Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

##~##

விகடன் நண்பர்களுக்கு ராஜாவின் வணக்கம்...

சிரிக்கவைக்கிற மாதிரி பல விஷயங்களைப் பேசிக்கலாம், அப்படியே சிந்திக்கவைக்கிற மாதிரி சில சிந்தனைகளையும் விதைக்கலாம்னு நினைக்கிறேன்.

இப்போ 10-வது, 12-வது தேர்வு முடிவுகள் வந்திருக்கு. எல்லாப் பசங்களும் நல்ல மார்க் வாங்கியிருக்காங்க. ரொம்ப சந்தோஷம். ஆனா, அந்த விஷயத்துல நான் ஒரு அதிர்ச்சியையும் சந்திச்சேன். எங்க பக்கத்து வீட்டுப் பையனுக்கு இங்கிலீஷ்ல அவன் பேரைக்கூடச் சரியா எழுத வராது. ஆனா, அவன் ஆங்கிலப் பாடத்துல 91 மார்க் எடுத்திருக்கான். 'நான்தான் எங்க கிளாஸ்ல கடைசி மார்க்’னு அவன் சொன்னது என்னை இன்னும் அதிர்ச்சியாக்குச்சு. இது சம்பந்தமா சில ஆசிரிய நண்பர்களிடம் பேசினப்போ, தலையில இடி இறக்கின மாதிரி அவங்க சில விஷயங்கள் சொன்னாங்க. மாணவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கும் அந்த அதிர்ச்சித் தகவல்களை உங்களோடு பகிர்ந்துக்கவா?  

ஒருமுறை உறவுக்காரப் பெண்கள் சிலருடன் ஒரு விசேஷத்துக்குப் போயிருந்தேன். திடீர்னு அங்கே வந்த ஒருத்தர், 'சார்... இந்த நாலு பேர்ல யார் சார் உங்க வொய்ஃப்?’னு சட்டுனு கேட்டுட்டார். அந்த சகோதரிகளும் நானும் ரொம்ப சங்கடப்பட்டுப் போய்ட்டோம். அட, என்னை விடுங்க. ஆனா, அந்தப் பெண்களின் மனசு என்ன பாடுபட்டிருக்கும்? பொது இடங்கள்ல மத்தவங்களிடம் குறிப்பா, பெண்களிடம் எப்படி மரியாதையா நடந்துக்கணும்னு நம்மள்ல பலருக்குத் தெரியிறதே இல்லை. இப்படிப் பல சமயம் எனக்கு நேர்ந்த அனுபவங்களையும் அதில்இருந்து மீண்ட சிரமங்களையும் சொல்றேன்.

இன்று... ஒன்று... நன்று!

விளம்பரம்கிறது என்னன்னா... இல்லாத ஒரு விஷயத்தை இருக்கிற மாதிரி நம்பவைக்கிறது. இப்போ கல்வி, மருத்துவம்னு சேவைகள்கூட விளம்பரமயமாகிக்கிடக்குது. ஒவ்வொரு கல்லூரியும் அச்சு, மின் ஊடகங்கள், ஃப்ளெக்ஸ்னு ஏகப்பட்ட காசை விளம்பரத்துல கொட்டுறாங்க. இதே நிலைமைதான் மருத்துவமனைகளிலும். அட, அதெல்லாம் பரவாயில்லைனு சொல்ற அளவுக்கு நம்ம அரசாங்கம் நடந்துக்குது. அரசாங்கச் சாதனைனு எதுக்குங்க பக்கம் பக்கமா விளம்பரம்? இந்த விளம்பரக் கலாசாரம் சம்பந்தமா எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன். நீங்களே கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க...

கோடைக்காலப் பேருந்துப் பயணம், முன்பதிவு இல்லாத ரயில் பயணம்... இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் யாரோ ஒருத்தர் கொஞ்சம்கூட இடைவெளியே இல்லாமல் நெருக்கியடித்து நம்மகூட உக்காந்து வந்தா, எவ்வளவு எரிச்சல் வரும்? ஆனா, அந்த இடைவெளி இல்லாத நெருக்கடியைத் தான் நம்மளைச் சுத்தி இருக்கிறவங்களுக்குக் கொடுக்கிறோம். பையனை முடிவெட்டத் தனியா அனுப்பாம, கூடவே போய் 'இப்படி வெட்டு... அப்படி வெட்டு’னு சொன்னா, பையனுக்கு நம்ம மேல எவ்வளவு கடுப்பு வரும்? இப்படித்தான் நம்ம ஒவ்வொரு உறவுகளிலும் குடைச்சல் கொடுக்கிறோம். எந்த உறவுக்குள்ளும் சின்ன ஸ்பேஸ் வேணும். தமிழை எழுதினா, அவ்வளவு அழகா இருக்கும். ஏன்னா, தமிழில் ஒவ்வொரு எழுத்தையும் போதுமான இடம்விட்டு எழுதுவோம். அதுதான் அழகு. வார்த்தையாகட்டும், வாழ்க்கையாகட்டும்... சின்ன ஸ்பேஸ் தேவைங்க!  

6.6.13 முதல் 12.6.13 வரை 044 - 66802911 * என்ற எண்ணில் அழையுங்கள்... மனசு விட்டு இன்னும் நிறையப் பேசுவோம்!  

அன்புடன்,

உங்கள் ராஜா

 *  அழைப்பு சாதாரணக் கட்டணங்களுக்கு உட்பட்டது.