மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

தாண்டவம்
இசை;ஜி.வி.பிரகாஷ் குமார்
வெளியீடு; ஜங்க்லீ மியூஸிக்  விலை;

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

ஜி.வி.பிரகாஷின் 25-வது ஆல்பம். 'யாரடி யாரடி மோகினி...’ பாடலில் உற்சாக உருமி அடிக் கிறார் ராகுல் நம்பியார். ஹரிச்சரண்-வந்தனா ஸ்ரீனிவாசனின் குரலில் 'ஒரு பாதிக் கதவு நீயடி மறு பாதிக் கதவு நானடி...’ மென்தூறல். அலிசா-மரியாவின் மேஜிக் குரல்களில் 'வில் யூ பி தேர்...’ ஆங்கிலத்தில் தொடங்கி தமிழோடு இழைந்து தடதடக் கிறது. காதல்வயப்பட்டவனின் வெட்கக் குரலாக ஒலிக்கும் 'அதிகாலைப் பூக்கள்’ பாடலை அற்புதமாகப் பாடி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். 'உயிரின் உயிரே...’ பாடலில் 'அகலாமலே அணுகா மலே இந்த நேசத்தை யார் நெய்தது...’ என்று சைந்தவி பாடும் இடம் க்ளாஸ். 'அனிச்சம் பூவழகி’ கிராமத்துக் கல்யாண வீடுகளில் ரொம்ப நாள்  ஒலிக் கும். எஸ்.பி.பி. குரலில் ஹீரோ வின் 'ரிவெஞ்ச்’ அத்தியாயமாக ஒலிக்கும் 'தாண்டவ’ப் பாடல் கனகச்சிதம்.

http://www. jillgreenberg.com/
உலகின் நம்பர் ஒன் போட்டோகிராஃபர்!

விகடன் வரவேற்பறை

லகின் மோஸ்ட் வான்டட் புகைப்படக்காரரான ஜில் க்ரீன் பெர்க்கின் வலைதளம். கேமரா வில் சிறைப்பிடித்த படத்தை, போட்டோஷாப்பில் இழைத்து இழைத்து மெருகேற்றும் கலையை உலக அளவில் பரவச்செய்தவர். மைக்ரோசாஃப்ட், கோகோ கோலா, பெப்சி போன்ற நிறுவனங்களின் பொருட்களை உலகுக்கு அறிமுகப் படுத்தவும், அர்னால்டு, ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், மார்க் ஸக்கர்பெர்க் ஆகியோரின் புரொஃபைல் படங்களாகவும் ட்ரீம் வொர்க்ஸ், சோனி பிக்சர்ஸ், பாரமவுன்ட் பிக்சர்ஸ், எம்.ஜி.எம்., டிஸ்னி, ஃபாக்ஸ் ஸ்டுடியோஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங் களின் போஸ்டர்களாக விரிவதும் இந்தப் பெண்ணின் படங்கள்தான். ஒன்றரை மணி நேர சினிமாவோ, ஐந்து வருஷ சீரியலோ, மூன்று லட்ச ரூபாய் கணினியோ... ஜில் பெர்க்கின் ஒற்றைப் படத்தில் அதன் அத்தனை அம்சங்களும் பளிச்எனப் பதிவாவது அழகு.

http://samudrasukhi.blogspot.in
தனி ஆவர்த்தனம்

விகடன் வரவேற்பறை

'கலைடாஸ்கோப்’ என்ற பெயரில் தன்னைப் பாதிக்கும் அன்றாட நடவடிக்கைகளை எழுதுகிறார். ஒவ்வொன்றும் சுவாரஸ்யம். 'ஒளி யின் வேகத்தைவிட வேகமாக ஓடிவந்து திரும்பிப் பார்த்தால், நீங்கள் ஓடிவருவது உங்களுக்கே தெரியும். தெரியுமா?’ என்று கேள்வி கேட்டு, அதற்கு ஒரு கட்டுரை. மிகக் குழப்பமான பிரபஞ்ச இயற்பியலைக் குட்டிக் கதைகள் சொல்லி, எளிமையாக விளக்குகிறார். அறிவியல் மட்டும் அல்ல, ரசனையான ஹைக்கூ, சிறுகதைகளும் எழுதுகிறார். 'கலைடாஸ்கோப்’பில் ஜோக்கு களும் உண்டு. ஒரு சாம்பிள்...முல்லாவுக்கு யாருடனோ சண்டை.  முகம் எல்லாம் ரத்தக் காயம். நள்ளிரவில் வீட்டுக்கு வந்தார். மனைவி தன்னை இந்தக் கோலத்தில் பார்த்தால் பூகம்பம் வந்துவிடும் என்று பாத்ரூமுக்குச் சென்று அவசரமாக ஒரு க்ரீமை எடுத்து முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கொண்டு படுத்துவிட்டார். விடிந் ததும் மனைவி கத்தினாள், ''என்னங்க, யாரு இந்த பாத்ரூம் கண்ணாடி பூரா டூத் பேஸ்ட்டை அப்பிவெச் சது?''

