குரலின் ஏற்ற இறக்கங்களைக் கூர்ந்து கவனித்து வந்த ஜி.வி.பிர காஷ் ஒரு கட்டத்தில், 'கர்னாட்டிக்ல ஏதாவது பாடுங்க!" என்றார். தியாகராஜர் கீர்த்தனை ஒன்றை நாசிகா பூஷணி ராகத்தில் பாடத் தொடங்கினார் சௌம்யா. சில நிமிடங்களுக்குப் பிறகு 'போதும்!' என்று ஜி.வி.பிரகாஷ் சைகை செய்தார். ஹெட்போன் கழற்றி விட்டுப் பதற்றம் கலந்த எதிர்பார்ப்புடன் ஜி.வி. பிரகாஷ் முகம் நோக்கினார் சௌம்யா.
"ஸாரி சௌம்யா!" என்று ஜி.வி. கைகளை உயர்த்த, சௌம்யா முகத்தில் சின்ன வாட்டம். தொடர்ந்தார் ஜி.வி.பி.. "நான் சும்மா ஆர் வத்துல வந்திருப்பீங்க. பிரமா தமாப் பாடுவீங்களான்னு எனக்கு சந்தேகமா இருந்துச்சு. ஆனா, எதிர்பார்க்கவே இல்லை. அசத்திட்டீங்க. உங்க குரல் ரொம்ப ஃப்ரெஷ். கேட்க இனிமையாவும் இருக்கு. நீங்க இப்பவே என் டீம்ல சேர்ந்துக்கலாம். கொஞ்ச நாள் நீங்க க்ரூப்ல பாடணும். அடுத்து, சீக்கிரமே சினிமாவில் பாடுவீங்க. பென்னி தயாள், ராகுல் நம்பியார் மாதிரியான பாட கர்கள் இப்படித்தான் வந்தாங்க!" என்ற ஜி.வி-யின் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் சௌம்யாவின் முகத்தில் ஜலதரங்க ரியாக்ஷன்கள். இறுதியில் சின்னதாக ஆனந்தக் கண்ணீரும் எட்டிப்பார்த்தது.
"சார், இன்னிக்கு நடந்த எல்லாமே எனக்குக் கனவு மாதிரி இருக்கு. இப்பவும் என்னால் எதையும் நம்ப முடியலை. கனவிலாவது இப்படி ஒரு விஷயம் நடந் துராதான்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்ப அது நிஜத்திலேயே... தேங்க்யூ சார்... தேங்க்யூ ஸோ மச்!" என்று சௌம்யா நெகிழ,
|