மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

குருதியில் நனையும் காலம்  - ஆளூர் ஷாநவாஸ்
வெளியீடு: உயிர்மைப் பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18.பக்கங்கள்: 136விலை:

விகடன் வரவேற்பறை

100

விகடன் வரவேற்பறை

ல்வேறு இதழ்களில் ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சிறீஷீsமீபீ சிஷீனீனீuஸீவீtஹ் ஆகவே பார்க்கப்படும் இஸ்லாமிய சமுதாயத்தின் உள்ளே நடக்கும் சிக்கல்கள் பொதுச் சமூகம் அறியாதவை. ஊடகங்களாலும் அதிகாரத்தினாலும் தீவிரவாத முகம் கொடுக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் வலியைப் பேசும் நூல். இஸ்லாமியரான ஆளூர் ஷாநவாஸ் தன் சொந்த மதத்தின் பழமைவாதிகளையும் அடிப்படைவாதிகளையும்கூட விமர்சிக்கிறார். ஆனால், அந்த விமர்சனம் எவ்வகையிலும் அவர்களைப் புண்படுத்தாமல் அவர்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அமைந்திருப்பதுதான் வெற்றி. இஸ்லாமியர்களை ஊடகம் எப்படிப் பார்க்கிறது என்பது முதல், இஸ்லாமிய ஊடகங்களின் நிகழ்ச்சிகள் எப்படி இருக்கின்றன என்பது வரை விமர்சனம் செய்கிறது நூல். திரைப்படங்கள் தன் பங்குக்கு மக்கள் மத்தியில் இஸ்லாமியர்கள்குறித்த தவறான சித்திரங்களை விதைப்பதை மிக விரிவாக அலசுவதோடு, இஸ்லாமியர்கள் மைய நீரோட்டத்தில் கலந்து ஊடகங்களைக் கையிலெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார். 'திருமாவளவனை இஸ்லாமிய சமுதாயம் எப்படி நம்புவது?’ என்ற ஷாநவாஸின் கேள்வியும் அதற்கு திருமாவளவன் எழுதிய பதில் கட்டுரையும் சுவாரஸ்யம்.

தீவிரவாதியாக மட்டுமே சித்திரிக்கப்பட்ட அப்துல் நாசர் மதானியின் அரசியல் வாழ்க்கையின் தோற்றம், வளர்ச்சி என்று அவருடைய வேறு பரிணாமங்களைக் காட்டுகிறது நூல். ஒவ்வோர் இஸ்லாமியரின் வாழ்க்கையையும் பாபர் மசூதி இடிப்புக்கு முன், பின் என்று பிரித்துக்கொள்ளும் அளவுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கையில் அந்தச் சம்பவத்துக்குப் பின்னான பொதுப் புத்தியின் குறுக்கீடுகள், அதிகாரத்தின் குறுக்கீடுகள் குறித்துக் கூறும் நூல், அறிவின் அடிப்படையில் இல்லாமல், நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட அயோத்தித் தீர்ப்பைக் கடுமையாகச் சாடுகிறது. நரேந்திர மோடியைப் புகழும் சீமானையும் ஆதிக்க சாதிகளுக்குத் துணைபோகும் ஜெயலலிதாவையும் விமர்சிக்கும் இந்த நூலில், இஸ்லாமியர்கள்குறித்த கட்டுரைகள் மட்டும் அல்லாமல், பரமக்குடிப் படுகொலைகள் குறித்த கடுமையான கண்டனங்களும் இருப்பது தலித்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான நல்லுறவுக்குச் சான்றாக விளங்குகிறது.

மதத்துக்கு வெளியே நின்று தன் கருத்துகளைக் கூறாமல், உள்ளேயே இருந்துகொண்டு தோழமைத் தொனியிலும், உண்மையான அக்கறையுடனும் எளிய மொழிநடையிலும் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரைகள் காலத்தின் அவசியத் தேவை.

உங்களுக்குப் பிடித்ததை... உலகம் ரசித்ததை...
www.stumbleupon.com

விகடன் வரவேற்பறை

ந்தத் தளத்தில் உறுப்பினராகி உங்கள் விருப்பங்களைப் பதிவு செய்துவிட்டால், அது தொடர்பான செய்திகள், வீடியோக்கள், படங்கள், ஜோக்குகள், கட்டுரைகள், விமர்சனங் கள் என அனைத்தும் உங்கள் பார்வைக்கு வைக்கப்படும். உங்கள் ரசனை தொடர்பாக உலகப் புகழ் தளங்களில் ஹிட் அடிக்கும் விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் புரொஃபைல் பக்கத்தில் பரிமாறப்படுவது சிறப்பு. விளையாட்டு, அரசியல், சினிமா, ரொமான்ஸ், பொருளாதாரம், ஜோதிடம், சமையல், நட்பு என எது தொடர்பாகவும் உலகின் ட்ரெண்டை நீங்கள் பின்தொடர உதவும் தளம்!

