மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

வெள்ளைப் பல்லி விவகாரம் லக்ஷ்மி மணிவண்ணன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை-18.  பக்கம்: 160 விலை:

விகடன் வரவேற்பறை

90

விகடன் வரவேற்பறை

ரு சாவியால் பல பூட்டுகளைத் திறக்கும் மந்திரக் கதையுலகம் லக்ஷ்மி மணிவண்ணனுடையது. இத் தொகுப்பின் 'வெள்ளைப் பல்லி விவகாரம்’ நெடுங்கதை, வழமையான பாணியை உடைத்து, ஒருவிதப் பதற்றத்தை வாசிப்பவரின் மனதில் உண்டுபண்ணுகிறது. 'மொழியின் ஒரு துண்டுப் பாறை அவளது உடம்பாக மாறிவிட்டது’ என்பதுபோன்ற வரிகள், இவர் ஒரு கவிஞர் என்பதை நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன. ஒரு கதைக்குள் சில கதைகளை எழுதிச் செல்வதே எந்நாளும் இவரது பலம்!

 அப்பா இங்கே வா வா! http://www.fatherhood.gov

விகடன் வரவேற்பறை

ரு நல்ல தந்தை எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் தளம். உங்களது படிப்பு, சம்பாத்தியம், குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கான திட்டமிடல், குழந்தை வளர்ப்பு என நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்பற்றிய தெளிவுகள் நிரம்பி இருக்கின்றன. நல்ல தந்தையாக இருப்பதற்கு முதலில் நல்ல கணவனாக இருக்க வேண்டுமே? மனைவியோடு சுமுகமான உறவு முறையில் இருப்பதுபற்றி வகுப்பு எடுக்கிறார்கள்!

 காகிதப் பூ  இயக்கம்: சுரேஷ்குமார்

விகடன் வரவேற்பறை

குழந்தைத் தொழிலாளியாக உருமாறும் ஒரு மாணவனின் கதை இந்தக் குறும்படம். தந்தையின் திடீர் மரணத்தால் கலெக்டர் கனவைக் கை கழுவி, ஹோட்டலில் டேபிள் துடைக்கும் வேலையில் சேர்கிறான். உடல் நிலை சரியில்லாத தங்கச்சிப் பாப்பாவைக் காப்பாற்ற குமாரின் சம்பளமே ஆதாரம். அரசு அதிகாரிகளின் சோதனையால் பயந்து போய், குமாரை வேலையைவிட்டு நிறுத்துகிறார் ஹோட்டல் முதலாளி. தங்கச்சிக்கு மருந்து வாங்கத் திருடும் முயற்சியில் மாட்டிக்கொள்கிறான். குமார் என்ன ஆனான் என்பது க்ளைமாக்ஸ். நேர்த்தியான முயற்சி!

 எனது வாழ்க்கை! www.sugadevnarayanan.blogspot.com

விகடன் வரவேற்பறை

'நான் ஒரு தாவரவியல் பட்டதாரி. செருப்பு தைக்கும் தொழிலாளியின் வாரிசு. கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்திருக்கிற முதல் தலைமுறை கல்வி கிடைக்கப்பெற்றவர்!'' என்று அறிமுகம் செய்துகொள்ளும் அர்ஜுனன் நாராயணனின் வலைப்பூ. உத்தப்புரம், திருச்சி, கோவை நாகராஜபுரம், உடுமலைப்பேட்டை ஆகியவற்றில் உள்ள தீண்டாமைச் சுவர்கள் குறித்து விளக்குகிறது ஒரு கட்டுரை. திருப்பூட்டு எனப்படும் தாலி கட்டும் நிகழ்வாகிய திருமணத்தில் சமையல் பாத்திரங்களைக் கழுவும் வேலை செய்து 15 ரூபாய் சம்பளம் பெற்றதை விவரிக்கும் 'சமையல்காரன்’ கட்டுரை நெகிழ்ச்சி நிரம்பியது!

சிறுத்தை  இசை: வித்யாசாகர்  வெளியீடு: வீனஸ்  விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

லகலவெனத் தளம் மாறித் தடதடக்கும் இடங்களில் தாளமிடத் தோன்றுகிறது குபீர் உற்சாகத்துடன் ஒலிக்கும் 'நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை இல்லை’ பாடல். தவில் பின்னணியில் ராப், 'ச்சீ... ச்சீ ச்சீங்க மாட்டேன்... எங்கே வேணா கிள்ளு!’, 'நீ அழகிய ரோஸு... பிக்காஸோ வரைந்த பீஸு’ போன்ற வரிகள்... மசாலா குத்துக்கான அத்தனை அம்சங்களும் திணிக்கப்பட்டது 'ராக்கம்மா ராக்கு ராக்கு’ பாடல். 'அழகாப் பொறந்துபுட்ட ஆறடி சந்தனக் கட்டை’ பாடலில் மாலதி லக்ஷ்மண், பிரியதர்ஷனி குரல்களில் ஒற்றைப் பனைக் கள் கிறக்கம். இத்தனை குத்துப் பாடல்களுக்குப் பிராயச்சித்தம் போலவோ என்னவோ, 'ஆராரோ ஆரிரரோ’ தாலாட்டில் 'மயிலிறகு’ வருடல்!

##~##