மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

பற்றி எரியும் பாக்தாத் - ரிவர்பெண்ட் தமிழில்: கவிதா முரளிதரன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்-1
பக்கம்: 176 விலை:

விகடன் வரவேற்பறை

125

விகடன் வரவேற்பறை

ராக்கின் மீது மேற்கொள்ளப்பட்ட போரின் கொடூரங்களைப் பதிவுசெய்யும் வலைப்பதிவு எழுத்துக்களின் தொகுப்பு. ரிவர்பெண்ட் என்ற புனைபெயரில் வலைப்பதிவுகளில் எழுதிய இந்தப் பெண், 'நான் ஒரு பெண், இராக் நாட்டைச் சேர்ந்தவள், வயது 24. போரில் பிழைத்திருக்கிறேன். இது தெரிந்தால் போதும்!’ என்று தன்னைப்பற்றிய சுயவிவரங்களை மறைத்துவிட்டு, இராக் அவலம் குறித்த செய்திகளை மட்டுமே பதிகிறார். போர் பாதித்த மக்களின் அவலங்கள், பெண்களின் மீதான இறுக்கமான கட்டுப்பாடுகள் ஆகியவற்றை ஒரு பெண்ணின் பார்வையில் விவரிக்கும் ரிவர்பெண்டின் எழுத்துக்களைச் வலி மிகுந்த நடையில் மொழிபெயர்த்திருக்கிறார் கவிதா முரளிதரன். ஈழத்துக்கும் தேவை இப்படி ஒரு பதிவு!

'அப்பா இதுதான் ஃபேஸ்புக்!’ www.teachparentstech.org

விகடன் வரவேற்பறை

பெற்றோர்களுக்கு இன்டர்நெட் கற்றுக்கொடுங்கள் என்பதுதான் இந்தத் தளத்தின் கோரிக்கை. காப்பி, பேஸ்ட் செய்வது, ஸ்க்ரீன் சேவர் மாற்றுவது, இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் திறப்பது என இணையத்தின் அடிப்படை விஷயங்களை வீடியோ பாடங்களாகக் கற்றுக்கொடுக்கிறார்கள். அடிப்படை முடிந்ததும் ஃபேஸ்புக் வரை எல்லை விரிக்கலாம். சீனியர்-ஜூனியர் இடையேயான 'இணைய இடைவெளி’ குறைக்கும் ஆரோக்கிய முயற்சி!

இயக்கம் http://ieyakkam.blogspot.com/

விகடன் வரவேற்பறை

மூக மாற்றம் விரும்புவோருக்கு, அது பற்றிய உரையாடல்களுக்கான வலைப்பூ. 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை அரசு படுத்தும் பாடு, எகிப்து கிளர்ச்சி முதல் உள்ளூர் அரசியல் வரையிலான அலசல் என வகை பிரித்து விவாதம் நடத்துகிறார்கள். நீண்ட கட்டுரைகளாக இல்லாமல், குறும் பத்திகளாகப் பதிவேற்றப்பட்டு இருப்பது சிறப்பு. பிப்ரவரி 19 சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களின் மீது ஏவப்பட்ட வன்முறை, ரஷ்யாவில் கம்யூனிஸம் வீழ்ந்த பிறகு, லெனின் உடலைப் பாதுகாக்காமல் அடக்கம் செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் எனப் பல அரசியல் நிகழ்வுகளின் பின்னணி குறித்து அறிந்துகொள்ள விரும்புபவர்கள் படிக்க வேண்டிய வலைப்பூ!

முகப்புத்தகம் - இயக்கம்: அட்லி
வெளியீடு: மாஸ் ஸ்டுடியோ என்டர்டெய்ன்மென்ட்

விகடன் வரவேற்பறை

ஃபேஸ்புக்கை வைத்து நடக்கும் மோசடிகளும், காதலும்தான் கதை. ஃபேஸ்புக் மூலம் சிவகார்த்தி கேயனுக்கு (சின்னத்திரை காம்பியர்) ஆர்த்தி என்ற பெண் அறிமுகமாகிறார். தன்னைச் சந்திக்க ஆர்த்தி அழைக்க, உஷாராகத் தன் நண்பர்கள், ரௌடிகள் சகிதம் அங்கே செல்கிறார் சிவகார்த்திகேயன். ஆர்த்தி வந்தாரா, கொள்ளைக் கும்பல் வந்ததா என்பது எமோஷனல் ப்ளஸ் காமெடி க்ளைமாக்ஸ். சின்னச் சின்ன ட்விஸ்ட்கள் மூலம் கதையைச் சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் அட்லி!  

சீடன் - இசை: தினா
வெளியீடு: வீனஸ் விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

யிலிறகு மெலடி... 'எனதுயிரை முதல்முறை பழக அனுப்பவா’ பாடல். 'தனிமைகளை முதல் முறை நான் தனிமைப்படுத்தவா?’ எனக் காதல் பரப்பும் யுகபாரதியின் வரிகளுக்கு வலிக்காமல் சேர்ந்திசைக்கிறது இசை. அதிராத பீட், மெல்லிய கொட்டு, வருடல் வார்த்தைகள், ஸ்ரேயா கோஷலின் ஐஸ்க்ரீம் குரல்... 'முன் பனிக்காலப் பூவிலே’ பாடல் ரசனை மெலடி. சமையல் டிப்ஸ் தூவி, பந்தி பரிமாறும் 'சரவண சமையல்’ பாடல் கிச்சனுக்கு டெடிகேட். குருட்டாம்போக்கில் குத்தியெடுக்காமல் சீரான தாளகதியில் வசீகரிக்கிறது 'ஏலேலோ வள்ளியம்மா’ குத்து மசாலா. இரண்டு  மெலடிகளுக்காகக்  கேட்கலாம்,  ரசிக்கலாம்!