ஒரு முன் குறிப்பு: மாற்றுத் திறனாளிகளுக் கான விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில்
கலந்துகொள்ள பெங்களூரு வந்திருந்த அக்ஷய் குமாரிடம் இந்தப் பேட்டி எடுத்த சமயம் அவர் சட்டை அணியாமல் இருந்தார். காரணம்... பின் குறிப்பில்!
"நீங்க மட்டும் எப்படி வருஷத்துக்கு ஆறேழு படங்கள், ஏகப்பட்ட விளம்பரங்கள்னு பரபரப்பா இருக்கீங்க?"
"நான் ஏதோ பொழுதுபோக்க சினிமாவுக்கு வரலை. ஆரம்பத்துல இருந்தே போராடி, வெறித் தனமா சினிமாவைக் காதலிச்சு வந்தேன். அப்ப வும் இப்பவும் எனக்கு சினிமாவைத் தவிர வேற எதுவும் தெரியாது!"
"உங்க பார்வையில் தமிழ் சினிமா எப்படி இருக்கு?"
"வெல்! நல்ல ஆர்ட் ஃபிலிம்ஸ், பக்கா கமர்ஷியல் மசாலா ஃபிலிம்ஸ்னு வெரைட்டி விருந்துவைக்குது தமிழ் சினிமா. மும்பையில் 'சவுத் இந்தியன் சினிமா'ன்னு யோசிச்சா, தமிழ் சினிமா மட்டும்தான் தெரியுது. வெரிகுட் ஸ்டார்ஸ், பிரமாதமான தொழில்நுட்பக் கலைஞர்கள், பக்கா மார்க்கெட்டிங்னு தமிழ் சினிமா சூப்பர்ப்! பாலிவுட்டில் தமிழ் சினிமாவை, 'த லெஜன்ட்ரி ஃபேக்டரி'னுதான் சொல்வோம்!"
|