வாழ்த்துரை வழங்க வந்த கமல்ஹாசன், "இந்த விழாவுக்காக நான் கவிஞன் மாதிரி வேஷம் போட்டு வந்திருக்கேன். வாலி பல வேஷம் போடுவார். சில சமயம் பூ மாதிரி இருப்பார். சில சமயம் கரும்பு மாதிரி இருப்பார். நான் வண்டு. 'அபூர்வ சகோதரர்கள்' படம் பண்ணும்போது பூன்னு நினைச்சு கரும்பைக் கடிச்சிட்டேன். என் பல் உடைஞ்சு போச்சு. 'இன்னும் நல்லா எழுதலாமே'ன்னு அவர்கிட்ட சொல்லிட்டேன். அவருக்கு இன்னும்கிற வார்த்தை கேட்கலை. 'என்னது?'ன்னு முறைச்சுப் பார்த்தார். கோவிச்சுக்கிட்டு எழுந்து போயிட்டார். அப்புறம் சமாதானப்படுத்தினதும் 'என்னய்யா வேணும்'னு இறங்கி வந்தார். அப்படி அவர் எழுதின பாட்டுதான், 'உன்னை நினைச்சேன்... பாட்டு படிச்சேன்'. என்னை நினைச்சு நொந்துபோய் எழுதி னார்னு நினைக்குறேன். 'போதுமா... நான் புறப்படுறேன்'னு கிளம்பி, அவார்டையும் வாங்கிட்டுப் போயிட்டார். அவர் ஆரம்பத்துல ஒருத்தர்கிட்ட எப்படிப் பழகுகிறாரோ, அப்படியேதான் கடைசி வரை பழகுவார். ஷங்கர் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தப்ப எப்படி மதிச்சுப் பேசுனாரோ, இப்பவும் அப்படித்தான் பழகுவார். இப்பவும் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' கமல்ஹாசனாக வாலி அண்ணன் காலைத் தொட்டு வணங்குகிறேன்!" என்று வாலியின் பாதம் தொட்டு வணங்கி அமர்ந்தார்.
|