
தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் அந்த அவார்டு கம்பெனி. இதன் தயாரிப்பாளரிடம் படம் இயக்கும் இயக்குனர்களின் நிலைமை ரொம்பவும் கஷ்டமாம்.
ஷங்கர் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களைத் தயாரித்தால் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் புதுமுக இயக்குனர்களின் நிலைமை படுமோசம். இவரது படத்தயாரிப்பு எப்படி இருக்கும் என்பதை கொஞ்சம் பார்க்கலாமா...?
இயக்குனர் கதையை கூறியவுடன், கதை மிகவும் பிடித்துவிட்டால் போதும் உடனே சிறுதொகை ஒன்றை காசோலையாக கொடுத்துவிடுவார். உடனே 'அய்யோ இயக்குனராகி விட்டோம்' என்ற ஆர்வத்தில் சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பார்கள்.
உடனே தனியாக அலுவலகம் ஒன்றை அமைத்து கொடுத்து படவேலைகளை தொடங்குங்கள் என்று கூறிவிடுவார். ஒருபுறம் வேலை நடந்து கொண்டே இருக்கும். அனைத்தை முடிவு செய்துவிட்டு "சார்! இது தான் இறுதிகட்ட கதை.. நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர் " என்று அனைத்தையும் கூறியவுடன் "சூப்பர்! அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு" என்று கூறிவிடுவார்.
அடுத்த மாதம் சென்றால் இன்னும் ஒரு 20 நாட்களாகும் என்று கூறியே சுமார் 2 அல்லது 3 வருடம் ஆகிவிடும். புதுமுக இயக்குனரால் வேறு எங்கும் போய் கதையை கூறவும் முடியாது. அட்வான்ஸ் தொகையை வேறு வாங்கிவிட்டார். அவர் எப்போது படம் துவங்கலாம் என்று நினைக்கிறாரோ அப்போது தான் துவங்குவாராம்.
##~~## |