"சவப் பெட்டியில் இருக்கும் ஹீரோயின் உடல் திடீரெனக் கண் விழிக்கிறது. 'நான் இறக்கவில்லை' என்று அங்கு இருக்கும் மருத்துவரிடம் கூற, 'இறந்த பின் எல்லா ஆத்மாக் களும் இப்படித்தான் அடம்பிடிக்கும்' என்று ஊசி«பாட்டு மயங்கவைக்கிறார். காதலி இறந்ததைக் கேள்விப்பட்டு காதலன் ஓடி வருகிறான். ஆனால், அவனை உள்ளே விட மறுக்கின்றனர். கதவுக்கு வெளியே கேட்கும் காதலனின் குரல், பாதி மயக்கத்தில் இருக்கும் காதலிக்குக் கேட்கிறது. பிறகு, மருத்துவரை ஏமாற்றி காதலனுக்குப் போன் செய்து பேசுகிறாள். ஆனால், யாரோ விளையாடுவதாக நினைத்து இணைப்பைத் துண்டிக்கிறான். க்ளைமாக்ஸில் எவ்வளவு கெஞ்சியும் ஒரு மயக்க ஊசியைப் போட்டு சவப் பெட்டியில்வைத்து குழிக்குள் இறக்கி மண்ணைத் தள்ள ஆரம்பிக்கின்றனர். எல்லோரும் சென்றபின் நள்ளிரவில் கல்லறைக்கு வரும் காதலன் பதற்றத்துடன் தோண்ட ஆரம்பிக்கிறான். உள்ளே ஹீரோயின் பெட்டியைத் தட்டிக்கொண்டு இருக்கிறாள். பெட்டியைத் திறந்ததும் இருவரும் முத்தமிட்டுக் கொள்கின்றனர். ஒரு ஃப்ளாஷ§க்குப் பிறகு, மேஜை மீது படுத்திருந்த ஹீரோ திடீரெனக் கண் விழித்து 'நான் எங்கிருக்கிறேன்?' என்று கேட்க, அதே பழைய மருத்துவர், 'நான்கு மணி நேரத்துக்கு முன்பு உன் காதலியைப் பார்க்க அதிவேகமாக காரை ஓட்டி வந்தபோது விபத்துக்கு உள்ளாகி இறந்துவிட்டாய். இதோ உன் டெத் சர்ட்டிஃபிகேட்!' என்கிறார். காதலன், 'நோ... நான் சாகவில்லை. நான் உயிரோடுதான் இருக்கிறேன்' என்று கத்த, படம் முடிவடைகிறது. 'After Life' என்ற இந்தப் படம் சமீபத்தில் பார்த்ததிலேயே என்னை மிகவும் பாதித்தது!"
|