முதல் நாள் போட்டிகளில் சோம்தேவ், போபண்ணா ஆகிய இருவரும் பிரேசில் பிளேயர்களிடம் தோல்வியடைந்தனர். ஆனால், இரண்டா வது நாள் நடைபெற்ற இரட்டையர் பிரிவு போட்டி யில் பயஸ் - பூபதி இணை நேர் செட்டுகளில் பிரேசிலின் தாமஸ் பெலுச்சி, ரிகார்டோ மெலோ ஜோடியைத் தோற்கடித்தது. அந்த வெற்றி இந்திய அணிக்குள் புது ரத்தம் பாய்ச்ச, அடுத்த நாள் நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் சோம்தேவ், போபண்ணா இருவருமே ஆக்ரோஷ மாக விளையாடி வென்றனர். இதனால், இந்தியா 3-2 என்கிற கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது!
|