ஆல்பம். ஆலாப் ராஜு, ஜி.வி.பி., மேகா குரல்களில் 'மழை பொழியும் மாலையில்...’ இதமான தென்றல் தாலாட்டு. அதன் கிடார் மீட்டல் உங்கள் நாடி நரம்பை முறுக்கேற்றி துள்ளவைக்கக் கூடியது. புது மெட்டும் புதுக் குரலுமாக 'ஓ சுனந்தா...’ ஓஹோ சுகம்தான். 'காதலிக்கு என்ன கிஃப்ட் கொடுக்கலாம்?’ என்பதையே பாடுபொருளாகக்கொண்ட, 'ஒருமுறை...’ பாடலை இழைந்து குழைந்து ஜி.வி.பிரகாஷே பாடியிருக்கிறார். பாபா ஷேகல், ஸ்ருதிஹாசன் பாடிய, 'ஓ சொக்குப்பொடி...’ சரியான பஞ்சாபி பார்ட்டி கானா. தாலாட்டுப் பாடலாக சித்தாரா குரலில் ஒலிக்கும் 'கண்கள் நீயே...’ வரிகளில் செம வனப்பு. காதலை ரசிக்க ருசிக்கக் கற்றுக்கொடுக்கும் ஆல்பம்!