ஸ்பெஷல் -1
Published:Updated:

அயோத்தி... அலகாபாத்!

அயோத்தி... அலகாபாத்!


அயோத்தி... அலகாபாத்!
அயோத்தி... அலகாபாத்!
அயோத்தி... அலகாபாத்!
ரீ.சிவக்குமார்
அயோத்தி... அலகாபாத்!

'இந்து-முஸ்லிம் ஒற்றுமை என்பது இந்துக்களுக்கும் முசல்மான்களுக்கும்

அயோத்தி... அலகாபாத்!

இடையிலானது மட்டுமல்ல... இந்தியாவைத் தனது வீடாக நினைக்கிற அனைவருக்குமானது. அவர்கள் எந்த நம்பிக்கையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி!'

- மகாத்மா காந்தி

ந்தியா தன் நிம்மதியைத் தொலைத்த நாட்களில் ஒன்று... 1992 டிசம்பர் 6. பாபர் மசூதியை மையம்கொண்டு புதிய கறுப்பு அத்தியாயம் அன்றுதான் ஆரம்பமானது. 18 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்து என்றும் முஸ்லிம் என்றும் பிரிவினை வாதம் பேசி, சிலர் பகை நெருப்பை மாறிமாறி வளர்க்க அதுவே காரணம் ஆனது. டிசம்பர் 6-ம் தேதி நெருங்கி வந்தாலே, எல்லா இடங்களிலும் அதிக போலீஸைக் குவித்தாக வேண்டிய கட்டாயம் வழக்கமும் பழக்கமும் ஆனது!

அயோத்தி... அலகாபாத்!

'அயோத்தியில் ராமர் கோயில் இருந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது' என்ற ஒற்றை வரிதான் இத்த னைக்கும் காரணம்! சுமார் 60 ஆண்டுகளாக இந்தக் கேள்வியை முன்வைத்து நடந்து வரும் வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பை 24-ம் தேதி அளிக்கிறது. அநேகமாக, நீங்கள் இந்தக் கட்டுரையை வாசித்துக்கொண்டு இருக்கும்போது தீர்ப்பைத் தெரிந்துகொண்டு இருக்கலாம்.

1992 டிசம்பர் 6-ஐப் போலவே 2010 செப்டம்பர் 24-ம் இனி வரலாற்றின் மறக்க முடியாத தினமாக மாறப்போகிறது.

'தீர்ப்பு எப்படி அமைந்தாலும்... அமைதி காக்க வேண்டும்' என்று இந்து, முஸ்லிம் சமூகங்களுக்கு இரு தரப்பு அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. 'இது இறுதித் தீர்ப்பு அல்ல. இன்னும் நீதியைப் பெற, சட்டரீதியாகப் பல படிநிலைகள் உள்ளன' என்று மக்களுக்கு வலியுறுத்தி, அமைதி காக்கும் வேண்டுகோளை நாளிதழ்களில் வெளியிட்டு வேண்டியுள்ளது மத்திய அரசு. உ.பி. மாநில அரசாங்கம் ஒரு படிமேலே போய், மாநிலத்தின் பல இடங்களில் தற்காலிகச் சிறைகளை அமைக்கும் காரியத்தில் இறங்கி உள்ளது. கலவரம் ஏற்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமானால், அவர்களை அடைக்கச் சிறைகளில் இடம் இருக்காதோ என்ற கவலை!

பாபர் மசூதி பிரச்னையின் முன் கதைச் சுருக்கம் என்ன?

1528-ம் ஆண்டில் கட்டப்பட்டது பாபர் மசூதி. ஆனால், அங்கு விக்ரமாதித்யன் என்ற இந்து மன்னர் ராமர் கோயிலைக் கட்டி இருந்ததாகவும், பாபரின் தளபதி மீர்பாகி, அந்தக் கோயிலை இடித்துவிட்டுத்தான் மசூதியை எழுப்பினார் என்பதும் இந்துத்துவ இயக்கங்களின் குற்றச்சாட்டு. அயோத்தியில் ராமர் பிறந்த இடமும் இதுவே என்கிறார்கள்.

ராமஜென்ம பூமி முக்தி யக்ஞ சமிதி என்ற இந்து அமைப்பின் செயலாளரான ஜஸ்டிஸ் தேவகி நந்தன் என்பவர், 'கஸாதி எனப்படும் 84 தூண்களைக்கொண்டு ராமர் கோயில் இருந்தது. இப்போது உள்ள மசூதியிலும் அதே மாதிரியான தூண்கள் உள்ளன' என்கிறார். 1853-ம் ஆண்டே ராமர் பிறந்த இடம் தொடர்பாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் நடந்து 75 பேர் கொல்லப்பட்டனர். 1857-ம் ஆண்டு இந்து சாமியார் ஒருவர், பாபர் மசூதி வளா கத்தில் ஒரு சிறு பகுதியில் ராமர் கோயில் அமைத்தார். அப்போதைய பிரிட்டிஷ் அரசு, இந்துக்களும் முஸ்லிம்களும் தனித்தனியே வழிபாடு நடத்துவதற்கு வசதியாக சுவர் ஒன்றைக் கட்டித் தந்தது. ஆனாலும், அமைதி இல்லை.

