மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

மீதி வெள்ளித்திரையில்... சு.தியடோர் பாஸ்கரன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை,நாகர்கோவில்
பக்கம்:152 விலை:

விகடன் வரவேற்பறை

100

விகடன் வரவேற்பறை

திரைப்படங்களைப்பற்றிய புரிதல் எப்போதும் அவசியமாக இருக்கிறது தமிழர்களுக்கு. மேலோட்டமாக இல்லாமல், எடுத்துக்கொண்ட கட்டுரையின் அடியாழத்துக்குச் செல்கின்றன கட்டுரைகள். தமிழ்த் திரையின் எல்லைகளைப் பெரும் தரப்புக்குக் கொண்டுசென்ற டைரக்டர் ஸ்ரீதர் பற்றிய கட்டுரை மிகவும் குறிப்பிடத்தக்கது. சினிமாவில் 'இடைவேளை’ வந்த விதம் பற்றிய ஒரு கட்டுரை ஆச்சர்ய தகவல் கொண்டது. நாகேஷ் பற்றிய கட்டுரையும் அத்தகையது. தமிழ் சினிமாவின் ரசனை குறித்த நல்ல புத்தகமாக இதனைக் குறிப்பிடலாம். தமிழ் சினிமாவின் ஆதி அந்தம் தெரியவும், புரியவும் நல்ல நூல்!

மோனலிசாபுன்னகை! http://amuttu.com/

விகடன் வரவேற்பறை

ழத்து எழுத்தாளரான அ.முத்துலிங்கத்தின் வலைப்பூ. சிறுகதைகள், கட்டுரைகள், நிகழ்வுகள், நேர் காணல்கள், கவிதைகள், அறிவிப்புகள் எனப் பல தலைப்பு தொகுப்பு கள். 'கடவுளின் காதுகளுக்கு’ என்ற தலைப்பிலான நாட்குறிப்பு கிறிஸ்து மஸ் விழா குறித்த நெகிழ்வும் மகிழ்வும் கலந்த பதிவு. கவிஞர் மதுமிதா, அ.முத்துலிங்கத்தை எடுத்த நேர்காணலான, 'மோனலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது’ என்ற தலைப்பிலேயே கவித்துவம் ததும்பு கிறது!  

ஃபேமிலி ஆல்பம்! http://awkwardfamilyphotos.com

விகடன் வரவேற்பறை

குடும்பப் புகைப்படங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை. காலத்தையும், கலாசாரத்தையும், மனநிலையையும் பிரதிபலிப்பவை. அப்படி உலகம் முழுக்க எடுக்கப்பட்ட குடும்ப போட்டோக்களை காட்சிக்குத் தருகிறது இந்தத் தளம். விதவிதமான உணர்ச்சியோடு இருக்கும் புகைப்படங்கள் பார்க்கவே அவ்வளவு அழகு. நமது குடும்பப் புகைப்படங்களையும் இதில் அப்லோட் செய்யலாம்!

ஃபேர் அண்ட் லவ்லி இயக்கம்: சூர்யா பாலகுமாரன்

விகடன் வரவேற்பறை

சென்னை இளைஞனின் காதல் கதை. விபத்தாக, விபத்தில் நாயகியைச் சந்திக்கும் நாயகன், அவளது விலாசம் தேடி அலைகிறான். அவள் தன் உயர் அதிகாரியின் மகள் என்பது தெரிய வருகிறது. நாயகி சந்திக்க அழைக்க, கெத்து காட்டுவதற்காக பிஸிபோல் நடித்து மாட்டிக்கொள்கிறான். இருவரும் பிரிகிறார்கள். மேற்படிப்புக்காக அமெரிக்கா கிளம்பும்போது நாயகிக்குக் காதல் பிறக்கிறது. அதிகாரி அப்பா ரெட் சிக்னல் காட்டுகிறார். நண்பர்களின் உதவியோடு எப்படி இருவரும் சேர்கிறார்கள் என்பதை காமெடியாகச் சொல்லியிருக்கிறார் சூர்யா. நீளம்தான் பிரச்னை!

கோ  இசை: ஹாரிஸ் ஜெயராஜ்   
வெளியீடு: சோனி மியூஸிக்  விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

ழகிய தமிழ் வார்த்தைகளை ராப் சுனாமியில் மூழ்கடிக்கும் இசை 'அகநக’ பாடலில் ததும்பி வழிகிறது. ஆல்பத்தின் செம ஸாங் 'அமளி துமளி’. ஜாலி தாளம், உற்சாக வார்த்தைகள் என்று கால்களைத் தானாகவே தாளமிடவைக்கிறது, ஹாரிஸின் மெலடி மேஜிக்கில் இன்னொரு என்ட்ரி 'என்னமோ ஏதோ’ பாடல். தமிழ் ஃபீலிங்ஸ்களுக்கு இடையில் அதிராமல் சுருதி கூட்டும் ஆங்கில ராப் கூட வசீகரம்தான். மென் வார்த்தைகளைக்கொண்டு காதுகளை உறுத்தாமல் கடக்கிறது 'வெண் பனியே முன் பனியே’ பாடல்!