இப்படிக்கு தோழர் செங்கொடி
வெளியீடு: ஏ.சி.இ.சினிமாஸ்
இயக்கம்:வெற்றிவேல் சந்திரசேகர்

விகடன் வரவேற்பறை

ருளர் இனப் பெண்ணான செங்கொடியின் மரணம் மக்க ளைத் தட்டியெழுப்பி, ஆளும் அரசுக்கு எப்படி அச்சம் ஊட்டியது என்பதை விளக்குகிறது படம். செங்கொடி பறையெடுத்து ஆடுகிற காட்சிகள், தோழர்களோடு பாடல் இசைக்கிற காட்சிகள் நெகிழவைக்கின்றன. ஒளிப் பதிவும் படத்தொகுப்பும் மிக நேர்த்தி. போராட்ட வடிவங்கள் நீர்த்துப்போய், அடையாளப் போராட்டங்களாகச் சுருங்கிவிட்ட அவலத்தைப் பேசுவதோடு இந்தப் படம், மாற்றுப் போராட்ட முறைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தையும் வலியுறுத்து வது சிறப்பு. படத்தின் தொடக்கத்தில் வரும் இருளர் இனம்குறித்த காட்சிப் பதிவுகள் பழங் குடியினரின் அவலமான வாழ்வியல் நிலைமையைச் சொல்கிறது. மரண தண்டனைக்கு எதிராகவும் தற்கொலைக்கு எதிராகவும் உரக்கப் பேசுகிறது இந்த ஆவணப்படம்.

சில இறகுகள் சில பறவைகள்
வண்ணதாசன்
வெளியீடு; சந்தியா பதிப்பகம், பு.எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை - 83.
பக்கம்; 208விலை;

விகடன் வரவேற்பறை

150

விகடன் வரவேற்பறை

டிதங்கள் அருகிவிட்ட காலகட்டத்தில், வண்ணதாசன் தன் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார். வண்ணதாசனின் சிறுகதையையோ, கல்யாண்ஜியின் கவிதையையோ வாசிக்கும் உணர்வை இந்தக் கடிதங்களும் கொடுக்கின்றன.

எட்டு வயதுக் குழந்தை முதல் கோணங்கி மாதிரியான எழுத்தாளர் கள் வரை வண்ணதாசனுக்கு எல்லாத் தளங்களிலும் நண்பர்கள் உண்டு என்பதை இந்த நூல் சொல்கிறது. ஒவ்வொருவருடனும் வண்ணதாசனுக்கு உள்ள அழகான உறவு கடிதங்களில் வெளிப்படு கிறது என்றால், அவர்கள் மீது வண்ணதாசன் கொண்டிருக்கும் அன்பும் மதிப்பும் அவர்களைப் பற்றி எழுதியுள்ள சிறுகுறிப்பில் தெரிகிறது.

புதியவர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் தேர்ந்த எழுத்தாளராகவும், கந்தர்வன் போன்றோருக்கு எழுதுகையில் சக நண்பனாகவும், மருத்துவர் மாணிக்கவாசகத்துக்கு எழுதும்போது நன்றியுணர்வுடைய ஒரு முன்னாள் நோயாளியாகவும்... ஒரு மனிதனின் சகல பரிமாணங்களும் தெரிகின்றன. கோணங்கிக்கு அவருடைய இயற்பெயரான இளங்கோ என்ற பெயரைக் குறிப்பிட்டு எழுதும் அளவுக்கு நெருக்கமானவராக இருந்தாலும், 'என் எழுத்தின் மேல் எல்லாம் அவனுக்குப் பெரிய அபிப்பிராயம் ஒன்றும் கிடையாது’ என்று சொல்லும் நேர்மையில் வியக்கவைக்கிறார். பேத்திக்குக் கதை சொல்லும் தாத்தாவாக, தன் வாசகரின் எதிர்வினைக்குக் காத்திருப்பவராக, இடதுசாரி எழுத்தாளர்களிடம் பாசம்கொண்டவராக, ஓர் இசை ரசிகராக, எஸ்.ராமகிருஷ்ணனின் உரைகளைக் கேட்க விரும்பும் சுவைஞராகப் பரிணமிக்கிறார். கடிதங்களில் வெளிப்படும் எளிமையும் நேர்மையுமே இந்தக் கடிதத் தொகுப்பை மனதுக்கு நெருக்கமாக்குகின்றன. எழுதும்போது தன்னால் நிறுத்த இயலாது என்பதை 'பேனா முனையின் போக்குவரத்தை ஸ்தம்பிக்கவைப்பது, இந்த நெரிசல் நேரத்தில் உகந்த காரியமில்லை’ என்கிறார் அற்புதமாக.

'குழந்தைகளை விசாரித்ததாகக் கூறவும்’ என்றெழுதுகிற சம்பிர தாயங்களுக்கு மத்தியில் 'விசாரிப்பைவிட, அவர்களைத் தொட்டுப் பேசவே விரும்புகிறேன். தொடுகைதான் ஆதி மொழி’ என்கிறார். அன்பை நேசித்து, அன்பைச் சுவாசித்து, அன்பில் உருகும் மனம் உள்ளவர் வண்ணதாசன் என்பதற்கு இந்தக் கடிதங்கள் இன்னொரு சாட்சி.