ஸ்பெஷல் -1
Published:Updated:

ஜெயிலில் ஜெனரல்!

ஜெயிலில் ஜெனரல்!


ஜெயிலில் 'ஜெனரல்'!
ஜெயிலில் ஜெனரல்!
ஜெயிலில் ஜெனரல்!
ப.திருமாவேலன்
ஜெயிலில் ஜெனரல்!

ரலாற்றுச் சக்கரம் சரத் ஃபொன்சேகா விஷயத்தில் மிகவும் வேகமாகச் சுழல்கிறது.

இலங்கை ராணுவ நீதிமன்றம் அந்நாட்டின் ஜெனரலாக இருந்த ஃபொன்சேகாவுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி இருக்கிறது.

'என்னைப் பொறுத்தவரையில், இந்த உலகத்திலேயே மிகத் திறமையான ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாதான்!' என்று கம்பீரமாக அறிவித்தவர் இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன். அமைதி தவழும் மேற்கு வங்க மாநிலத்தின் இப்போதைய கவர்னர் அவர். 'என்னுடைய லட்சியத்தை ஃபொன்சேகா சரியாக நிறைவேற்றிக் காட்டினார்' என்றார் ஜனாதிபதி ராஜபக்ஷே. 2009\ம் ஆண்டு மே மாதம் அதனை நிறைவேற்றியவர், அடுத்த இரண்டு மாதங்கள்கூட நிம்மதியாக இல்லை.

ஜெயிலில் ஜெனரல்!

ஐக்கிய தேசியக் கூட்டுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே அமைதியான பிறகு, சந்திரிகா குமாரதுங்கே வீட்டுச் சிறைபோல வைக்கப்பட்ட பிறகு, 'இனி, இலங்கையில் தன்னை எதிர்க்க எவரும் இல்லை' என்று ராஜபக்ஷே நினைத்தபோது, ஃபொன்சேகா கிளம் பியதை அவரால் தாங்க முடியவில்லை. காரணங்கள் தேடிக் கைது செய்தார். பலாத்காரத்துடன் இழுத்துச் செல்லப்பட்டார் ஃபொன்சேகா. குடும்பத்துக்குக்கூட தகவல் தரப்படவில்லை. ஃபொன்சேகா சாப்பிட மறுத்தார். வக்கீல்கூட பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று பல தகவல்கள்.

'ராணுவத்தில் இருந்துகொண்டே அரசியல் விஷயங் களில் தலையிட்டார்!' என்பது முதல் புகார். அவர் அதுவரை பெற்றிருந்த பதக்கங்கள், விருதுகள் பறிக் கப்பட்டன. 'ஜெனரல்' என்றும் இனி குறிப்பிடக் கூடாது. ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டார், ராணு வத்தில் இருந்து சென்றவர்களைத் தனது அரசியல் உள்நோக்கங்களுக்குப் பயன்படுத்தினார். தேசிய ரகசியங்களைக் கசியவிட்டார் ஆகிய மூன்று வழக்குகள் மீதான தீர்ப்புதான் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை.

இது சரத் ஃபொன்சேகா எதிர்பார்த்த தீர்ப்புதான். சில நாட்களுக்கு முன் இலங்கைப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'என் மீது விசாரணை நடத்தும் ராணுவ நீதிமன்றத்தைக் காட்டு நீதி மன்றம் என்றுதான் சொல்வேன். என் வக்கீல் எப்படி வாதாடினாலும், ஒன்றும் நடக்கப்போவது இல்லை. தீர்ப்பு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. இலங்கையில் இனி நியாயத்தை எதிர் பார்க்க முடியாது!' என்றார் விரக்தியாக.

'நான் ராணுவத் தளபதியாக இருந்தபோது முள்ளி வாய்க்கால் பகுதியில் புலிகளிடம் இருந்து 200 கிலோ தங்கம் கைப்பற்றினோம். அந்தத் தங்கம் இப்போது எங்கு இருக்கிறது? கே.பி-யிடம் உள்ள பெருந்தொகைப் பணத்தை அரசாங்கம் பறிக்க வேண்டும். போர்க் காலத்தில் ராணுவத்துக்கு உதவிய கருணா, பிள்ளையன் ஆகிய இருவரையும் ஓரங்கட்டிவிட்டு, போரின்போது உதவாத கே.பி-யை அரசு முன்னிலைப்படுத்துவது மடத்தனமானது!' -இது ஃபொன்சேகாவின் நாடாளுமன்றப் பேச்சுக் களில் ஒன்று. இவை ஜனாதிபதியை அதிகம் கோபப்படுத்தியதாம்.

இதற்குப் பதிலடியாக, ராஜபக்ஷேவின் அமைச்சர்கள், ஃபொன்சேகாவை திட்டித் தீர்க்கிறார்கள். 'பாலசிங்கம் பார்த்த வேலையை இப்போது ஃபொன்சேகா பார்க்கிறார்' என்கிறார் ஒருவர். 'ஃபொன்சேகாவை உயிரோடு புதைக்க வேண்டும்' என்கிறார் இன்னொருவர். 'புலிகள் இயக்கத்தின் மனித வெடிகுண்டுப் பெண் ஒருத்தி, ஃபொன்சேகாவின் காதலியாக இருந்தாள்' என்று ஒரு மந்திரி சொன்னதும் ஃபொன்சேகா சிரித்தபடியே இப்படிச் சொன்னாராம்... 'அது உண்மையானால்... நான் பெருமைப்படுகிறேன்!'

ஜெயிலில் ஜெனரல்!
ஜெயிலில் ஜெனரல்!