மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

சிறைப்பட்ட கற்பனை - வரவர ராவ்
வெளியீடு: எதிர், 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி-2.
பக்கம்: 192   விலை:

விகடன் வரவேற்பறை

150  

விகடன் வரவேற்பறை

ந்திர முற்போக்குக் கவிஞரும் புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தினைக் கட்டியமைத்தவர்களில் ஒருவருமாகிய வரவர ராவின் கடிதங்கள். மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தபோது, 'இண்டியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அவர் எழுதிய கடித வடிவிலான குறிப்புகளின் தொகுப்பு. சிறைத் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்படும் முன் ஓடும் விநாடிகளைப் பறவைகளோடு ஒப்பிடுவதுபோன்ற இடங்களில் கவித்துவம் ததும்புகிறது. சிறையில் அர்த்தமற்று நிரம்பி வழியும் தனிமையையும் சிறைக்கு வெளியே காத்திருக்கும் அரசியல் பணிகள் குறித்தும் பேசுகின்றன கட்டுரைகள்!

வாங்க யோசிக்கலாம்! http://bigthink.com/

விகடன் வரவேற்பறை

பெரிய விஷயங்களைப் பேசும் வெப்சைட். விக்கிலீக்ஸ் எப்படிச் செயல்படுகிறது, சீனப் பெண்களின் டேட்டிங் கலாசாரம், சுவை என்றால் என்ன, அமெரிக்க அதிபர்களின் வரலாறு என உலக நடப்புச் செய்திகளோடு அறிவியல், வரலாறு எனக் கதம்பமான சங்கதிகளைக் கலந்துகட்டி விளக்குகிறார்கள். பிசினஸ், சுற்றுச்சூழல், அரசியல், சினிமா, சர்ச்சை எனப் பிடித்த துறையை க்ளிக் செய்தால், அது தொடர்பான செய்திகள் மட்டும் விரியும். படா விஷயங்களைத் தெரிந்துகொள்ள  பரந்த  இடம்  தரும் தளம்!

சாதனைப் பெண்கள் www.vippenn.blogspot.com

விகடன் வரவேற்பறை

லகம் முழுக்கச் சாதனை புரிந்த பெண் ஆளுமைகள் குறித்த செய்திகளைத் தொகுக்கும் வலைப்பூ. அன்னிபெசன்ட் அம்மையார், டயானா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, தில்லையாடி வள்ளியம்மை, தஸ்லீமா நஸ்ரின், மார்கரெட் தாட்சர், பெனாசிர் பூட்டோ எனப் பல தள சாதனையாளர்களின் விரிவான அறிமுகங்கள். பெண்களைப் போற்ற விரும்புபவர்களுக்குப் படிக்கப் பிடிக்கும் வலைப்பூ!

பந்த் இயக்கம்: கே.பி.பி நவீன்

விகடன் வரவேற்பறை

ந்த் காரணமாக நகரத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டு வெறிச்சோடிக்கிடக்கிறது. அந்த இக்கட்டான சூழலில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவ வலியெடுக்க, மனித நேயத்துடன் ஒரு ஆட்டோ டிரைவர் உதவ முன் வருகிறார். எதிர்ப்படும் கலவரக்காரர்கள் ஆட்டோவைத் தள்ளிவிட்டு, வெறியாட்டம் போடுகிறார்கள். கர்ப்பிணி உயிரிழக்கிறார். கலவரக் கும்பலின் தலைவன் அப்போதுதான் அது தன் மனைவி என்பதையே கவனிக்கிறான். அவன் அழ ஆரம்பிக்க, படம் நிறைவடைகிறது. வன்முறை... கைப்பிடி இல்லாத கத்தி என்பதை அழுத்தமாகச் சொல்லும் படம்!

சிங்கம் புலி  இசை: மணிசர்மா  வெளியீடு: வீனஸ்
விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

'ஃபிகரு கிடைக்குதுன்னா கூசாம பொய் சொல்’ - எஸ்.எம்.எஸ் அனுப்புவதுபோல சுலபமாகக் காதலிக்க வழி சொல்லும் பாடல். இசையால் வசமாகா விட்டாலும் ரஞ்சித், ஜனனி குரல்கள் பெப் ஏற்றுகின்றன 'உல்லாசமே நீ என்னோடு வா’ பாடலில். எங்கேயோ கேட்ட மயக்கம்தான், ஆனாலும், 'கண்களால் கத்திச் சண்டை போடாதே’ பாடல் ரசனை ரகம். குதூகல இசையும் கொண்டாட்ட வரிகளுமாகத் தாளமிடவைக்கும் டூயட். செம கும்மாங்குத்து 'வர்றாளே வர்றாளே ஜில்ஜில் சிங்காரி’ பாடல். கமர்ஷியல் ஆல்பத்துக்கான டெம்ப்ளேட் முயற்சி!