" 'ஏழைகளால் மட்டும்தான் இந்தியாவை முன்னேற்ற முடியும்' என்கிறாரே ராகுல் காந்தி?"
"கரீட்டாத்தானே சொல்லியிருக்காரு. இத்ல உங்களுக்கு இன்னா கொயப்பம்? ஏழைகளால்தான் இந்தியாவை முன்னேற்ற முடியும் என்பதால்தானே, காங்கிரஸ் அரசு தன் பொருளாதாரக் கொள்கைகள் மூலம் ஏழைகளின் எண்ணிக்கையை அதிகம் ஆக்குகிறது!"
- அதிபன், ஈரோடு.
"அதிகம் புத்திசாலிகள் ஆசிரியர்களா, மாணவர்களா?"
"எப்போதுமே இளைய தலைமுறைதான்! ஒரு பள்ளியில் பிரார்த்தனைக் கூட்டம். கண் களை மூடி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது பள்ளி விதி. பிரார்த்தனைக் கூட்டம் முடிந்ததும், ஆசிரியர் ஒரு மாணவனை மட்டும் அழைத்து, 'எல்லோரும் கண்ணை மூடிக் கிட்டுதான் இருக்கணும்னு தெரியும்ல, நீ ஏன் கண்ணைத் திறந்துக்கிட்டே இருந்தே?' என்று கேட்டார். உடனே மாணவன் கேட்டான், 'அதை எப்படி சார் நீங்க பார்த்தீங்க?' "
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.
|