மிஸ்டர் மியாவ்:
##~## |
• வெளிப்படங்களில் சற்று தலைகாட்டி வந்த 'ஜெயம்’ ரவி, மீண்டும் அண்ணன் 'ஜெயம்’ ராஜாவுடன் இணைகிறார். கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் அந்தப் படத்தில் வில்லனுக்குத்தான் பிரதான வேடமாம். அதற்காக ஏகப்பட்ட நடிகர்களை வரவழைத்து டெஸ்ட் செய்த ராஜா, கடைசியில் 'டிக்’ செய்தது 'நான் ஈ’ வில்லன் சுதீப்.
• புரட்சித் தமிழன் சத்யராஜுக்கு தமிழ் சினிமா லட்சங்களில் மட்டுமே சம்பளம் கொடுத்தது. வேற்றுமொழி படங்கள் கோடிகளை கொட்டிக் கொடுக்கிறது. 'சென்னை எக்ஸ்பிரஸ்’ இந்திப் படத்தில் நடிக்க ஒரு கோடி சம்பளம் கொடுத்தார், ஷாருக்கான். இப்போது, ராஜமௌலி தெலுங்கில் இயக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், சத்யராஜ். இதற்கு 100 நாட்கள் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து, ஒரு கோடி ரூபாய் ஊதியம் பெறுகிறார்.

• ரஜினி கேட்கும் சம்பளத்தை ஒரே பேமன்ட்டாக தரத் தயாராக இருக்கிறது, ஏ.ஜி.எஸ். நிறுவனம். இருப்பினும் இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு போன் செய்த ரஜினி, 'ஸாரி மூணு மாசம் வெயிட் பண்ணுங்க. அப்புறமா பேசலாம்’ என்று சொல்லிவிட்டாராம். ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போட காத்திருந்த கே.வி.ஆனந்த் இப்போது அப்செட்.
• லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பேனர் பெரிய தயாரிப்பு நிறுவனமாகி விட்டது. இதன் அடுத்த தயாரிப்பில் நடிக்கப்போவது கமல்ஹாசன். ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 'விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துவிட்டு லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் கமல். இயக்குநர் கமலிடம் நடிப்பு வேலையை வாங்கி இயக்கப்போவது யார் தெரியுமா? நடிகர் ரமேஷ் அரவிந்த்.
• சமுத்திரக்கனி இயக்கும் முதல் ஆக்ஷன் படம், 'நிமிர்ந்து நில்’. இளைஞனாகவும் நடுவயதுக்காரராகவும் இரண்டு தோற்றத்தில் நடிக்கிறார், 'ஜெயம்’ ரவி. 'ஆதிபகவன்’ போலவே இந்தப் படத்திலும் இரண்டு ரவிகள் மோதும் காட்சி இருக்கிறதாம். அனல்பறக்கும் சண்டைக்காட்சியைப் படமாக்க 'எந்திரன்’ படத்தில் பயன்படுத்திய மோஷன் கன்ட்ரோல் கேமராவை இறக்கியிருக்கிறார்கள்