ஸ்பெஷல் -1
Published:Updated:

வீட்ல விசேஷங்க!

வீட்ல விசேஷங்க!


வீட்ல விசேஷங்க!
வீட்ல விசேஷங்க!
வீட்ல விசேஷங்க!
இர.ப்ரீத்தி
படம்:பொன்.காசிராஜன்
வீட்ல விசேஷங்க!

'வீட்ல என்னங்க விசேஷம்?' என்று சின்னத்திரை நட்சத்திரங்களிடம் விசாரித்தோம்...

வீட்ல விசேஷங்க!

'வசந்தம்' ஷமீதா: "எனக்கும் ஸ்ரீக்கும் காதல் கல்யாணம். இப்போ எங்க காதலுக்குப் பரிசா பிறந்த தேவதைக்கு 'ரெய்னா'ன்னு பேர் வெச்சிருக்கோம். 'ரெய்னா'ன்னா தூய்மைன்னு அர்த்தம். எங்க வீட்டு வழக்கப்படி, குழந்தைக்கு குலதெய்வக் கோயில்ல மொட்டை போட்டுக் காது குத்துவோம். ஆனா, ஸ்ரீ ஒரு கிறிஸ்டியன். அதனால், பாப்பாவுக்கு வீட்டிலேயே மொட்டை போட்டுக் காது குத்தினோம். இதுக்கான எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செஞ்சார் ஸ்ரீ. பரஸ்பரம் விட்டுக்கொடுத்து, சடங்குகளைச் சந்தோஷமா கொண்டாடினப்போ, எனக்கு ஸ்ரீகிட்ட ஒண்ணு சொல்லணும்னு தோணுச்சு... 'ஐ லவ் யூ ஸ்ரீ'!"

வீட்ல விசேஷங்க!

ஜெயா டி.வி. ஷில்பா: "நான் முதன்முதலா ஜெ.ஜெ. டி.வி-யில் தான் காம்பியரிங் பண்ண ஆரம்பிச்சேன். அது ஜெயா டி.வி. ஆன பிறகும் தொடர்ந்து காம்பியரிங் பண்ணிட்டு இருந்தேன். இப்ப கொஞ்ச நாளா மாடலிங்கில் கவனம் செலுத்தத் துவங்கி யதும், காம்பியரிங்கை சுத்தமா கண்டுக்கவே இல்லை. திடீர்னு 'உன் வாசம் என் நேசம்'னுபுது நிகழ்ச்சி பண்றோம். நீதான் காம்பியரிங் பண்ணணும்'னு ஜெயா டி.வி-யில் இருந்து அழைப்பு. கணவன் - மனைவிக்கு இடையிலான விருப்பு, வெறுப்புகளை அலசி ஆராயும் நிகழ்ச்சி. உடனே ஓ.கே. சொல்லிட்டேன். 'ஐயம் பேக்'னு சீக்கிரமே ஸ்க்ரீன்ல மீட் பண்றேன்... அது வரை ஷார்ட் கமர்ஷியல் பிரேக்!"

வீட்ல விசேஷங்க!

'திருமதி செல்வம்' அபர்ணா: "என் அக்காவுக்கும் எனக்கும் 10 வயசு வித்தியாசம். நான் ஸ்கூல் படிக்கும்போதே, அவ கல்யாணம் முடிச்சு பெங்களூரில் செட்டில் ஆகிட்டா. அவ பையன் பேரு கௌரவ். ஒன்பது வயசு. அவனோட பிறந்த நாளைக் கொண்டாடிட்டு இப்போதான் பெங்களூரில் இருந்து வர்றேன். எங்க வீட்டுக்கே முதல் பேரன்கிறதால எல்லோருக்கும் கௌரவ் ரொம்ப செல்லம். 'ஹாட் வீல் பொம்மை வாங்கிட்டு வா. இந்தக் கடையில இன்ன விலை சொல்வாங்க!'ன்னு எல்லா தகவலும் பக்காவா சொல்றான். இந்தக் காலத்துப் பசங்க எவ்வளவு விவரமா இருக்காங்க பாருங்க!"

 

வீட்ல விசேஷங்க!

சன் மியூஸிக் அனிஷா: "இப்போதான் 20 நாள் ஆகுது எனக்கும் சக்தி முருகனுக்கும் கல்யாணம் முடிஞ்சு. பக்கா அரேஞ்டு மேரேஜ். ஆனா, எங்களைப் பார்க்கிற எல்லோருமே, 'லவ் மேரேஜா... எத்தனை வருஷம் காதலிச்சீங்க?'ன்னு கேட்கிறாங்க. அவ்ளோ பிரியமா, அந்நியோன்யமா இருக்கார். ஒவ்வொரு நாளும், 'இவரை இன்னும் முன்னாடியே பார்த்திருந்தா நல்லா இருந்திருக்குமே'ன்னு தோணுது. முன்னாடி நிச்சயதார்த்தம் நடந்தப்போ, 'கல்யாணம் வரைக்கும் இதைக் கட்டிப் பிடிச்சுத் தூங்கு'ன்னு ஒரு டெடிபியர் வாங்கிக் கொடுத்தார். கல்யாணமான பின்னாடியும் நான் டெடியைக் கட்டிப் பிடிச்சுத் தூங்கிட்டே இருந்தேன். பார்ட்டி செம கடுப்பாகி, அதை எங்கேயோ ஒளிச்சுவெச்சுட்டார். தேடிட்டே இருக்கேன்!"

வீட்ல விசேஷங்க!

'திருமதி செல்வம்' அபிதா: "நாலு மாசம் முன்னாடிதான் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தாள். கடவுள் தந்த பரிசு. நீங்கதான் அவளை முதல்ல போட்டோ எடுக்கிறீங்க. ' 'அ' எழுத்தில் ஆரம்பிக்கிற மாதிரி பேர் வைங்க. வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் முதல் ஆளா வருவா'ன்னு சொன்னாங்க. 'அல்சா'ன்னு பேர் வெச்சிருக்கோம். முன்னாடி எல்லாம் என் கணவர் சுனில் இல்லைன்னா, வெறுமையா இருக்கும். இப்போ அந்த இடத்தை அல்சா நிரப்பிட்டா. ஷூட்டிங் முடிஞ்ச தும் அல்சாவைப் பார்த் தாகணும். என்னைப் பார்த்த உடனே அல்சா சின்னதா சிரிப்பா பாருங்க... அதுதான் சொர்க்கம்!"

வீட்ல விசேஷங்க!

'மகான்' சான்ட்ரா: "இந்த மாசம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ரெண்டு காரணம். போன வாரம், என் கணவர் ப்ரஜின் பிறந்த நாள். ராத்திரி 12 மணிக்கு சர்ப்ரைஸா கேக் கட் பண்ணவெச்சேன். சார் ரொம்பவே நெகிழ்ந்துட்டார். ரெண்டாவது காரணம், அவர் நடிச்ச 'த்ரில்லர்' மலையாளப் படம் சீக்கிரமே ரிலீஸ் ஆகப்போகுது. கதை முழுக்க இவரைச் சுத்தியே வரும். ப்ரஜினுக்கு நல்ல பேர் கிடைக்கும்னு இப்பவே மனசுக்குள்ள ஒரு குரல். இன்னொரு விசேஷத்துக்குக் காத்துட்டு இருக்கேன்!"

வீட்ல விசேஷங்க!
வீட்ல விசேஷங்க!