மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்  அழகிய பெரியவன்
வெளியீடு: நற்றிணைப் பதிப்பகம், எண் 123கி, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5.
பக்கம்: 144  விலை:

விகடன் வரவேற்பறை

100

விகடன் வரவேற்பறை

ழகிய பெரியவனின் 12 சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு. புளியம் பூக்கள், ஒளிச்செவ்வகம், வெளுப்பு போன்ற கதைகளில் அழகிய பெரியவனின் எழுத்துகள் பொலிவும் அழகுமாக மிளிர்கின்றன. இன்னும் எழுதி முடிக்காத தலித் மக்களின் சோகங்களை, கதை சொல்லும் ரசனை கெடாமல் படைப்பாக்கி இருக்கிறார். தொகுப்பில் 'புலன்’ கதைக்கு முத்திரைக் கதை அந்தஸ்து வழங்கத் தோன்றுகிறது. பல கதைகளில் கொஞ்சமே தவறினாலும் பிரசாரத் தொனி எட்டிப் பார்க்கும் ஆபத்தை அழகாகத் தவிர்த்திருக்கிறார். கதை களின் அரசியலும் அதில் பொதிந்திருக்கும் மனிதமும் வாசகன் மனதை ஆக்கிரமிக்கும்!

கேள்விக்கென்ன பதில்!  
www.coolquiz.com

விகடன் வரவேற்பறை

ருமையான பொழுதாக்கத்துக்குச் சிறந்த தளம். திரைப்படங்கள், அறிவியல், ஆங்கிலச் சொற்கள், வரைபடங்கள் எனப் பல துறைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். அதில் இருந்து கேள்விகளை எதிர்கொள்ளலாம். ஐந்து வாய்ப்புகள் தரப்படும். தவறான பதில்கள் வாய்ப்புகளைக் குறைக்கும். சரியான பதில்கள் உங்கள் ஸ்கோரைக் கூட்டிக்கொண்டே இருக்கும்!  

அறிவோம் அறிவியல்! www.ariviyal.in

விகடன் வரவேற்பறை

சிக்கலான அறிவியல் சங்கதிகளை எளிமையாக விளக்கும் வலைப்பூ. 'மனிதனின் காலடித் தடம் பதியாத இடம் கடலடித் தரைதான்’ என்பது முதல், 'இதுவரை ஐந்து முறை செவ்வாயில் இருந்து விண்கற்கள் பூமியில் விழுந்திருக்கின்றன’ என்பது வரை பூமிக்குக் கீழேயும்  ஆகாயத்துக்கு மேலேயும் பல விஷயங்கள் பதிவிடப்பட்டு இருக்கின்றன. 'காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்’ என்றால் என்ன என்பதுபற்றி வரைபடங்களுடன் விளக்கமும் இந்துமா கடலுக்கு அடியில் இருக்கும் உலோக உருண்டைகளை சீனா அபகரிக்க முனையும் முயற்சியுமாகப் பலபல தகவல் புதையல்கள்!

ஒரு கல் ஒரு கண்ணாடி இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வெளியீடு: சோனி மியூஸிக்  விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

ஹாரிஸ் ஜெயராஜின் பழகிய இனிய டியூன்கள் நிரம்பிய ஆல்பம். 'காதல் ஒரு பட்டர்ஃப்ளை...’ பாடலில் ஆலாப் ராஜு, ஹேமச்சந்திரன், சுனிதா சாரதியின் குரல்களில் அத்தனை எனர்ஜி. மெலடி பாடலான 'அழகே அழகே...’வுக்கு குத்துப்பாடல் புகழ் முகேஷைக் குரல் கொடுக்கவைத்திருப்பது 'மாத்தி யோசி’ டச். அதே பாடலில் குறிப்பாக ஸ்ரீமதுமிதாவின் குரல், 'பலப் பல கனவுகள் இருக்கு...’ என உச்சம் செல்லும் இடம் ஐஸ்க்ரீம் ஜில். 'அகிலா... அகிலா’, 'அடடா ஒரு தேவதை...’ பாடல்கள் ஹாரிஸ் பிராண்ட் பாடல்கள் என்பதைத் தவிர, எந்த விசேஷமும் இல்லை. ஆல்பத்தின் ஹிட் மாஸ்டர் 'வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு...’ பாட்டு. வேல் முருகனும் நரேஷ் ஐயரும் குத்தி எடுக்கும் பாடலில் 'கண்ணக் கலங்கவைக்கும் ஃபிகரு வேண்டாண்டா... நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா!’ என வரிகளில் வஞ்சிர மீன் மசாலா சேர்த்திருக்கிறார் கவிஞர் நா.முத்துக்குமார்!      

பூச்சாண்டி இயக்கம்: சைமன் ஜார்ஜ்
வெளியீடு: நாளந்தா வே

விகடன் வரவேற்பறை

வீட்டைவிட்டு ஓடிப்போகும் சிறுவர்களை இந்தச் சமூகம் எப்படிப் பந்தாடுகிறது என்பதுதான் கதை. 24X7 மணி நேரமும் சண்டை போடும் பெற்றோரால் வீட்டைவிட்டு ஓடி வந்து மெரினா கடற்கரையில் அடைக்கலம் ஆகிறான் ஒரு சிறுவன். சிறுவர்களைக் கடத்தும் கும்பலிடம் இருந்து அவனை மீட்கிறான் சுண்டல் விற்கும் இன்னொரு சிறுவன். மீண்டும் பிரச்னைகள் வர, இருவரும் என்ன செய்கிறார்கள் என்பதை எளிமையாக - அதே சமயம் அழுத்தமாகச்  சொல்லி இருக்கிறார்கள். சிறுவர்களைக் கடத்தும் வியூகங்களைக் காட்சிகள் மூலம் மட்டுமே சொல்லியிருப்பது மிரட்டல். கேமரா கோணங்களும் கண்களிலேயே குரூரம் காட்டும் பாத்திரங்களும் 'அடுத்தது என்ன?’ என்று பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. கவனிக்கவைக்கும் அறிமுக முயற்சி!