மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

அன்புள்ள அம்மா  மணவை பொன்.மாணிக்கம்
வெளியீடு: கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர்,
சென்னை-7.  பக்கம்: 280 விலை:

விகடன் வரவேற்பறை

160

விகடன் வரவேற்பறை

ன்பின் அருஞ்சொற்பொருள் அம்மா. இந்தத் தொகுப்பில் இயக்குநர் ஷங்கர், கே.பாக்யராஜ், சத்யராஜ் உள்பட பல துறைகளைச் சேர்ந்த 75 பிரபலங்கள் தங்களின் அம்மா பற்றிப் பேசுகின்றனர். எதிர்பாராத பின்னணியுடன் விரியும் ஒவ்வொரு கதையும் நெகிழ்ச்சியான, ஓர் உணர்ச்சிமயமான சினிமா போலவே இருக்கிறது. குக்கிராமங்களில் தங்களை வருத்தி, பிள்ளைகளை முன்னேற்ற உழைத்துக்கொண்டு இருக்கும் தமிழ்த் தாய்களின் தியாகத்துக்கு இந்நூல் ஒரு சிறந்த உதாரணம்!

ஈழத்துக் கலைஞர்கள்  www.kalaignarkal.blogspot.com

விகடன் வரவேற்பறை

விஞர்கள், பாடகர்கள், நிகழ்த்துக்கலை கலைஞர்கள் என ஈழத்தின் பல்வேறு கலைக்களங்களில் செயல்படும் கலைஞர்கள் பற்றிய வலைப்பூ. வில்லிசைக் கலைஞர் நாச்சிமார் கோயிலடி ராஜன், மெல்லிசைக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன், பாப்பிசைப் பாடகர்கள் ஏ.இ.மனோகரன், நித்தி கனகரத்தினம் எனப் பல்வேறு கலைஞர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. 30 ஆண்டு காலம் போரினால் பாதிக்கப்பட்ட சமூக நெருக்கடி களுக்கு மத்தியில் உருவான கலைஞர்களை ஆவணப்படுத்தும் வலைப்பூ!

Identity இயக்கம்: ஸ்ரீகண்டன்
முகவரி: 12, நாகப்பா தெரு, பேலஸ் குட்டகள்ளி, பெங்களூரு-560003.

விகடன் வரவேற்பறை

தீம் பார்க்கில் எலி முகமூடி அணிந்து, குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டும் இளைஞருடன் சிநேகமாகிறான் ஒரு சிறுவன். ஆனால், வீட்டில் அந்த இளைஞனை, சிறுவனுக்கு அடையாளம் தெரியவில்லை. பார்த்தும், பார்க்காததுபோல இருக்கிறான். 'அவனால் பார்க்க முடியும். ஆனால், தெரியாது’ என்கிறார் அப்பா. காரணம், சிறுவனுக்கு முகத்தை நினைவில் வைத்துக்கொள்ளும் மூளையின் பகுதி சிதைந்து இருக்கிறது. அமெரிக்காவில் அதிகமாகவும், உலகம் முழுக்கப் பரவலாகவும் இருக்கும் இந்த வியாதியை மையமாக வைத்து 13 நிமிடங்களில் நெகிழ்ச்சியான கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகண்டன்!

எதிர்க்கிறோம்... அதனால் இருக்கிறோம்!  www.savetnfisherman.org

விகடன் வரவேற்பறை

லங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் அநீதியை எதிர்க்கும் வலைதளம். டிவிட்டர், ஃபேஸ்புக்கில் இருப்பவர்கள் எளிதாக நுழையக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. 'பூதங்கள் நம் மீனவர்களைக் கொல்கின்றனவா?’ போன்ற கட்டுரைகள், '22 மீனவர்களைக் கொடூரமாகத்தாக்கிய சம்பவங்கள் அடங்கிய வீடியோ காட்சிகள்’, உணர்வுபூர்வமான பின்னூட்டங்கள், எதிர்வினைகள். 'எதிர்க்கிறோம்... அதனால் இருக்கிறோம்!’ என எதிர்ப்பின் இருப்பைப் பதிவு செய்யும் தளம்!

யுத்தம் செய்  இசை: கே 
வெளியீடு: சோனி மியூஸிக்  விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

'வாளமீன்’, 'கத்தாழ’ வரிசையில் மிஷ்கின் ஸ்பெஷல் மஞ்சள் மோகினி பாடல் 'கன்னித்தீவு பொண்ணா’. சீரான தாளகதியில் ஒலிக்கும் பாடலில், நிலவு, மலர், தென்றல் என்று வர்ணிக்கப்பட்ட பெண்ணை 'கடிச்சா கசக்காத ஸ்வீட் பீடா நீ’, குடிச்சா ஏப்பம் வராத கோலிசோடா நீ’, இடிச்சா உசுரு போகும் தண்ணி லாரி நீ’ என்று 'அடுத்த’ கட்ட ரசனைக்கு நகர்த்திச் செல்லும் வரிகள். தந்தை பாடும் தாலாட்டு தொனியில் 'ஆராரோ ஆரீரோ’ பாடலைப் பாடியிருக்கிறார் மிஷ்கின். ஏற்ற இறக்கம் இல்லாமல் அன்பை மட்டும் குழைத்து ஒலிக்கிறது இயக்குநரின் குரல். 'கபி ஜிந்த்’ பாடலின் மொழி புரியாவிட்டாலும் ரக்கீப் ஆலமின் வசீகர குரல் ஈர்க்கிறது. பாடல்களைக் காட்டிலும் தீம் மியூஸிக்குகள் அதிகம்!