Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

காமிக்ஸ் காமிக்ஸ்
www.muthufanblog.blogspot.com

விகடன் வரவேற்பறை

ம்ப்யூட்டர் கிராஃபிக்ஸும் அனிமேஷனும் வந்த பிறகு, காணாமல்போன பால்ய காலத்துச் சந்தோஷங்களில் ஒன்று, காமிக்ஸ். இங்கு தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, வலையேற்றப்பட்டு இருக்கின்றன. ஆங்கில காமிக்ஸ்களின் கதைச் சுருக்கமும் தரப்பட்டு இருக்கிறது. காமிக்ஸ் புத்தகங்களின் சந்தை குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரை சுவாரஸ்யம். நினைவுகளில் புதைந்துபோன ஸ்பைடர்மேன், இரும்புக் கை மாயாவி ஆகியோர் இங்கு உலவிக்கொண்டு இருப்பது ஆச்சர்யம்!

வெளிநாட்டில் வேலையா? www.workpermit.com/

விகடன் வரவேற்பறை

மேலை நாடுகளில் வேலைக்குச் செல்ல விருப்பம் இருப்பவர்களுக்கு 'ஏ டு இஸட்' தகவல் தரும் தளம். ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஃபிரான்ஸ் எனப் பல நாடுகளில் என்ன வேலைவாய்ப்புகள் இருக்கின்றன, அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை சொல்லித் தருகிறார்கள். 'விசா என்றால் என்ன?' என்பதில் இருந்து அதை எப்படிப் பெறுவது, ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள சட்ட திட்டங்கள், க்ரீன் கார்டு பெறுவது வரை விலாவாரியாக விளக்குகிறார்கள். நமது சுயவிவரக் குறிப்புகளை வெளிநாட்டு நிறுவனங்களின் பார்வைக்கும் வைக்கலாம்!

செங்குருதி
இயக்கம்: த.திவாகரன்

விகடன் வரவேற்பறை

ராவணனைப் பார்த்து, 'இன்று போய் நாளை வா' என்று ராமன் சொல்லி அனுப்ப, 'என் மகளுக்காக வீழ்கிறேன்' என்று புலம்புகிறார் ராவணன். காதல் கூடும் வேளையில், மகாத்மா காந்தி கைது செய்யப் பட்ட தகவல் தெரிந்து அழுது புலம்புகிறார் குமரன். ஈழத்தில் பதுங்கு குழியில் பிரசவ வேதனையில் மனைவி துடிக்க, அவரைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கிறார் ஒரு மனிதர். இந்த மூன்று கதைகளும் மாறி மாறி வருகின்றன. ராவணன் இறந்ததும் சீதா, அப்பா என்று கதறி அழுகிறார் (சில கிளைக் கதைகளில் ராவணன் மகள்தான் சீதா). தேசியக் கொடியை உடலிலேயே தாங்கி உயிர்விடுகிறார் குமரன். ராணுவத்தின் சமாதான அறிவிப்பு கேட்டு, வெளியே வரும் கணவன் குண்டடிபட்டு உயிர் இழக்கிறார். மறக்கப்படும் தமிழர்களின் தியாகங்களைப் பேசும் குறும்படம்!

தம்பிக்கோட்டை
இசை: டி.இமான் வெளியீடு: சாகா மியூஸிக் விலை:

65

விகடன் வரவேற்பறை

'வா புள்ள... நான் உன் மாப்புள்ள' என்று உருமி அடிக்கும் பாடல்தான் தம்பிக் கோட்டையின் தளபதி! வேல்முருகனின் குதூகல குரலும், விவேகாவின் தெம்மாங்கு வார்த்தைகளும் திருவிழா உற்சாகத்தை ஊற்றெடுக்க வைக்கின்றன. 'நூறாண்டு வாழ்க' என்று காதலுக்கு வாழ்த்து சொல்லும் பாடலின் வரிகளும் இசையும் ஏற்கெனவே ஃபார்வர்ட் செய்த எஸ்.எம்.எஸ் வாசித்த உணர்வினை உண்டாக்குகிறது. தாலாட்டும் தொனியில் கடக்கிறது 'உனக்காக உயிரை வைத்தேன்' மெலடி. 'கோட்டை' என்று கொடி நாட்டிவிட்டு குத்தாட்டம் இல்லாமலா... 'தம்பிக்கோட்டை கனகா...' என்று குத்தி எடுக்கிறார்கள்!

அமெரிக்கன் ஹென்றி ஜேம்ஸ்,
தமிழில்: சா.தேவதாஸ்
வெளியீடு: வம்சி புக்ஸ், 82, மத்தலாங்குளத் தெரு, திருவண்ணாமலை.
பக்கம்: 386 விலை:

200

விகடன் வரவேற்பறை

மெரிக்காவும் ஐரோப்பாவும் சொந்தம் கொண்டாடும் ஹென்றி ஜேம்ஸின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று. வெற்றிகரமான ஒரு வியாபாரி... கலையையும் வாழ்வின் அர்த்தத்தையும் தேடிப் பயணிக்கும்போது ஒரு பெண்ணைச் சந்திக்கிறார். போலி கௌரவங்களால் நிரம்பப்பெற்ற அவளால் ஏமாற்றப்படுகிறார். அமெரிக்காவுக்குத் திரும்பிச் செல்பவர் மீண்டும் அந்தப் பெண்ணைத் தேடி ஐரோப்பா வருகிறார். இந்த நீண்ட பயணத்தின் இடையே, இருவேறு மேற்குலகக் கண்டங்களின் அரசியல் விவரிக்கப்படுகிறது. மொழிபெயர்ப்பு இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக, எளிமையாக இருந்திருக்கலாம்!

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை