Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

ஏ.ஆர்.ரஹ்மானும் கௌதம் வாசுதேவ் மேனனும் 'நண்பேன்டா' அளவுக்கு இப்போ நெருக்கம். கௌதம் மேனனின் ஃபோட்டான் கதாஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு சீஃப் கிரியேட்டிவ் மென்டராக ஏ.ஆர்.ரஹ்மான் பொறுப்பேற்று இருக்கிறார். இந்த நிறுவனம், திரைப்படங்களுடன் டி.வி நிகழ்ச்சிகளையும் தயாரிக்க இருக்கிறது. இசை ரசனைக் கூட்டணி!

இன்பாக்ஸ்

தன்னைப்பற்றிய பிரத்யேக மியூஸியத்தை உருவாக்கி வருகிறார் ஜாக்கி சான். ஸ்டன்ட் அசிஸ்டென்ட்டாக இருந்த காலம் தொட்டு, தான் உபயோகப்படுத்திய ஆயுதங்கள், உடைகள், ரசித்த இசைக் குறிப்புகள் என பல அரிய பொருட்களை அங்கு காட்சிக்கு வைத்து ரசிகர்களைக் குஷிப்படுத்தத் திட்டமாம். கமான் ஜாக்கி... கமான்!

இன்பாக்ஸ்

'எங்கேயும் காதல்' படத்தின் கடைசிப் பாடலை ஷூட் செய்யாமல் இருந்தார் பிரபுதேவா. சின்ன இடைவெளிக்குப் பிறகு ஷூட்டிங் கிளம்பும்போது, எக்கச்சக்கமாக எடை கூடி வந்து நின்றார் ஹீரோயின் ஹன்சிகா. கடுப்பான பிரபுதேவா, 'பத்தே நாள்ல 10 கிலோ வெயிட் குறையணும்!' என்று கறார் உத்தரவிட்டார். திமுதிமு ஹன்சிகா, இப்போ செம டயட்டில் இருக்கிறார். நயன்கிட்ட டிப்ஸ் கேட்கலாம்ல!

இன்பாக்ஸ்

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் சரிவைத் தொடர்ந்து, மம்தாவுக்கு வெளிப்படையாகவே சாமரம் வீசிவருகிறார் பிரணாப் முகர்ஜி. காங்கிரஸில் வலுப்பெற்று வரும் ராகுல் புயல், சீனியர் தலைகளை விரட்டி அடித்துவிடும் என்பதால், மாநில அரசியலில் கவனம் செலுத்தி முதலமைச்சர் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ளலாம் என்பது முகர்ஜி திட்டம். இதனால் மம்தா என்ன சொன்னாலும் 'சரிதான் சரிதான்' என்று ஆமோதிக்கிறாராம். மம்தா மம்மு தருவாரா?

இன்பாக்ஸ்

திருநாவுக்கரசரின் மகள் திருமண நிகழ்வில் தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க என்று அனைத்துக் கட்சி பிரமுகர்களும் ஆஜர். அங்கு வந்த பின்னணிப் பாடகி பி.சுசீலா மணமக்களை வாழ்த்திவிட்டு மேடை இறங்கினார். அவரை மறித்து ஆர்கெஸ்ட்ரா மேடை ஏற்றிவிட்டார் கங்கை அமரன். மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு கூச்சம் விலக்கி 'முத்து மணிமாலை... உன்னைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட' என்று முழுப் பாடலையும் பாடி முடித்தார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அந்த தேன் குரலின் தெவிட்டாத சுவையில் மணமக்களைக் கவனிக்கக்கூட மெய் மறந்து நின்றார்கள் அரங்கில் இருந்தவர்கள். தொட்டுத் தொட்டுத் தாலாட்டும் குரலாச்சே!

இன்பாக்ஸ்

டிசம்பர் 6-ம் தேதி முதல் தமிழ் '3 இடியட்ஸ்' படப்பிடிப்பு இனிதே துவங்குகிறது. படத்தின் பெயர் அநேகமாக 'நண்பன்'. விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் காம்பினேஷன். தென்னகத்தில் அசினுக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் இலியானாவுக்கு ஒன்றரைக் கோடி கொடுத்து வளைத்துப் போட்டார்களாம். சீக்கிரம் கண்ணுல காட்டுங்கப்பா!

இன்பாக்ஸ்

உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் பெண்... ஓப்ரா வின்ஃப்ரே. வருடத்துக்கு 1,400 கோடி! இரண்டாம் இடத்தில் பாப் பாடகி பியான்ஸ் நோவல்ஸ். இவருக்கு 360 கோடி. பட்டியலில் பிரிட்னி ஸ்பியர்ஸும் 270 கோடியுடன் மூன்றாவது இடத்தில். அம்மாடி!

ஆயத்த ஆடை ஏற்றுமதி மூலம் ஆண்டுதோறும்

இன்பாக்ஸ்

12 ஆயிரம் கோடி ஈட்டும் திருப்பூரில், தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும் கொடுமைகள் மிக மிக அதிகம். கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து இதுவரை அங்கு 980 பேர் தற்கொலை செய்திருக்கிறார்களாம். அரசாங்கத்தின் கவனத்துக்கு!

'நான்' என்கிற படம் மூலம் ஹீரோ ஆகிவிட்டார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து 'நாக்கமுக்க' என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். 'தமிழ் படம்' சி.எஸ்.அமுதன்தான் 'நாக்கமுக்க' இயக்குநர். 'நான்' படத்தில் விஜய் ஆண்டனியுடன் டூயட் பாட ஹீரோயின் யாரும் இல்லையாம். ஐயோ பாவம்ம்ம்..!

மைக்ரோசாஃப்ட் அதிபர் பில்கேட்ஸ், மனிதர்களுக்கு உதவும் மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு 'ஒரு ஐடியா... ஒரு லட்சம் டாலர்' என்ற பரிசுப் போட்டியை அறிவித்திருந்தார். பயோமெடிக்கல் பற்றிய ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து, தலா ஒரு லட்சம் டாலர் வென்றிருக்கிறார்கள் இந்தியாவின் சுஜாய் குஹா மற்றும் சந்தோஷ் அப்ரம். இந்தியேன்டா!

ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் பிரட் லீ, இசைக் குழு ஒன்றை நடத்தி வருகிறார். பேஸ் கிட்டார் வாசிப்பதில் கில்லியான பிரட் லீ, மும்பை மற்றும் பெங்களூரில் 'வொயிட் ஷோ தியரி' என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தி அசத்தினார். இசை சந்திலும் இருக்கும்... பந்திலும் இருக்கும்!

இன்பாக்ஸ்

ஃபிரான்ஸ் அதிபர் சார்கோஸி தனது ஆசை மனைவி கார்லா புரூனிக்கு உச்சகட்டப் பாதுகாப்பு வளையம் அமைத்திருக்கிறார். கார்லா, பர்தாவுக்கு எதிராகப் பத்திரிகையில் சர்ச்சைக்குரிய கருத்தை எழுதியதால் அல்கொய்தாவின் கோபத்துக்கு ஆளாகிஇருக்கிறார் என்று காரணம் சொல்கிறார் சார்கோஸி. ஆனால், அம்மணியின் ரகசிய நடவடிக்கைகளை முடக்கும் அதிபரின் பலே திட்டத்துக்கு அது ஒரு சப்பைக்கட்டு என்று கிசுகிசுக்கின்றன எதிர்க் கட்சிகள். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

இன்பாக்ஸ்

'குட்டைப் பாவாடை அணிந்துதான் டென்னிஸ் விளையாட வேண்டும் என்று என்னைக் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், என் திருமணத்துக்கு என் விருப்பமான உடைதான்!' என்று மகிழ்ச்சி தெரிவித்து இருக்கும் மரியா ஷரபோவா அதற்கெனத் தேர்ந்தெடுத்து இருக்கும் உடை... மிக நீளமான கவுன். கவுன் போடு... கொண்டாடு!

இன்பாக்ஸ்

சமீபத்தில் தனது பிறந்த நாளை ரன்பீர் கபூரோடு கொண்டாடினார் கேத்ரீனா கைஃப். ஏற்கெனவே, ரன்பீரின் தொடர் காதல் கிசுகிசுக்களால் டென்ஷனில் இருக்கும் அவரது முன்னாள் காதலி தீபிகா படுகோனை இது ஏகத்துக்கும் கடுப்பேற்றிவிட்டது. 'காபி வித் கரண்' டாக் ஷோவில் கலந்துகொண்ட தீபிகாவிடம், 'நீங்க ரன்பீருக்கு என்ன பரிசு கொடுப்பீங்க?' என்று கரண் கேட்க, 'ஒரு பாக்கெட் காண்டம்!' என்று பதில் அளித்துஇருக்கிறார் தீப்ஸ். ஊப்ஸ்!

இன்பாக்ஸ்

'உலகக் கோப்பையை வெல்ல இந்திய கிரிக்கெட் வீரர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறமைகள்!' என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி வருகிறார் சவுரவ் கங்குலி. கபில்தேவ் தலைமையில் விரைவில் விழா இருக்கும். புக் ரெடி... கப் ரெடியா?

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்