மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்
தொகுப்பு: ஏ.கே.செட்டியார்
வெளியீடு: சந்தியா பதிப்பகம், 57, 53-வது தெரு,
9-வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-83.
பக்கம்: 360  விலை:

விகடன் வரவேற்பறை

180

விகடன் வரவேற்பறை

நூறாண்டுகளுக்கு முந்தைய தமிழகம்பற்றிய தகவல்கள், குறிப்புகள், உண்மைகள் என ஒவ்வொரு பக்கத்திலும் ஆச்சர்யங்களைப் பொதிந்துவைத்திருக்கிறார் ஏ.கே.செட்டியார். கழிப்பறை இல்லாத, போதிய இருக்கைகள் இல்லாத ரயிலின் மூன்றாம் வகுப்புப் பயணங்கள் முதல், விமானப் பயண நகைச்சுவை வரை சுவாரஸ்ய நடையில் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. மகாபலிபுரம், திருவண்ணாமலை போன்ற இடங்கள் தற்போது எவ்வளவு பொலிவிழந்து இருக்கின்றன என்பது இந்தக் கட்டுரை களைப் படிக்கும்போதுதான் உறைக்கிறது. உரைநடைகளின் வேறுபட்ட தன்மைகளை அறிந்து கொள்ள இளைய தலைமுறை வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

சின்ன கண்ணன் சிரிக்கிறான்  இயக்கம்: விஜயகணபதி  

விகடன் வரவேற்பறை

ப்ளே ஸ்கூலின் ஆண்டு விழாவில் அச்சுவை ரைம்ஸ் சொல்லத் தயார்படுத்துகிறார் வகுப்பாசிரியர். ஆனால், அவனை டான்ஸ் ஆடச் சொல்கிறார் அச்சுவின் அம்மா. விழா நாளன்று மேடையில் மொத்தக் கூட்டத்தையும் பார்த்து மிரண்டு அழத் துவங்குகிறான் அச்சு. தவறை அவனது பெற்றோர் புரிந்துகொண்டார்களா என்பது க்ளைமாக்ஸ். குழந்தைகளின் சுதந்திரம்பற்றிய பளிச் கருத்து, ரசனை ஒளிப்பதிவு, ரம்மிய இசை அனைத்தும் சேர்ந்து ரசிக்கவைக்கின்றன.

வள்ளலார் புகழ்! http://suddhasanmargham.blogspot.in

விகடன் வரவேற்பறை

ருட்பிரகாச வள்ளலார்பற்றிய தகவல்களைத் தொகுக்கும் வலைப்பூ. 'திருக்குறளும் திருஅருட்பாவும்’, 'பட்டம் என்பது எது?’ போன்ற கட்டுரைகள் சிந்தனைத் திரியைத் தூண்டுகின்றன. வள்ள லாரின் பாடல்களும் அவற்றுக்கான விளக்கங் களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவேற்றப் பட்டு இருப்பது சிறப்பு.

தினமும் நேசித்து வாசி!  http://dailylit.com

விகடன் வரவேற்பறை

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் தளம். இந்தத் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கும் புத்தகங்களில் நமக்குப் பிடித்தவற்றைக் குறிக்க வேண்டும். அந்தப் புத்தகத்தின் பகுதிகளைச் சிறு சிறு அத்தியாயங்களாக நமக்குத் தினமும் மின்னஞ்சல் செய்வார்கள். 'ஐந்து நிமிடத்துக்குள் படிக்குமாறு’, 'பத்து நிமிடத்துக்குள் படிக்குமாறு’ என்று நமது விருப்பத்தைக் குறிப்பிட்டால், அதற்கு ஏற்ப பகுதி களை அனுப்பும் இந்தச் சேவை முற்றிலும் இலவசம்.  

கழுகு  இசை: யுவன்ஷங்கர் ராஜா
வெளியீடு: சோனி மியூஸிக்  விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

'ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்...’ பாடலை 'சித்தப்பா’ கிருஷ்ணராஜ், 'மகன்கள்’ வேல்முருகன்-சத்யன் சிலாகித்து ரசித்துப் பாடியிருக்கிறார்கள். நா.முத்துக்குமாரின் வரிகளில், குழலினிமையோடு ப்ரியா பாடிய 'ஆத்தாடி மனசுதான்...’ காத்தாடித் தாலாட்டு. யுவனின் மெஸ்மரிசக் குரலில் ஒலிக்கும் 'பாதகத்தி கண்ணுபட்டு’ மென்மெலடி. 'வாடி வாடி...’ கிராமியக் குத்துப்பாடலின் பீப்பி டும்டும் மெட்டு ஆட்டம் போடவைக்கிறது. 'ஆத்தாடி மனசுதான்...’ பாடலை ஒன்ஸ்மோர் பாடி இருக்கும் கார்த்திக் ராஜாவின் குரல், இசைஞானியின் இளம்பிராயத்தை நினைவூட்டுகிறது. மாடர்ன் டெக்னோ இசையில் இருந்து விலகி, புது ஸ்டைலில் ஈர்க்கும் 'கழுகு’, யுவனின் ஹிட் லிஸ்ட்டில் இடம் பிடிக்கும்.