"ஸ்கூல் படிக்கிறப்பவே டி.வி-யில் முகம் காட்ட ஆரம்பிச்சுட்டேன். அப்பவே
பசங்கள்லாம் பந்தா பார்ட்டின்னு கலாய்ப்பாங்க. இதோ காலேஜும் சேர்ந்துட்டேன். ஷூட்டிங், செமஸ்டர், கல்ச்சுரல்னு மாத்தி மாத்தி நான் பரபரப்பா ஓடிட்டே இருக்குறதைப் பார்த்த சில லெக்சரர்ஸ், 'திமிர் பிடிச்ச பொண்ணு'னு என்னை நினைச்சுட்டாங்கபோல. நாம யாரு... விடுவோமா? எக்ஸாமுக்கு பக்காவ படிச்சு மார்க் வாங்கி 'நல்ல பிள்ளை' லிஸ்ட்ல சேர்ந்துட்டோம்ல.
இப்போலாம் 'சீரியல்ல நீ கட்டிட்டு வர்ற புடவை ரொம்ப அழகு... எங்கே கிடைக்கும்'னு விசாரிக்குற அளவுக்கு எல்லா லெக்சரர்ஸையும் 'நண்பேன்டா' ஆக்கிட்டோம்ல!" பட்டாம்பூச்சி கண்களால் படபடக்கிறார் ஐஸ்வர்யா. சீரியல் நடிப்பு, காம்பியரிங் சிரிப்பு, பரதநாட்டிய துடிப்பு, துறுதுறு படிப்பு... மீட் மிஸ் ஐஸ்வர்யா, விஸ்காம் செகண்ட் இயர்.
|