பன்றிக் காய்ச்சலைவிட, அதிவேகமாகப் பரவுகின்றன அதைப்பற்றிய பீதிகளும்
வதந்திகளும்!
சென்னை கிங் இன்ஸ்டிட்யூட் இணை இயக்குநரும் அதன் வைராலஜி துறைத் தலைவருமான மருத்துவர் குணசேகரனிடம் பன்றிக் காய்ச்சல் குறித்த சில விளக்கங்கள் கேட்டோம்...
"இன்ஃப்ளூயன்சா ஏ (Influenza A H1N1) என்ற வைரஸ்தான் இந்த பன்றிக் காய்ச்சல் நோயை உண்டாக்கும். போன வருடம் இந்த நோய் இந்தியாவில் பரவியபோது, முதல் சில மரணங்களிலேயே சுதாரித்து, அதன் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தோம். ஆனால், இந்த வருடம் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை இந்த நோய் தாக்கியதற்கான பதிவுகள் எங்குமே இல்லை. தன் இயல்பை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் reassortant வகையைச் சேர்ந்த வைரஸ்கள் என்பதால், 'எதற்கும் உஷாராக இருப்போம்' என்ற நோக்கத்தில்தான் தமிழக அரசிடம் எச்சரிக்கை ஒன்றை விடுக்கச் சொன்னோம்.
|