மிஸ்டர் மியாவ்
##~## |
• காலித்தனம் ப்ளஸ் காமெடித்தனம் இரண்டும் கலந்து அமீர்கான் தயாரித்த, 'டெல்லி பெல்லி’ திரைப்படம் பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட். அந்தப் படத்தை தமிழில் ரீ-மேக் செய்யப்போகிறது யு டி.வி. நிறுவனம். டைரக்டர் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் வசனங்களை மகேந்திரனின் மைந்தன் ஜான் எழுதுகிறார். இம்ரான்கான் வேடத்தில் ஆர்யாவும், விர்தாஸ் ரோலில் சந்தானமும், குணால் ராய் கபூர் கேரக்டரில் பிரேம்ஜியும் நடிக்கிறார்கள்
• வெற்றிமாறன் எந்த நேரத்தில் 'வடசென்னை’ படத்தை ஆரம்பித்தாரோ... முதலில் சிம்பு, அடுத்து ஜீவா, இப்போது தனுஷ் என்று தொடர் மாற்றங்கள். இப்போது 'வடசென்னை’ ஸ்கிரிப்ட்டைத் தூக்கி பரணில் போட்டுவிட்டாராம். தயாநிதி அழகிரி தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் படத்துக்காக ஒரு புதுக் கதையைத் தயார் செய்து வருகிறார்.

• குஷ்பூ ஆத்துக்காரர் சுந்தர்.சி நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டார். ''நானும் நிறைய படத்துல மேக்கப் போட்டு கேமரா முன்னாடி நின்னு நடிச்சுப் பார்த்துட்டேன். மனசுக்குத் திருப்தியே இல்லை. டைரக்ஷன் பண்றப்போ ஏற்படுற மனநிறைவு, ஆத்ம திருப்தி வேற எதிலேயும் கிடைக்கலை. இனிமே தொடர்ந்து டைரக்ஷன்தான்'' என்கிறார்.
• ஏற்கெனவே தான் தயாரித்த, 'கோவா’ படத்தை வாங்கி நஷ்டம் அடைந்தவர்கள், 'கோச்சடையான்’ ரிலீஸ் நேரத்தில் குடைச்சல் தரக்கூடாது என்பதில் உஷாராக இருக்கிறார், சௌந்தர்யா. அதனால் நஷ்டம் அடைந்த நபர்களை முன்கூட்டியே அழைத்து செட்டில் செய்யும் வேலையில் இப்போதே இறங்கி விட்டாராம் டைரக்டர் சௌந்தர்யா!
• வாரிசு சண்முகப் பாண்டியனுக்காக கதை கேட்டு கதை கேட்டு வெறுத்துப் போயிருந்தார், விஜயகாந்த். சமீபத்தில், ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'பிருந்தாவன்’ தெலுங்குப் படத்தைப் பார்த்து அசந்து விட்டாராம். உடனே அதை தமிழில் ரீ-மேக் செய்யும் உரிமையை வாங்கி விட்டார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த வேடத்தில் தமிழில் ஜூனியர் விஜயகாந்த் நடிக்கிறார்.
• ஷூட்டிங் ஸ்பாட்டில் கூத்தும் கும்மாளமுமாக இருப்பது ஆர்யாவின் இயல்பு. 'இரண்டாம் உலகம்’ படத்தில் ஜோடி போடும் அனுஷ்காவையும் தன்வழிக்குக் கொண்டுவந்து அரட்டைப் பேர்வழி ஆக்கிவிட்டார், ஆர்யா. ஆனால் படத்தின் டைரக்டர் செல்வராகவன் எப்போதும் அமைதிப் பார்ட்டி. அதனால் ஆர்யா - அனுஷ்கா அலட்டல்களைப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர் திடீரென டென்ஷனாகி, யூனிட் ஆட்கள் முன்னிலையிலேயே வறுத்து எடுத்து விட்டாராம். இப்போது படப்பிடிப்பு கப்சிப் என்று நடக்கிறது.
• விஜய் தயாரிக்கும் 'சட்டம் ஒரு இருட்டறை’ ரீ-மேக்கில் ஹீரோவாக பிரபுவின் வாரிசு விக்ரம் நடிக்கப் போவது தெரிந்ததே. நாயகனின் அக்காவான போலீஸ் கேரக்டருக்கு ஏகப்பட்ட நடிகைகளை அழைத்து டெஸ்ட் செய்தனர். அத்தனையும் அம்பேல். இப்போது அந்தக் கேரக்டரில் நடிக்க இருப்பவர், ரீமாசென். கல்யாணத்துக்குப் பின்னே ரீமா நடிக்கும் முதல் தமிழ் படம்!
ஏவி.எம். சரவணன் விளக்கம்:
கடந்த 25.4.2012 இதழில் ரஜினியின் 'கோச்சடையான்’ படம் தயாரிப்பு பற்றி வெளியான செய்திக்கு ஏவி.எம்.சரவணன், 'நண்பர் என்ற முறையில் ரஜினி என்னை சந்தித்தது மட்டுமே உண்மை. 'கோச்சடையான்’ பற்றி அவர் என்னிடம் பேசவோ... நான் மறுக்கவோ இல்லை’ என்று விளக்கம் அளித்துள்ளார்.