1949-ம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் அதிகாலைத் தொழுகைக்காக வந்தபோது ராமர், சீதை, லட்சுமணர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. அன்றைய பிரதமர் நேரு பதறிப்போனார்.

"அயோத்தியில் நடந்தவை என்னுடைய அமைதியைக் குலைத்துள்ளது. மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான முன்னுதாரணம் ஒன்று அங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது" - நேரு ஒரு தீர்க்கதரிசிதான் என்பதும் அவரின் பயம் நியாயம் நிறைந்தது என்பதையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் நிரூபித்தன.

வெறுமனே மதவாதிகள் மட்டுமே பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கவில்லை. பாபர் மசூதிப் பிரச் னையைத் தங்கள் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக நேருவுக்குப் பின் அமைந்த அரசுகளும் பயன்படுத்திக்கொண்டன என்பதுதான் சோகமானது. 1983-ம் ஆண்டு பாபர் மசூதி உள்ள இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற இயக்கத்தை, விஸ்வ இந்து பரிஷத் தொடங்கியது. இந்துக்களும் சென்று வழிபடுவதற்கு வசதியாக, பாபர் மசூதி கதவுகளைத் திறந்துவிடும்படி, பைஜாபாத் மாவட்ட நீதிபதி கட்டளையிட்டார். பாபர் மசூதி அருகே இந்து கோயில் கட்ட ராஜீவ் காந்தியின் அரசாங்கம் அனுமதி அளித்தது. பிறகு, நடந்த கலவரங்களில் சுமார் 500 பேர் இறந்தனர்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு பாபர் மசூதி அமைந்துள்ள இடத்தில் ராமர் கோயிலைக் கட்டியே தீருவது என்று விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பு தொடங்கிய முயற்சிகளின் முடிவுதான் கறுப்பு டிசம்பர் 6.

இந்து ஆதரவு அமைப்புகள் இதைக் கையில் எடுத்து ராமர் சிலையைப் பூஜை செய்து அதைக் கிராமங்கள் தோறும் ஊர்வலம் நடத்தியதும், இதற்காக ஒவ்வொரு இந்துவும் குறைந்தபட்சம் ரூ 1.25 தர வேண்டும் என்றதும், செங்கல் சேகரிப்பு நடத்தியதும், அத்வானி ரதம் விட்டதும், அதைப் பிரதமர் வி.பி.சிங் தடுத்ததால் அவரது ஆட்சியை பி.ஜே.பி. கவிழ்த்ததும், அனைவரும் அறிந்தவிஷயங்கள்.

அத்வானி ரத யாத்திரையை அறிவித்த செப்டம்பர் 1-ம் தேதிக்கும் நவம்பர் 20-க்கும் இடையிலான காலத்தில், இந்தியா முழுவதுமான 116 வகுப்புக் கலவரங்களில் இறந் தவர்களின் எண்ணிக்கை 564. அயோத்தி அமைந்திருக்கும் உத் திரப்பிரதேசத்தில் இறந்தவர்கள் மட்டும் 224 என்று சொல்கிறது ஒரு புள்ளிவிவரம்.

கிட்டத்தட்ட ஒரு உள்நாட்டு யுத்தத்துக்கான நெருக்கடியை இந்தியா சந்தித்தது. அதன் உச்சகட்டம்... அந்த டிசம்பர் 6. அன்றைய தினம் பகல் 12.15 மணிக்கு ராமர் கோயிலைக் கட்டும் பணிகள் தொடங்கும் என்று அறிவித்தார்கள். அதற்காக, விசுவ ஹிந்து பரிஷத், பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இயக்கங் களைச் சேர்ந்த இரண்டு லட்சத்துக் கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். அருகிலேயே பிரமாண்ட பொதுக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கூட்டத்தில் தலைவர்கள் பேசிக் கொண்டு இருந்தபோது, கூட்டத்தின் ஒரு பகுதியினர் 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழங்கியபடி, பாபர் மசூதி வளாகத்தை நோக்கிப் பாய்ந்து சென்றனர். போலீஸாரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டு களை வீசினார்கள். அதற்குப் பலன் இல்லை. பிறகு நடந்ததை நாடறியும்.

அன்று இந்தியாவின் மதச்சார் பின்மை இரண்டு மணி நேரத்தில் இடித்துத் தள்ளப்பட்டது!

அயோத்தியில் எரிந்த தீ, அடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரவியது. டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று ஒரே நாளில், 233 பேர் பலியானார்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 68 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. மத்திய அரசால் லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் மீது அந்த கமிஷன் குற்றம் சாட்டியது. ஆனால், அதன் மீது இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இந்த நிலையில்தான் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு! பிரச்னைக்கு உரிய சில ஏக்கர் நிலம் இந்துக்களுக்கு உரியதா, முஸ்லிம்களுக்கு உரியதா என்பதைத் தீர்ப்பு சொல்லட்டும். ஆனால், அன்பும் சகோதரத்துவமும் அமைதியும் நல்லிணக்கமும் இரு தரப்புக்கும் உரியது என்பதைக் காலம் சொல்லட்டும்!

இந்திய தேசத்தின் உள்நாட்டு அமைதியைக் காக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது ஏனென்றால், இந்தத் தேசம் நம் அத்தனை பேரின் சந்ததிக்கும் சொந்தமானது!

அயோத்தி... அலகாபாத்!
அயோத்தி... அலகாபாத்!