உங்கள் எம்.எல்.ஏ. எப்பூடி?
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

• ரஜினியின் 'மூன்று முகம்’ அலெக்ஸ் பாண்டியன் வேடத்தை அப்படியே 'சிறுத்தை’ படத்தில் காப்பி அடித்தார் கார்த்தி. அதுபோலவே, 'நெற்றிக்கண்’ ரஜினி வேடத்தை சமுத்திரக்கனி படத்துக்கு ஜெராக்ஸ் எடுக்கிறாராம் ஜெயம் ரவி.  

மிஸ்டர் மியாவ்
##~##

• நீண்ட நாள் சிறை வாசத்துக்குப் பின் திரைவாசம் பிடிக்கிறது, சன் டி.வி. முன்னாள் ஊழியரான சக்சேனா - ஐயப்பன் கூட்டணி. புதிய படங்களை வாங்கி ரிலீஸ் செய்ய இருக்கிறது. முதல் போணியாக, 'மனம் கொத்திப் பறவை’யை வாங்கி இருக்கிறார்கள்.

• தமிழில் விக்ரம், தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில், முதன்முறையாக ஷங்கருடன் இணைகிறார் பி.சி ஸ்ரீராம். பாலிவுட் சென்ற ஷங்கரை தனியாகச் சந்தித்து சான்ஸ் கேட்ட அசின்தான் நாயகி.

• 'ஈரம்’ அறிவழகன் இயக்கத்தில் நகுல் நடிக்கும் 'வல்லினம்’ படத்தில் வில்லனுக்கு வெயிட்டான கேரக்டர். ஏகப்பட்ட நடிகர்களை டெஸ்ட் செய்தும் யாருக் கிளிக் ஆகவில்லை என்ற கவலையில் இருந்தார் அறிவு. தகவல் கேள்விப்பட்டு, 'வில்லனாக நான் தயார். உங்களுக்கு ஓகே-வா?’ என்று அறிவு முன்னால் ஆஜரானாராம் சித்தார்த். இன்ப அதிர்ச்சியில் எகிறிக் குதித்து படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டார் அறிவு.

• 'கலகலப்பு’ கமர்ஷியலாகக் கல்லா கட்டிவிட்டதில், குஷ்பூ ஆத்துக்காரருக்கு குஷியோ குஷி. 'கலகலப்பு செகண்ட் பார்ட் இயக்க நான் ரெடி... தயாரிக்க நீங்க ரெடியா?’ என்று தயாரிப்பாளரிடம் கேட்டு இருக்கிறார். கண நேரம்கூட யோசிக்காமல் அவர் ஓகே சொல்ல, அதே கவர்ச்சி யூனிட் மீண்டும் ஷூட்டிங் செல்ல இருக்கிறது.