ஸ்பெஷல் -1
Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!


நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
சி.எம்.ஸீட் கூட்டணி!
நானே கேள்வி... நானே பதில்!

"பொதுக் கூட்டத்துக்கு வரும் மக்கள்வெள்ளத் தைப் பார்த்து தலைவர்கள்

புல்லரிப்பது சரி தானா?"

"அவர்களுக்கு முன்னாள் இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் சொன்னதை நினைவுபடுத்தலாம். ஒருமுறை அவரது கட்சிக்காரர்கள், 'உங்கள் கூட்டத்துக்கு இவ்வளவு மக்கள் வருகிறார்களே, இங்கிலாந்திலேயே மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே தலைவர் நீங்கள்தான்' என்று ஏகத்துக்கும் புகழ்ந்தபோது, சர்ச்சில் சொன்னாராம், 'நாளை இதே இடத்தில் என்னைத் தூக்கில் போடுவதாக அறிவித்தால், வேடிக்கை பார்க்க இதைவிட அதிக கூட்டம் கூடும்' என்று!"

- மங்கையர்க்கரசி, சென்னை-78.

"சமீபத்தில் கேட்டு ரசித்த பேச்சு?"

" 'கீற்று' இணையதளம் நடத்திய கூட்டம் ஒன்றில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் இப்படிச் சொன்னார், 'மனிதனுக்கு ஆறறிவு இருப்பதாக நாம்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். இன்னும் ஒரு நாய்கூட அதை அங்கீரிக்கவில்லை!' "

- என்.தீபா, விழுப்புரம்.

" 'மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது' என்கிறாரே பிரதமர் மன்மோகன் சிங். நீதிமன்றங்கள் தலைஇடாத அளவுக்கு அப்படி என்னதான் 'கொள்கை முடிவு' எடுக்கிறார்கள்?"

"எல்லோருக்கும் உணவு என்பது மத்திய அரசின் 'கொள்கை'. ஆனால், அதைச் சரியாக விநியோகம் செய்யாமல், சேமிப்புக் கிடங்குகளில் எலிகளுக் கும் பூச்சிகளுக்கும் உணவாக்குவது 'முடிவு'. ஓ.கே?"

- சு.கு.மணியன், தூத்துக்குடி.

" 'சட்டம் தன் கடமையைச் செய்யும்' என்று அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்கிறார்களே, அப்படி என்னதான் கடமையைச் செய்யும்?"

"அதுவா, குற்றம் நடந்தால் போய் விசாரிக்கும். அரசியல் தலையீடு ஏதாவது இருந்தால், தலைதெறிக்க ஓடிவிடும்!

- வி.எஸ்.சதீஷ், வேலூர்.

நானே கேள்வி... நானே பதில்!

" '30, 40 ஸீட்டுகளுக்காக நான் கட்சி நடத்தவில்லை' என்கிறாரே விஜயகாந்த்?"

"ஓஹோ! ஒரே ஒரு ஸீட், அதுவும் சி.எம் ஸீட்தான் என்கிறாரோ?"

- கே.சஞ்சீவிபாரதி, ஈரோடு.

"கவிஞர்கள் விநோதமானவர்களா?"

"நிச்சயமாக. மௌலானா ஜாமீன் என்று ஒரு பாரசீகக் கவிஞர். தான் வீட்டில் இருக்கும் நேரங்களில் வீட்டுக் கதவை மூடி உள்பக்கம் தாளிட்டுக்கொள்வார். வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டால், கதவைப் பூட்டாமல் திறந்தபடி வைத்துவிட்டுச் செல்வார். அவரது நண்பர் ஒருவர் நீண்ட நாட்களாகப் பொறுத்துப் பார்த்து, மௌலானாவிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு மௌலானா சொன்னார், 'மிகவும் விலை உயர்ந்த பொருளாக என்னைத்தான் நினைக்கிறேன். அதனால்தான் விலை உயர்ந்த பொருள் வீட்டில் இருக்கும்போது கதவைத் தாளிட்டு பாதுகாப்பு செய் கி றேன். நான் வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது விலை உயர்ந்த பொருள் எதுவும் வீட்டில் இல்லை. அதனால்தான் வீட்டைத் திறந்து போட்டுச் செல்கிறேன்!"

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!