கருப்பம்பட்டி  இசை: கண்ணன்
வெளியீடு: ஜங்லீ மியூஸிக் விலை:

விகடன் வரவேற்பறை

75

விகடன் வரவேற்பறை

ல்பத்தின் ஹைலைட் 'நாட்டி ராஜா ராஜா...’ பாடல். இந்தியாவின் டிஸ்கோ கிங் பப்பி லஹிரி 80-களின் இந்தி இசைச் சாயலில் பாடி இருக்கிறார். 'ஸிந்தகி, குச் நஹி’ போன்ற எளிய இந்தி வார்த்தைகளைப் போட்டு மழலைத் தமிழில் அவர் பாடி இருப்பது அழகு. நவீன், முகேஷ், செந்தில், சுர்முகியின் கலகல குரல்களில் ஒலிக்கும் 'கருப்பம்பட்டி கருப்பம்பட்டி...’ பொங்கல் கொண்டாட்டப் பாட்டு. கோரஸ் குரலாக ஒலிக்கும் 'கண்ணம்மா சின்னக் கண்ணம்மா’ - ஊர்ப் பக்கம் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடும் மாமன் மகள்களுக்கு டெடிகேட் செய்யலாம். 'அடலேறு காளையெல்லாம்...’ பாட்டு செம கும்மாங்குத்து. பாடலெங்கும் தமிழர்களின் வீரத்தை வார்த்தைகளில் வார்த்திருக்கிறார் கவிஞர் கபிலன். சயனோரா பிலிப்பின் மெட்டாலிக் குரலோடு கார்த்திக்கின் ஜிலீர் குரலும் இணைந்து பார்ட்டி டான்ஸ் மூடு கொடுக்கிறது 'ஓ இந்திரா... ஓஹோ இந்திரா...’ பாடல்.

அவார்டா கொடுக்குறாங்கடோய்! awardakodukkaranga.wordpress.com

விகடன் வரவேற்பறை

லைப்புக்கு ஏற்ப தளத்தின் தகவல்களிலும் ஆச்சர்யம் நிரம்பி இருக்கிறது. 'முதல் ஈஸ்ட்மென் கலர் பட நாயகன் ரவிச்சந்திரன்’ என்பது துவங்கி, 'நம்பியார், சபரிமலைக்குச் செல்லும்போது எம்.ஜி.ஆர். அனுப்பும் மாலையைப் போட்டுக்கொண்டுதான் போவார்’ என்பது வரை இங்கு பகிர்ந்துகொள்ளப்பட்டு இருக்கும் ஒவ்வொரு தகவலும் சுவாரஸ்யம். சினிமா விமர்சனம், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் பற்றிய பெர்சனல் தகவல்கள், உலக சினிமா அறிமுகங்கள் என சினிமா செய்திகள் கொட்டிக்கிடக் கின்றன. சின்சியர் உழைப்பு!

200 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள்
இயக்கம்: ப.சந்திரகாந்தம் வெளியீடு: சித்ராலயா கிரியேஷன்ஸ்

விகடன் வரவேற்பறை

தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்த தென் இந்தியர்கள் பற்றிய ஆவணப் படம். கம்பூசியா ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த தென் இந்தியர்கள், அவர்களின் கலைப் படைப்புகள், தாய்லாந்து அரசவையில் பாடப் பெற்ற திருவெம்பாவைப் பாடல் என பண்டைய தமிழர்கள் வெற்றி வரலாற்றை ஆவணப்படுத்துகிறது இந்தப் படம். போதி தர்மனுக்கு இணையாகக் கடல் பயணம் செய்து சீன மண்ணில் உயிர் துறந்த இன்னொரு தமிழன் சோளி சமுத்திரன், கடாரம் வென்ற சோழனின் பின்னணித் தகவல்கள், புராதனச் சின்னங்கள் புதைந்துகிடக்கும் பூஜால் பள்ளத்தாக்கு என வரலாற்று நிகழ்வுகளைக் காலவாரியாக அடுக்குகிறார்கள். கரும்பு, ரப்பர் தோட்டங்களுக்குக் கொத்தடிமையாக வேலைக்குச் சென்ற தமிழர்களின் நிலை, இப்போதைய முன்னேற்றத் தில் மலேசியத் தமிழர்களின் பங்களிப்பு என 200 ஆண்டு கால மலேசிய வரலாற்றை அறிய உதவும் ஆவணப் படம்.