Published:Updated:

மணி இயக்கத்தில் அஜீத் ?!

மணி இயக்கத்தில் அஜீத் ?!

மணி இயக்கத்தில் அஜீத் ?!

மணி இயக்கத்தில் அஜீத் ?!

Published:Updated:

தமிழ் திரையுலகின் இப்போதைய லேட்டஸ்ட் பேச்சு அஜீத்தை சந்தித்து பேசி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம் என்பது தான்.

'மங்காத்தா' பட பணிகள் முடிந்து விட்டதால் அஜீத் 'பில்லா - 2' படத்தின் பணிகளில்  மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

'பில்லா- 2' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற போது இயக்குனர் மணிரத்னம் அஜீத்தை சந்தித்து பேசினராம். இருவரும் சுமார் 2 மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினார்களாம். இயக்குனர் மணிரத்னம் படப்பிடிப்பில் ஒரு நடிகரை அவரது படப்பிடிப்பு தளத்தில்  சந்தித்து பேசுவது அபூர்வம்.

'பில்லா - 2' படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கத்தில் அஜீத் நடிக்கலாம் என்கிறார்கள்.

மணிரத்னம் தற்போது நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் நாயகனாக அறிமுகமாகும் படத்தை இயக்க இருக்கிறார். அப்படத்தை முடித்து விட்டு அஜீத்தை படத்தினை இயக்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.