மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

அறியாமை  இயக்கம்: சரவணன்
வெளியீடு: எஸ்.கே.எஸ்.

விகடன் வரவேற்பறை

'படிக்காத வாழ்க்கை, முட்களைப் போல... படித்த வாழ்க்கை, மலரைப் போல’ - குறும்படத்தின் ஒன் லைன் இதுதான்! வண்டியில் பழம் விற்கும் தந்தை ஒருவர், தன் மகனைப் பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு வைத்தி ருக்கிறார். மகனுக்கோ படிக்க ஆசை. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு மையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இருவரையும் சந்திக்கிறார். தந்தை திருந்தினாரா என்பது க்ளைமாக்ஸ். குழந்தைகளை வேலைக்கு வைத்தல் தண்ட னைக்கு உரிய குற்றம் என்பதை அழுத்தமாகச் சொன்னவர்கள், அவர்களுக் குக் கல்வி எவ்வளவு முக்கி யம் என்று சொல்வதில் கோட்டை விட்டுவிட்டார்கள். நல்ல விஷயம் என்பதற்காகப் பாராட்டலாம்!

அவ்வுலகம் - வெ.இறையன்பு வெளியீடு: உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18.
பக்கம்: 192  விலை:

விகடன் வரவேற்பறை

140

விகடன் வரவேற்பறை

த்ரிவிக்ரமன் என்பவர் மரணத்துக்குப் பிறகு பயணிக்கும் உலகம்தான் கதை. மரணத்துக்குப் பின் ஒருவர் செல்கிற அவ்வுலகத்தில், அவரின் இருப்பைச் சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் அவர் பூமியில் வாழ்ந்த காலத்தில் செய்த செயல்களும் மேற்கொண்ட வாழ்வு முறையுமே என்கிறார் இறையன்பு. 'யாருக்கு என்ன விருப்பமோ அதைச் செய்யவிடாமல் தடுப்பதுதான் உண்மையான தண்டனை’, 'மனைவி என்பவள் மற்றொரு தோழி; உணர்வும் உடலும் பகிரும் ஆழி’ என்பன போல வசீகர வரிகள். நாவல் முழுக்கவே தத்துவ விசாரமாக அமைந்திருப்பது சின்ன அயர்ச்சி!

ஐடியா ரயில்! www.purpletrail.com

விகடன் வரவேற்பறை

குழந்தை பிறந்த தினத்தை மற்றவர்களுக்கு அறிவிப்பது முதல் பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் அதைக் கொண்டாடுவது வரை வாழ்வின் ஒவ்வொரு தருணத்துக்குமான அழைப்பிதழ்களை, வாழ்த்து அட்டை களை உங்கள் கற்பனைத் திறன் சேர்த்து வடிவமைத்துக்கொள்ள உதவும் தளம். கெட் டுகெதர் விழாக்கள்,பார்ட்டி களைக் கலகலப்பாக்கவும் ஐடியாக்கள் கொட்டிக்கிடக்கின்றன!  

மன்னவன் வந்தானடி தோழி... http://isaikarukkal.blogspot.in

விகடன் வரவேற்பறை

'உறுமீன்களற்ற நதி’, 'சிவாஜி கணேசனின் முத்தங்கள்’ போன்ற அருமையான கவிதைத் தொகுப்புகளைக் கொடுத்த கவிஞர் இசையின் வலைப்பூ. கவிதைப் பூக்களே வலைப்பூ முழுக்க சிதறிக்கிடக் கின்றன. சக கவிஞர்களின் கவிதைத் தொகுப்பைக்கூட கவிதைக்கு உரிய சாயலுடன் விமர்சனம் செய்கிறார் இசை. பிரபல ஆளுமைகளை முன்வைத்து எழுதி இருக்கும் கவிதைகளின் சுயஎள்ளல்... செம ரவுசு!

மாலைப் பொழுதின் மயக்கத்திலே...  இசை: அச்சு
வெளியீடு: சோனி மியூஸிக்  விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

க்கா காபி ஷாப் ஆல்பம்! வெஸ்டர்ன் பீட், ராக் பேண்ட் ஸ்டைல் பாடலாக ஹேமச்சந்திரா மற்றும் அச்சுவின் குரலில் 'ஓ பேபி கேர்ள்’ துள்ளாட்டம் போடவைக்கிறது. நடிகை ரோஹிணி எழுதியிருக்கும் 'என் உயிரே...’ பாடல்தான் ஆல்பத்தின் ஹைலைட். மூன்று வெவ்வேறு ஜானர்களில் கார்த்திக், சித்ரா, பாம்பே ஜெயஸ்ரீ குரல்களில் ஆல்பம் முழுதும் விதவித இசைக் கோப்புகளோடு கொட்டிக்கிடக்கிறது இந்தப் பாடல். நீண்ட இடைவெளிக்குப் பின் சின்னக்குயிலின் குரலைக் கேட்பது தனி சுகம்! 'ஏன் இந்தத் திடீர் திருப்பம்...’, 'கடல் கரையிலே...’ பாடல்களை அதன் டியூன்களுக்காகவே பல முறை கேட்கலாம்! மெலடி யும் பீட்டுமாகக் கண்ணா மூச்சி விளையாட்டுக் காட்டும் இந்த ஸ்டைல் இசை புதுசாக... தினுசாக அசத்துகிறது!