நெகிழ்ச்சியூட்டிய நிகழ்வு இது. கடந்த 17-ம் தேதி வயலின் மேதை லால்குடி ஜெயராமனுக்கு 80-வது பிறந்த நாள். சீனியர் மாணவர்களான பாம்பே ஜெயஸ்ரீ, எஸ்.பி.ராம், விட்டல் ராமமூர்த்தி, சங்கரி கிருஷ்ணன், பத்மா சங்கர் துவங்கி வாரிசுகளான லால்குடி கிருஷ்ணன், விஜயலட்சுமி உட்பட 34 பேர் அடங்கிய சிஷ்யர் குழு, அவர் வீட்டு வாசலில் சர்ப்ரைஸாகத் திரண்டது. அவர்களிடம் இருந்து பூங்கொத்தைப் பெற்றுக்கொண்ட லால்குடியின் கண்கள் கலங்கிவிட்டன. பிறந்த நாள் கேக் வெட்டி, குரு 100 வயதுக்கு மேல் வாழ பல்லாண்டு பாடினார்கள் அனைவரும். குருவே சரணம்!
|